Tiruchirappalli

News November 22, 2024

தென்னை மர பயிருக்கு காப்பீட்டு தொகை பெற ஆட்சியர் அழைப்பு

image

தென்னை பயிர் இயற்கை சீற்றங்களால் முழுமையாக பாதிக்கப்பட்டு முற்றிலும் பலன் கொடுக்காத விவசாயிகள் தென்னை மரப் பயிருக்கு அரசால் அனுமதிக்கப்பட்ட காப்பீட்டுத் தொகை வசதியினை பயன்படுத்திக் கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. விவசாயிகள் சாகுபடி செய்துள்ள மரங்களின் எண்ணிக்கை, வயது, பராமரிப்பு மற்றும் முறை பற்றி தோட்டக்கலை அலுவலகத்தில் தகவல் வேண்டும் என மாவட்ட ஆட்சியர் இன்று தெரிவித்தார்.

News November 22, 2024

திருச்சி மாவட்ட விவசாயிகளுக்கு ஆட்சியர் தகவல்

image

திருச்சியில் 2024-ராபி சிறப்பு பருவத்தில் வெங்காயம் சாகுபடி செய்யும் விவசாயிகள் மணச்சநல்லூர், முசிறி, புள்ளம்பாடி, தா.பேட்டை, தொட்டியம், துறையூர் உப்பிலியபுரம் வட்டாரங்களில் பயிர் காப்பீட்டிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள கிராமங்களில் பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம். ஏக்கருக்கு ரூ.2063 தொகையினை செலுத்தி பதிவு செய்திட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

News November 22, 2024

திருச்சியில் மீண்டும் ராக்கெட் லாஞ்சர் கண்டெடுப்பு

image

திருச்சி அருகே அந்தநல்லூர் சிவன் கோவில் படித்துறையில் கடந்த அக்.30-ஆம் தேதி ராக்கெட் லாஞ்சர் ஒன்று கண்டெடுக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் திருச்சி ஜீயபுரத்தில் இன்று (நவ.22) மீண்டும் ஒருமுறை ராக்கெட் லாஞ்சர் கண்டெடுக்கப்பட்டுள்ளது அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆற்றில் மீன்பிடிக்க வலையை வீசிய போது அதில் மீன்களுக்கு பதிலாக ராக்கெட் சிக்கியுள்ளது.

News November 22, 2024

திருச்சி: தந்தை பெரியார் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

image

2024-ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது வழங்குவதற்கு உரிய நபரை தேர்ந்தெடுக்க பரிந்துரைகள் வரவேற்கப்படுவதாக ஆட்சியர் அறிவித்துள்ளார். பொது மக்களின் தரத்தினை மேம்படுத்த பாடுபட்ட சாதனையாளர்கள் தங்களது விண்ணப்பத்தை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைக்கலாம் என்றும், அதில் தங்களது சுய விவரம், முகவரி, தொலைபேசி எண் உள்ளிட்ட அனைத்தும் இணைக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

News November 22, 2024

திருச்சி: தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்; 5 பேர் கைது

image

திருச்சி சஞ்சீவி நகரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் குணசேகரன் (34). இவர் மனைவி (சுலோச்சனா) மற்றும் தாயாரிடம் (காமாட்சி) மதுபோதையில் தினந்தோறும் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த குணசேகரனின் தாய், மனைவி ஆகியோர் 2 திருநங்கைகள் உட்பட 3 பேர் உதவியுடன் குணசேகரனின் கழுத்தை நெரித்தும், உடலில் காலி ஊசியை செலுத்தியும் கொலை செய்துள்ளனர். இதையறிந்த கோட்டை போலீசார் கொலையாளிகள் 5 பேரை கைது செய்தனர்.

News November 22, 2024

திருச்சி: ஓய்வூதியர்களுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

திருச்சி மாவட்டத்தை சேர்ந்த அரசு அலுவலகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கான குறைதீர்க்கும் கூட்டம் வரும் டிசம்பர் மாதம் 12ஆம் தேதி நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் இன்று அறிவித்துள்ளார். மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டு அரங்கில் நடைபெற உள்ள இந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் ஓய்வூதியர்கள் தங்களது குறைபாடுகளை குறிப்பிட்டு வரும் 28 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

News November 22, 2024

ராகுல் காந்தியின் குமுறல் தற்போது புரிந்து இருக்கும்: எம்எல்ஏ

image

திருச்சி கிழக்கு எம்எல்ஏ இனிகோ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்காவின் ஹின்டன் பர்க் அறிக்கையால் அதானி மீது மோசடியில் ஈடுபடுதல் குற்றச்சாட்டுகளை அமெரிக்கா மீண்டும் முன் வைத்திருப்பது சர்வதேச அளவில் மிகப்பெரும் புயலை கிளப்பி இருக்கிறது. இதனால் தான் ராகுல் காந்தி பலமுறை அதானிக்கு எதிராக குரல் எழுப்பி இருக்கிறார். அதன் அர்த்தம் தற்போது அனைவருக்கும் புரிந்திருக்கும் என தெரிவித்துள்ளார்.

News November 22, 2024

லாரி டிரைவர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீச்சு

image

கருமண்டபத்தை சேர்ந்த சோலை பாண்டியன் லாரி டிரைவராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மல்லிகா, மகன் சுரேஷ்குமார். இவர்கள் 3 பேரும் நேற்று வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். நள்ளிரவு 12 மணிஅளவில் பயங்கர வெடி சத்தம் கேட்டது. உடனே, எழுந்து பார்த்தபோது அவரது அறையில் நாட்டுவெடிகுண்டு வீசி ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து ஜன்னல் திரை எரிந்து கிடந்தது. உடனே, கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் அவர்கள் புகார் அளித்தனர்.

News November 22, 2024

துறையூரில் நாளை துணை முதல்வர் திறப்பு

image

துறையூரில் நவம்பர் 23ஆம் தேதி சனிக்கிழமை அன்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துறையூர் பகுதியில் பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திறந்து வைக்கிறார். இதற்கான முன்னேற்பாடுகளை இன்று அமைச்சர் கே.என்.நேரு நேரில் சென்று ஆய்வு செய்தார். இதில் துறையூர் எம்.எல்.ஏ. மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

News November 22, 2024

திருச்சி மாவட்டம் சாதனை

image

காற்று மாசு மிகவும் குறைந்த நகரமாக தமிழ்நாட்டிலேயே திருச்சிராப்பள்ளி உள்ளது. தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வில் காற்று மாசு மிகவும் குறைந்த நகரமாக 20 ஏ.கே.யூ.ஐ. பாயிண்டில் திருச்சிராப்பள்ளி உள்ளது. திருச்சிராப்பள்ளி மாவட்டத்தை சுற்றிலும் இயற்கை வளம் மிகுதியாக காணப்படுகிறது. இயற்கை ஆர்வலர்களும் அதிகமாக உள்ளனர். விவசாயம் அதிக அளவில் நடைபெறுகிறது. இதுவே தூய்மையான காற்றுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

error: Content is protected !!