India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரத்தை சேர்ந்த 14வயது மாணவர் தனியார் பள்ளி ஒன்றில் 9ஆம் வகுப்பு படித்து வந்தார். நேற்று(ஜன.6) இரவில் மாணவரின் தாய் வெளியே சென்ற நிலையில் வீட்டில் தனியாக இருந்த மாணவர் திடீரென தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரது தாயார் திரும்பி வந்து பார்த்தபோது மாணவர் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து சந்திப்பு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் சலவைக்கு போடப்பட்ட பேண்டில் இருந்த 64 ஆயிரம் ரூபாயை சலவை தொழிலாளி உரிமையாளரிடம் ஒப்படைத்த சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள் மறதியால் இது போன்று பணம் மற்றும் விலை உயர்ந்தப் பொருட்களை துணியில் வைத்து விடுகின்றனர். எனக்கு அந்த பொருட்கள் மீது ஆசை இல்லை. ஏன்னென்றால் அவை உரிமையாளருக்கு சொந்தமானது எனக் கூறிய சலவை தொழிலாளிக்கு பாராட்டு.
நெல்லை மாவட்டத்தில் சைபர் கிரைம் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்களின் வங்கி கணக்குகளில் இருந்து ரூ.7 கோடி வரை முடக்கி வைக்கப்பட்டதாக மாவட்ட எஸ்பி சிலம்பரசன் இன்று தெரிவித்துள்ளார். சமீபகாலமாக மொபைல் செயலிகள் மூலமாகவும் சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் சைபர் குற்றங்கள் அதிகரித்துள்ளது. இதுபோன்ற சூழலில் மாவட்ட காவல்துறையின் இந்த நடவடிக்கை மக்களுக்கு ஆறுதலை தந்துள்ளது.
நெல்லை மாவட்ட போலீஸ் எஸ்பி சிலம்பரசன் இன்று ஜன 6)கூறியதாவது, நெல்லை மாவட்டத்தில் கடந்த ஆண்டில் நடக்கவிருந்த 17 கொலைகள் காவல்துறையினர் துரித மற்றும் முன்னெச்சரிக்கைகளால் தடுக்கப்பட்டுள்ளது. 85 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.கடந்த,ஆண்டில் மட்டும் 10 ஆண்டுக்கு மேல் தலைமறைவாக இருந்த நபர்கள் உட்பட 2249 பிடியாணைகள் மீது நடவடிக்கை மேற்கொண்டு எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் ஆர்என். ரவி தனது உரையை புறக்கணித்து சென்றார். எனவே பல்வேறு அரசியல் தலைவர்கள் ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் ஆளுநரையும் கள்ளக்கூட்டணி வைத்திருப்பதாக அதிமுக பாஜக கட்சிகளை கண்டித்தும் நெல்லை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் நாளை(ஜன.6) வண்ணாரப்பேட்டையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் இன்று அறிவித்துள்ளார்.
நெல்லை மாவட்ட போலீஸ் எஸ்பி சிலம்பரசன் இன்று (ஜன 6) கூறியதாவது, நெல்லை மாவட்டத்தில் கடந்த ஆண்டு 13 கொலை வழக்குகளில் 23 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கொலை முயற்சி வழக்கில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் ஆறு குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இரண்டு கொள்ளை வழக்குகளிலும் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது என அவர் கூறினார்.
கொலை முயற்சி வழக்கில் 6 பேருக்கு ஆயுள் தண்டனை பெற்றுக் கொடுத்துள்ளதாகவும்,கொலை வழக்குகளில் 106 எதிரிகள் கைது செய்யப்பட்டு 69 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், 2024-ல்ஜாதி ரீதியான கொலைகள் எதுவும் நடக்கவில்லை என்றும்,17 கொலைகள் காவல்துறையினரின் துரித நடவடிக்கையால் தடுக்கப்பட்டுள்ளதாகவும் காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் இன்று (ஜன.06) தெரிவித்தார்.
நெல்லை மாவட்டத்தில் அதிக வாக்காளர்கள் உள்ள தொகுதியாக நெல்லை சட்டமன்ற தொகுதி உள்ளது. இங்கு 3 லட்சத்து 2715 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் பெண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 616 பேர் ஆண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 16 பேர் இதர வாக்காளர்கள் 83 பேர் உள்ளனர் என கலெக்டர் கார்த்திகேயன் இன்று தெரிவித்தார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் மொத்தம் 1490 வாக்குச்சாவடிகள் உள்ளதாக இன்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நெல்லை தொகுதியில் 311 வாக்குச்சாவடிகள், அம்பாசமுத்திரத்தில் 294 வாக்குச்சாவடிகள் உள்ளன. பாளையங்கோட்டை தொகுதியில் 270 வாக்குச்சாவடிகளும், நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் 306 வாக்குச்சாவடிகளும், ராதாபுரத்தில் 309 வாக்குச்சாவடிகளும் இடம் பெற்றுள்ளன.
தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் உத்தரவின்படி அனைத்து பள்ளிகளிலும் பள்ளிகளின் கல்வி செயல்பாடுகள், மாணவர்களின் சிறப்பு அம்சங்கள் எடுத்துரைத்து பள்ளி ஆண்டு விழா நடத்திட வேண்டும் என 14 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத் பள்ளிகளில் இந்த விழா நடத்த அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார் தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.