India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஆளவந்தநல்லூரை சேர்ந்த மனோகா் சொந்தமாக வாகனம் ஓட்டி தொழில் செய்யும் நிலையில், நேற்று சவாரி இருப்பதாகக் கூறி வாகனத்துடன் வெளியில் சென்றவர், நள்ளிரவில் சங்கா் நகா் அருகே, தனது வாகனத்துக்குள் தலையில் அடிபட்ட நிலையில் மா்மமான முறையில் இறந்து கிடந்தாா். இதையறிந்த சோமரசம்பேட்டை போலீஸாா் மனோகரின் சடலத்தை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனா்.
தேனியை சேர்ந்த ஜெகதீசன், மணிகண்டம் பகுதியில் தங்கி கட்டிட வேலை செய்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு நேரம் ஆகிவிட்டதால் ஒண்டிக்கருப்பு கோவிலில் தங்க முடிவு செய்துள்ளார். பிறகு, கோவில் அருகே நேற்று காலை சமைத்துக் கொண்டிருக்கும் போது, நிலை தடுமாறி கோவில் குதிரை சிலை அருகில் உள்ள போஸ்ட் மரத்தை பிடித்துள்ளார். அப்போது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
ஜீயபுரம் அடுத்த கொடியாலத்தை சேர்ந்த மதிர்விஷ்ணு (18). இவரை நேற்று மர்மநபர்கள் சிலர் சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் படுகாயமடைந்த மதிர்விஷ்னு திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இச்சம்பவத்தில் ஐந்து பேர் இன்று மணப்பாறை காவல்நிலையத்தில் சரணடைந்தனர்.
திருச்சி மாவட்டம் முழுவதும் இன்று மற்றும் நாளை வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாம்களில் ஜனவரி 2025ஐ அடிப்படையாகக் கொண்டு 18 வயது எட்டும் அனைவரும், புதிய வாக்காளராக சேர பதிவு செய்யலாம். மேலும் இதில் பெயர், முகவரி திருத்தம், நீக்கல் போன்றவற்றையும் செய்து கொள்ளலாம். இது அந்தந்த பகுதி வாக்குசாவடி மையங்களில் நடைபெறும். ஷேர் செய்யவும்
அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் நடைபெற்ற பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு இன்று (நவ.15) சென்னை செல்வதற்காக திருச்சி விமான நிலையத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வருகை தந்தார். திருச்சிக்கு வருகை தந்த முதல்வரை திருச்சி மாவட்ட ஆட்சி தலைவர் பிரதீப் குமார் சந்தித்து புத்தகம் வழங்கி அவரை உற்சாகமாக வரவேற்று வழி அனுப்பி வைத்தார்.
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் நேற்று கோலாலம்பூரிலிருந்து ஏர் ஏசியா விமானத்தில் வந்த பயணிகளிடம் விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத் துறை அலுவலர்கள் சோதனை செய்தனர். அப்போது பெண் பயணி ஒருவர் மறைத்து கடத்தி வந்த ரூ. 27.14 லட்சம் மதிப்பிலான 359 கிராம் தங்க நகைகள் சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
திருச்சி ஜீயபுரம் அருகே கொடியாலம் பகுதியைச் சேர்ந்தவர் மதிர்விஷ்ணு. இவர் இதே பகுதியைச் சேர்ந்த மாணவர் கோகுல் கொலை வழக்கில் குற்றவாளியாக இருந்தார். இந்நிலையில் இன்று காலை அரசு பேருந்தில் ஏறினார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் விஷ்ணுவை சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடினர். சம்பவ இடத்திலேயே விஷ்ணு பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ஜீயபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி மத்திய அரசின் பொது துறை நிறுவனமான யந்திரா இந்தியாவில், திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை (75) உள்பட 3,883 அப்ரண்டீஸ் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு கல்வித் தகுதி 10 & ITI, வயது 35க்குள் இருக்க வேண்டும். இதற்கு விண்ணப்பிக்க 21.11.2024 அன்று கடைசி நாளாகும்.
புத்தாநத்தம் அடுத்த அழககவுண்டம்பட்டி பள்ளியில் பயிலும் 6 ஆம் வகுப்பு மாணவி பள்ளி முடிந்து வீடு திரும்பி கொண்டிருந்த போது, பிள்ளமநாயக்கன்பட்டியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்ற வாலிபர் சிறுமியை முள் காட்டிற்கு அழைத்துச் சென்று தகாத முறையில் நடக்க முயற்சி செய்துள்ளார். இது குறித்து சிறுமியின் தாயார் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் நேற்று போலீசார் வாலிபரை கைது செய்தனர்.
திருச்சி மாவட்டத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதன் காரணமாக கீழ்கண்ட துணை மின் நிலையங்களில் நாளை (16.11.24) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி முசிறி, திருவெறும்பூர், மணப்பாறை, தென்னுர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யவும்
Sorry, no posts matched your criteria.