India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருச்சி அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் மோகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பின்படி, வரும் 15ஆம் தேதி முதல் ஜனவரி 16ஆம் தேதி வரை நாள்தோறும் இரவு 9 மணிக்கு திருச்சியில் இருந்து திண்டுக்கல் தேனி வழியாக சபரிமலைக்கு அதிநவீன சொகுசு மிதிவண்டிப் பேருந்து இயக்கப்பட உள்ளது. 60 நாட்களுக்கு முன் இந்த பேருந்துகளுக்கு www.tnstc.in ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி கி.ஆ.பெ. விஸ்வநாதன் கல்லூரி மற்றும் மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை வளாகத்தில் வரும் 20ம் தேதி புதன்கிழமை தொடக்கநிலை இடையீட்டு சேவை மையத்தில் காது கேட்காத வாய் பேச முடியாத குழந்தைகளை கண்டறியும் ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த முகாமில் காது கேட்க வாய் பேச முடியாத குழந்தைகள் பங்கேற்கலாம் என ஆட்சியர் இன்று அறிவித்துள்ளார்.
வேளாண் அறிவியல் நிலையத்திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜா பாபு நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் நெற்பயிரில் மகசூல் அதிகரிப்பது தொடர்பாக விவசாயிகளுக்கு பயிற்சி வகுப்பு வரும் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது என தெரிவித்துள்ளார். சிறுகமணியில் உள்ள வேளாண்மை அறிவியல் நிலையத்தில் நடைபெற உள்ள இந்த ஒரு நாள் பயிற்சியில் விவசாயிகள் 9865542358 என்ற எண்ணில் முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாமக்கலை சேர்ந்த பிரதீஷா, நிதிஷா, தங்கள் தோழி டயானா உடன் நேற்று திருச்சிக்கு மொபட்டில் வந்துவிட்டு மீண்டும் திரும்பிய போது பாரதிபுரம் என்ற இடத்தில் சாலையோர தடுப்புச் சுவரில் வாகனம் மோதி வாய்க்காலில் கவிழ்ந்தது. இதில் நிதிஷா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற இருவரையும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் டயானா உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
திருச்சியை சேர்ந்த கல்லூரி மாணவர் உசேன். இவர் தனது நண்பர்களுடன் துவரங்குறிச்சி அடுத்த டெப்போ அருகே டூவீலரில் வந்த போது அவ்வழியே சென்ற டூவிலர் மோதியதில் உசேனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உசேனை அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவர் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இதையறிந்த துவரங்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
மருங்காபுரி அடுத்த கை.மேட்டுப்பட்டியைச் சேர்ந்த வெங்கட்ராமன் 2018ஆம் ஆண்டு முதல், 19 வயதுள்ள பெண்ணிடம் திருமணம் செய்து கொள்ள வலியுறுத்தி, பாலியல் தொந்தரவு செய்து, அதனை வீடியோ எடுத்து மிரட்டல் விடுத்துள்ளார். மணப்பாறை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஜெயா புகாரின் பேரில் அவரை நேற்று போலீசார் கைது செய்து, குற்றவியல் மகிளா நீதிமன்ற நடுவரிடம் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
பிரசித்தி பெற்ற திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியலில் 15 நாளில் பக்தர்கள் செலுத்திய காணிக்கைகளை எண்ணியதில் 84 லட்சத்து 75 ஆயிரத்து 052 ரூபாய் ரொக்கமும், 2 கிலோ 222 கிராம் தங்கமும், 2 கிலோ 680 கிராம் வெள்ளியும், 215 அயல் நாட்டு நோட்டுகள், 538 அயல் நாட்டு நாணயங்கள் காணிக்கைகள் கிடைக்கப்பெற்றது என கோவில் இணை ஆணையர் பிரகாஷ் தகவல் தெரிவித்தார்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளிலும், வரும் 16,17,21,24 ஆகிய சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுவாக நிர்ணயிக்கப்பட்ட வாக்குச்சாவடி மையத்தில் 2025ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்த முகாம்கள் நடத்தப்பட உள்ளது. எனவே,பொதுமக்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கவோ,பெயர் சேர்க்கவோ, இதர பயன்பாட்டிற்கு பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் இன்று தெரிவித்துள்ளார்.
துவரங்குறிச்சி டெப்போ அருகே இன்று மாலை எதிரெதிர் திசையில் வந்த இரு சக்கர வாகனங்கள் நேரெதிராக மோதி விபத்துக்குள்ளானது. இதில் சிறுவன் உட்பட மூன்று பேர் சம்பவ இடத்திலேயே படுகாயம் அடைந்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த துவரங்குறிச்சி போலீசார் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருச்சி மேயரும், மாநகர திமுக செயலாளருமான அன்பழகன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் நாளை(வியாழன்) மாலை 5.30 மணியளவில் பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள சென்னையில் இருந்து விமான மூலம் திருச்சி வருகை தர இருப்பதாக தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.