India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மணப்பாறையில் நடைபெறவுள்ள பாரத சாரண, சாரணியர் இயக்க வைரவிழா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு பெருந்திரளனி விழாவினை, வெற்றிகரமாக நடத்த 8 இயக்குனர்கள் தலைமையில் 33 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இக்குழுவினர் பிரிந்து அனைத்து பணிகளையும் மேற்கொள்வார்கள். மேலும் அலுவலர்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை குறித்த காலத்திற்குள் நிறைவேற்றி, பணிகளை சிறப்பாக மேற்கொள்ளவார்கள் என ஆட்சியர் தெரிவித்தார்.
திருச்சியில் தி.க தலைவர் கி.வீரமணி இன்று பேசுகையில், சனாதனவாதிகள் நாட்டை பின்னோக்கி தான் அழைத்துச் செல்வார்கள் என்பதற்கு உதாரணம் அண்ணாமலை நடத்திய சாட்டையடி போராட்டம். 21ஆம் நூற்றாண்டில் நாம் இருக்கையில் அவர் இரண்டாம் நூற்றாண்டிற்கு மக்களை அழைத்து செல்ல பார்க்கிறார். ஐ.பி.எஸ் ஆனவர் இந்த நிலைக்கு ஆளாகி விட்டாரே என்பதை நினைத்து பரிதாபபடுகிறேன் என தெரிவித்தார்.
திருச்சி மத்திய மண்டல காவல் துறை தலைவர் கார்த்திகேயன் நேற்று செய்திக்குறிப்பு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் திருச்சி மத்திய காவல் மண்டலத்தில் நிகழாண்டு (2024) திருட்டு, கொள்ளையில் ஈடுபட்ட 2,414 பேர் கைது செய்யப்பட்டு, ரூ.10 கோடி சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், நீதிமன்றத்தில் சரியான முறையில் சாட்சியங்களை ஆஜர்படுத்தியும் 209 குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.
மதுரை மாவட்டத்தை சேர்ந்த சூர்யா (27) என்பவர் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் சிறையில் இவரிடம் 12 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணை செய்த போது சிறை வார்டன் எழில்ராஜ் தனக்கு கஞ்சா வழங்கியதாக கைதி ஒப்புக்கொண்டார். இதையடுத்து சிறை வார்டன் எழில்ராஜை சஸ்பெண்ட் செய்து திருச்சி சிறை சூப்பிரண்டு ருக்மணி பிரியதர்ஷினி உத்தரவிட்டார்.
மன்னார்குடி பகுதியை சேர்ந்த மணிகண்ட பிரபு விருப்ப ஓய்வு பெற்ற காவல் அதிகாரி ஆவார். இவரது மகன் துறையூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகிறார். இந்நிலையில் மாணவன் நேற்று வீட்டில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். பின்னர் துறையூர் போலீசார் மாணவனின் உடலை கைப்பற்றி இதுகுறித்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
அணியாப்பூர் கிராமம் வீரமலை பாளையத்தில் உள்ள துப்பாக்கி சூடும் இடத்தில், வரும் 29ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை, காலை 7.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை, 7 மணி முதல் இரவு 10:00 மணி வரை கேரளா குரூப் யூனிட் பயிற்சியாளர்களால் துப்பாக்கி சூடு பயிற்சி நடைபெற உள்ளது. எனவே பயிற்சி தளத்தில் மேய்ச்சலுக்காக கால்நடைகள் மற்றும் மனிதன் நடமாட்டம் இருக்கக்கூடாது என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். ஷேர் செய்யவும்
திருச்சி விவசாயிகளுக்கு வேளாண்மை பொறியியல் துறையின் கீழ் செல்போன் மூலம் இயங்கும் தானியங்கி பம்ப்செட் கருவி மானிய விலையில் வழங்கப்பட உள்ளது. இக்கருவியை கொண்டு கிணறுகளில் உள்ள பம்ப் செட்களை வீட்டிலிருந்தும், வெளியூர்களில் இருந்தும் இயக்கவும், நிறுத்தவும் முடியும். விருப்பமுள்ள விவசாயிகள் திருச்சி, முசிறி, லால்குடி வேளாண்மை பொறியியல் துறை அலுவலகங்களை தொடர்பு கொள்ள மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் 415 கோடி ரூபாய் செலவில் 57 ஆயிரம் சதுர அடி பரப்பளவில், தரை மற்றும் ஆறு தளங்களுடன் 5000 பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் டைடல் பூங்கா அமைக்கப்பட உள்ளது. இந்த நிலையில் இதன் கட்டுமான பணிகளை மேற்கொள்ள சுற்றுச்சூழல் அனுமதி கோரி இன்று டைடல் பூங்கா விண்ணப்பம் செய்துள்ளது. அதற்கான அனுமதி கிடைத்தவுடன் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நாளை வெள்ளிக்கிழமை தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட நிர்வாகம் இன்று அறிவித்துள்ளது. மேலும் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த வேலை தேடுபவர்கள இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் மேலும் விவரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரிலோ அல்லது 04312413510 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி விமான நிலையத்திற்கு நேற்று இரவு கோலாலம்பூரிலிருந்து ஏர் ஏசியா விமான மூலம் தஞ்சாவூரை சேர்ந்த அண்ணாமலை என்ற நபர் வருகை தந்தார். அவரை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அவர் வந்த பாஸ்போர்ட் தவறான தகவலின் அடிப்படையில் பெறப்பட்ட போலியானவை என தெரியவந்தது. இதன் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
Sorry, no posts matched your criteria.