India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அகில உலக கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸை வாடிகனில் இன்று கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்தின் தலைவரும்,திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான இனிக்கோ இருதயராஜ் நேரில் சந்தித்து உரையாடினார். அப்போது போப் அவருக்கு ஆசி வழங்கினார். இந்த சந்திப்பின்போது,கிறிஸ்தவ மக்களுக்கு நிறைவேற்றப்படும் திட்டங்கள் குறித்தும், வாழ்க்கை சூழல் குறித்தும் திருச்சி எம்எல்ஏ எடுத்துரைத்தார்.
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (24). கடந்த மாதம் திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் அருகே டாஸ்மாக் கடை அருகே உள்ள பாலத்தின் அடியில் வைத்து குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஏற்கனவே 6 பேர் கைது செய்யப்பட்டனர். கொலை தொடர்பாக திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையம் பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் (25) உள்ளிட்ட 3 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
திருச்சி மாவட்ட காவல்துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட நான்கு மற்றும் இரண்டு சக்கர வாகனங்கள் வருகின்ற 10.12.2024 அன்று காலை 10:00 மணிக்கு திருச்சி ஆயுதப்படை மைதானத்தில் வைத்து பொது ஏலம் நடைபெறுகிறது. ஏலம் எடுக்க விரும்புவோர் 09.12.2024 ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 05:00 மணி வரை மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை பார்வையிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி தென்னூரை சேர்ந்தவர் இப்ராகிம்ஷா. இவர் நேற்று சின்னசாமி நகர் பகுதியில் வீட்டில் ஷெட் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது இரும்பு குழாய் மின்வயரில் பட்டதில் அவர் மீது மின்சாரம் பாய்ந்து, தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் அவரை பரிசோதனை செய்த மருத்துவர் ஏற்கனவே உயிரிழந்ததாக கூறினார். இந்த சம்பவம் குறித்து தில்லைநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்கின்றனர்.
ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவரான மாரிமுத்துவுக்கு நெஞ்சுவலி இருந்தது. இந்நிலையில் அவர் ஆட்டோவில் ஸ்ரீரங்கம் பத்திரப்பதிவு அலுவலகம் அருகே சென்ற போது திடீரென மயங்கி விழுந்தார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மாரிமுத்துவை அரசு மருத்துவமனையில் சேர்த்ததில், அவரை பரிசோதனை செய்த டாக்டர் மாரிமுத்து இறந்து விட்டதாக கூறினார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர், திமுக கழக முதன்மை செயலாளர் கே.என். நேரு இன்று டெல்லியில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்தார். இந்த நிகழ்வில் திருச்சி எம்பி சிவா, தூத்துக்குடி எம்பி கனிமொழி, பெரம்பலூர் எம்பி அருண் நேரு மற்றும் எம்பிகள், எம்எல்ஏக்கள் உடன் கலந்து கொண்டனர்.
திருச்சி குண்டூர் அருகே அய்யம்பட்டி பெத்லகேம் நகரை சேர்ந்த ஜெயலட்சுமி (63). இவர் கடந்த நவ.17ஆம் தேதி சேலத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டு, நேற்று வீடு திரும்பிய போது வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 25 பவுன் தங்க நகை மற்றும் 5,000 மதிப்புள்ள வெள்ளி பொருட்கள் திருடப்பட்டது தெரியவந்தது. இது குறித்து நவல்பட்டு போலீசார் வழக்குப்பதிந்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
திருச்சி விமான நிலையத்திற்கு கோலாலம்பூரிலிருந்து ஏர் ஏசியா விமானம் வந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்த ஆண் பயணியை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்ததில் வெளிநாட்டு வன உயிரினங்கள் வகையிலான 55 பல்லி மற்றும் ஓனான் வகைகளை பறிமுதல் செய்ததுடன், அதனை கடத்தி வந்தது எப்படி என அந்நபரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
துறையூர் அடுத்த பச்சைமலை மங்கலம் அருவியில் மழை வெள்ளம் அதிகரித்திருப்பதால், சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு இன்று முதல் தடை விதிக்கப்பட்டிருக்கின்றது. அதேபோல் துறையூர் அடுத்துள்ள கொல்லிமலையின் அடிவார பகுதியான புளியஞ்சோலை அருவி மற்றும் நீரோடைகளில் வெள்ள நீர் ஆர்ப்பரிப்பதால் சுற்றுலாப் பயணிகள் செல்லவும், செல்பி எடுக்கவும், குளிப்பதற்கும் தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. ஷேர் செய்யவும்
ஃபெஞ்சல் புயல் காரணமாக திருச்சியில் நள்ளிரவு முதல் மழை பெய்தது. அதன்படி மலைக்கோட்டை 10.2 மிமீ, விமான நிலையம் 12.3 மிமீ, திருச்சி மத்திய பேருந்து நிலையம் 14.6 மிமீ, திருச்சி டவுன் 10 மிமீ என திருச்சி மாவட்டம் முழுவதும் மொத்தம் 281.4 மிமீ மழை பெய்துள்ளது. சராசரியாக 11.73மிமீ ஆக மழையின் அளவு பதிவாகியுள்ளது என திருச்சி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.