India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கேரளாவின் மருத்துவ கழிவுகளை மேலாண்மை செய்வதில் மாநில அரசு தவறிவிட்டதாக அம்மாநில உயர்நீதிமன்றம் கடுமையாக கண்டித்துள்ளது. கழிவுகளை திருநெல்வேலியில் சட்டவிரோதமாக கொட்டியது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யுமாறு கேரள உயர்நீதிமன்ற நீதிபதி பெச்சு குரியன் தாமஸ் தலைமையிலான டிவிசன் பெஞ்ச் அரசுக்கு இன்று உத்தரவிட்டுள்ளது.
நெல்லை மாவட்ட காவல்துறை இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில் தொலைபேசி மூலம் அறிமுகமில்லாத நபர் உங்களை தொடர்பு கொண்டு தெரியாமல் உங்களுக்கு பணத்தை மாற்றி அனுப்பிவிட்டதாக கூறுவார்கள். அந்த நபர் கூறிய தொகை உங்கள் வங்கி கணக்கிற்க்கு வரவு வைக்கப்பட்டது போல் குறுஞ்செய்தி (SMS) ஒன்று வரும் என கூறி பணத்தை மொத்தமாக மோசடி செய்து விடுவார்கள்.எனவே இது போன்று SMS வந்தால் தவிர்க்க வேண்டும் என கூறியுள்ளனர்.
நெல்லை மாவட்ட அளவில் வட்டார கல்வி அலுவலர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு வருகிற 26ஆம் தேதி காலை 10 மணி முதல் நடத்த கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. எமிஸ் இணையதளம் ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடத்தப்படும் இதற்கான முன்னுரிமை நபர்கள் விவரம் பட்டியலாக தயாரிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்கள் கலந்தாய்வில் பங்கேற்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கிறிஸ்துமஸ் பண்டிகை முன்னிட்டு நாளை(டிச.24) தாம்பரத்தில் இருந்து நள்ளிரவு 12.35 மணிக்கு சிறப்பு ரயில் புறப்படுகிறது. இந்த ரயில் மறுநாள் காலை 10:30 மணிக்கு நெல்லைக்கும், 11.10 மணிக்கு வள்ளியூருக்கும் வந்து சேரும். தொடர்ந்து இந்த ரயில் கன்னியாகுமரி வரை இயக்கப்படுகிறது. விடுமுறை கொண்டாட்டத்திற்கு செல்பவர்கள் இந்த ரயிலை முன்பதிவு செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
தாம்பரத்திலிருந்து நெல்லை வழியாக செல்லும் கன்னியாகுமாரி வரை செல்லும் சிறப்பு ரயில் வ.எண்-06039, நாளை(டிச.24) தாம்பரத்திலிருந்து நள்ளிரவு 12.35 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.30க்கு நெல்லை வந்து சேரும். இந்த ரயிலுக்கான முன்பதிவு நடைபெற்று வருகிறது. இந்த ரயில் செங்கல்பட்டு, விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
திருநெல்வேலி மாவட்டத்தில் பெரும்பாலான பதிவுகளை போலீசார் கண்காணிப்பதோ கண்டு கொள்வதோ கிடையாது என்று இன்றைய (டிச.22) நாளிதழ் ஒன்றில் வெளியான செய்திக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன் வெளியிட்டுள்ள மறுப்பு செய்தியில், மாவட்ட காவல்துறை சமூக வலைதளங்களை உன்னிப்பாக கண்காணித்து தவறான பதிவுகளை பதிவு செய்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்.
திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் உத்தரவின்படி இரவு நேர பொதுமக்களின் உதவிக்காக இன்று (டிச.22) இரவு ரோந்து காவலர்கள் நியமனம் செய்யப்பட்டு அவர்களின் தொடர்பு எண், பெயர் உள்ளிட்ட விபரங்கள் அடங்கிய அட்டவணையை வெளியிட்டுள்ளனர். இரவு நேர உதவிக்கு பொதுமக்கள் இந்த காவலர்களை பயன்படுத்திக் கொள்ள மாவட்ட காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
நெல்லையில் நேற்று முன்தினம் நீதிமன்றம் முன்பு மாயாண்டி என்பவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். நீதிமன்றம் முன்பு நடைபெற்ற இந்த கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தமிழகம் முழுவதும் கோர்ட்டுகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட டிஜிபி சங்கர் ஜிவால் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நெல்லையில் அடுத்தடுத்து கொலை அரங்கேறி வரும் நிலையில், சமூக வலைத்தளங்களில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் ஜாதி பெயரோடு வீடியோ பதிவேற்றம் செய்தால் சட்டப்படி கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நெல்லை மாவட்ட எஸ்பி சிலம்பரசன் எச்சரித்துள்ளார். போலீசார் அனைத்து வகையான சமூக வலைத்தளங்களையும் கவனமாக கண்காணித்து வருவதாக இன்று வெளியான செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
நாளை(டிச.23) காலை 9 மணி அளவில் மணிமுத்தாறு அணையில் இருந்து பிசான பருவ சாகுபடிக்கு தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத்தலைவர் மு.அப்பாவு, நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு ஆகியோர் மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் கா.ப. கார்த்திகேயன், நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் மணிமுத்தாறு அணை திறக்கப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.