India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவெறும்பூரைச் சேர்ந்த சதீஷ் பாபு என்பவரிடம், சென்னையை சேர்ந்த ரகு என்பவர் தனக்கு மாந்திரீகம், ஜோசியம் அனைத்தும் தெரியும் என்றும், பஞ்சாயத்து தேர்தலில் கவுன்சிலராகவும் ஆக்குகிறேன் என்று ஆசை வார்த்தைகள் கூறி 3000 ரூபாய் பணம் பெற்றுள்ளார். இது குறித்து சதீஷ்குமார் எஸ்பியிடம் புகார் அளிக்கவே திருவெறும்பூர் போலீசார் நேற்று ரகுவை கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள EB சாலை, கம்பரசம்பேட்டை, மெயின் கார்டு கேட், அதவத்தூர், பெட்டவாய்த்தலை, சிறுகமணி, மணிகண்டம், அளுந்தூர் உள்ளிட்ட துணை மின் நிலையங்களில் மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் இன்று (பிப்.04) மேற்கண்ட துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் காலை 9:45 முதல் மாலை 4:00 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. share it now…
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் உதவித்தொகை, வேலைவாய்ப்பு மனுக்கள், கல்வி உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மக்களிடமிருந்து 396 மனுக்கள் பெறப்பட்டன.
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவிலில் பூபதி திருநாள் எனப்படும் தைத்தேர் உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இரண்டாம் திருநாளான இன்று மாலை நம்பெருமாள் வெள்ளி ஹம்ச வாகனத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு சேவை சாதித்தார். தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
தமிழக வெற்றிக் கழகம் திருச்சி மாவட்டத்திற்கு புதிய நிர்வாகிகளை நியமனம் செய்துள்ளது. திருச்சி மாநகர் மாவட்டம் திருவரங்கம் தொகுதி, திருச்சி மேற்கு தொகுதி, மாவட்டக் கழகச் செயலாளர் சந்திரா, மாவட்டக் கழக இணைச் செயலாளர் சிவலிங்கம், பொருளாளர் வெங்கடேஷ் பாபு, துணைச் செயலாளர் ஆனந்தகுமார், துணைச் செயலாளர் சாந்த ஷீலா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வணிகர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் விடுத்த கோரிக்கையை ஏற்று வருமானவரி உச்சவரம்பை ரூ.12 லட்சமாக உயர்த்தி அதற்கு வருமான வரி இல்லை என்று அறிவித்திருப்பது பாராட்டுக்குரியது. வணிக நிறுவனங்களுக்கு வாடகையுடன் 18 % ஜிஎஸ்டியை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்படாதது வருத்தமளிக்கிறது என தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு செயலாளர் திருச்சி கோவிந்தராஜூலு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறைக்காக நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் பணி அமைப்பு, குற்ற வழக்குகள் தொடர்புக்கு உதவியாக சட்ட ஆலோசகர் பணிக்கு திருச்சி சரகத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் வரும் பிப்.18-ஆம் தேதிக்கு முன் நேரடியாகவோ அல்லது பதிவு தபால் மூலமாகவோ சமர்ப்பிக்கப்பட வேண்டும் என சிபிசிஐடி தலைமை அலுவலகம் அறிவித்துள்ளது.
பாரத சாரண, சாரணியர் இயக்கத்தில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு “வெள்ளி யானை சிலை” விருது வழங்கப்படும், இது மிக உயர்ந்த விருதாகும். அந்த வகையில் பாரத சாரண, சாரணியர் இயக்கத்தின் தலைவரும், பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு இந்த விருதினை குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வழங்க உள்ளார். இந்த தகவலை இன்று பாரத சாரண, சாரணியர் இயக்க தேசிய தலைமை ஆணையர் கே.கே.கண்டேல்வால் அறிவித்தார்.
மணப்பாறை சிப்காட் வளாகத்தில் இன்று நடைபெற்ற நிறைவு விழாவில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க ஸ்டாலின், நவீன தமிழ்நாட்டை உருவாக்கியது கலைஞர் கருணாநிதி தான். பல்கலைக்கழகங்கள், மருத்துவமனைகளை உருவாக்கிய கலைஞருக்கு கலைஞர் நூற்றாண்டு பெருந்திரளனி விழாவை சாரணர் விழாவோடு கொண்டாடுவது மிக பொருத்தமாக உள்ளது என்றார்.
மணப்பாறை சிப்காட் பகுதியில் நடைபெற்று வரும் சாரண, சாரணிய இயக்கம் வைரவிழா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா நிறைவு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாரண, சாரணிய இயக்க விழாவில் கலந்து கொண்ட மாணவர்களின் ஒற்றுமையும், உற்சாகமும் 5 உலக சாதனை படைத்துள்ளது என்றார்.
Sorry, no posts matched your criteria.