India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஃபெஞ்சல் புயல் காரணமாக திருச்சியில் நள்ளிரவு முதல் மழை பெய்தது. அதன்படி மலைக்கோட்டை 10.2 மிமீ, விமான நிலையம் 12.3 மிமீ, திருச்சி மத்திய பேருந்து நிலையம் 14.6 மிமீ, திருச்சி டவுன் 10 மிமீ என திருச்சி மாவட்டம் முழுவதும் மொத்தம் 281.4 மிமீ மழை பெய்துள்ளது. சராசரியாக 11.73மிமீ ஆக மழையின் அளவு பதிவாகியுள்ளது என திருச்சி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சமயபுரம் அருகே உள்ள மாடக்குடி பகுதியில் வசிக்கும் மதிவாணன் என்பவர் கூலி வேலைசெய்து வருகிறார். கடந்த மாதம் எட்டாம் தேதி சமயபுரம் சுங்கச்சாவடி அருகே தேநீர் கடைக்கு விளம்பரம் போர்டு கட்டும்போது, கடைக்கு மேல் சென்ற உயர் மின் கம்பியில் விளம்பரப் பலகை பட்டதில் மின்சாரம் தாக்கி மதிவாணனை தூக்கி வீசியதில் பலத்த காயமடைந்த மதிவாணன் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.
தொட்டியம் பகுதியில் பல்வேறு திருட்டுகளில் ஈடுபட்டு வந்த நாமக்கல் மாவட்டம் செல்லப்பா காலணியை சேர்ந்த புஷ்பராஜ் மகன் கிருஷ்ணமூர்த்தி மற்றும் மோகனூர் வாளவந்தியைச் சேர்ந்த நடராஜன் மகன் அருண்குமார் இருவரையும் கைது செய்து விசாரித்தனர். அப்பொழுது அவர்களிடமிருந்து 44 பவுன் சவரன் நகைகளைதொட்டியம் இன்ஸ்பெக்டர் ஞானசேகர் தலைமையில் காட்டுப்புத்தூர் போலீசார் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.
திருச்சி அருகே மாத்தூர் தனியார் கல்லூரி பின்புறம் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தார். இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என தெரியவில்லை. காவி நிற லுங்கியும் கருப்பு கலர் துண்டும் அணிந்திருந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த திருச்சி ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் தலைமையிலான 8 பேர் கொண்ட பாதுகாப்பு படையினர் ஜூலை மாதம் திருச்சி ரயில்வே ஜங்சனில் சோதனை செய்ததில் ஒரு ரயில் பயணியிடம் கணக்கில் வராத சுமார் 2,796.04 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அதன் மதிப்பு சுமார் ரூ.1 கோடியே 89 லட்சத்து ஆயிரத்து 230 ஆகும். தங்கத்தை பறிமுதல் செய்த 8 பேர் கொண்ட ரயில்வே பாதுகாப்புபடையினருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
திருச்சி மாநகர் பகுதியில் இரவு நேரங்களில் சுற்றி திரியும் மாடு, நாய்களால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி பல விபத்துகள் நடந்து வருகிறது. இந்நிலையில், திருச்சி மாநகராட்சி இனி மாடு, நாய், ஆடு, கழுதை, குதிரை என்று எந்தவொரு கால்நடையாக இருந்தாலும் உரிமம் வாங்க வேண்டும் என்று அறிவித்துள்ளது. அதனை தொடர்ந்து அபராத தொகை கட்டணத்தையும் உயர்த்தியுள்ளது.
பஞ்சப்பூர் பகுதியில் புதிய பேருந்து முனையம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பேருந்தின் கட்டுமான பணிகளை விரைவாக மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இந்நிகழ்வில் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திருவெறும்பூர் அருகே இன்ஸ்டாகிராமில் பழக்கமான இளம்பெண்ணை, மயக்க மருந்து கொடுத்து ஆபாசமாக போட்டோ எடுத்து மிரட்டிய, கடலூரை சேர்ந்த தினேஷ் என்ற வாலிபரை, மலேசியாவில் இருந்து கேரளா கொச்சின் விமான நிலையம் வந்தப்போது திருச்சி தனிப்படைப் போலீசார் கைது செய்து திருவெறும்பூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.
ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், சிங்கப்பூர் செல்லும் விமானம் மற்றும் தமிழகம் வரும் விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் திருச்சி, மங்களூர் பகுதிகளில் இருந்து சென்னை வரும் 6 விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக சற்றுமுன் நிர்வாகம் அறிவித்துள்ளது. ஷேர் செய்யவும்
திருச்சி மாவட்ட சுகாதாரத் துறையில் தற்காலிக ஒப்பந்த அடிப்படையிலான பணியிடங்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்படுகிறது. இந்த பணி தற்காலிகமாக 11 மாதங்கள் ஒப்பந்தத்திற்கான பணியிடமாகும். இப்பணியிடங்களுக்கான அதிகபட்ச வயது வரம்பு 59-க்குள் இருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பத்தினை www.tiruchirappalli.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ள மாவட்ட ஆட்சியர் இன்று தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.