India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருச்சி உள்பட 17 மாவட்டங்களில் சார் பதிவாளர்கள் பணியிட இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, ஸ்ரீரங்கம் சார்பதிவாளர் வனிதா காஞ்சிபுரம் நிர்வாக சார்பதிவாளராகவும், செங்கல்பட்டு 1 எண் இணை சார்பதிவாளர் அன்பழகன் திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி சார்பதிவாளராகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.
திருச்சி துணை மின் நிலையத்தில் நாளை (ஜன.3) மாதாந்திர பராமரிப்பு காரணமாக நடக்க உள்ளதால் காலை 9.45 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது. மணிமண்டபசாலை, காந்தி மார்க்கெட், சின்ன கடைவீதி, பெரிய கடை வீதி, ஆண்டார் வீதி, மலைக்கோட்டை , பாபு ரோடு, லட்சுமிபுரம், உக்கடை, கல்மந்தை, ராணி தெரு, கிருஷ்ணாபுரம், பூலோகநாதர் கோயில் தெரு, இது போன்ற இடங்களில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
திருச்சியிலுள்ள தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மையத்தில் வரும் ஜன.21 அன்று, ஒரு நாள் வயதுடைய கோழி குஞ்சுகள் விற்பனைக்கு வரவுள்ளன. கோழி வளா்ப்பில் ஆா்வமுள்ளவா்கள் இன்று முதல் திருச்சி கோழி பண்ணை சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மையத்தில் உரிய விலையை செலுத்தி முன்பதிவு செய்து கோழி குஞ்சுகளை பெறலாமென தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகப் பயிற்சி மைய தலைவர் தெரிவித்துள்ளார்.
Way2News Appஇல் திருச்சி மாவட்டத்தில் செய்தியாளராக பணிபுரிய விருப்பமுள்ளவர்கள் <
திருச்சி இ.பி. சாலை துணை மின்நிலையத்தில் வரும் (03-01-25) அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இங்கிருந்து மின்சாரம் பெறும் இ.பி. சாலை, காந்தி சந்தை, சின்னகடைவீதி, பெரிய கடைவீதி, கீழ ஆண்டார் வீதி, மலைக்கோட்டை, விஸ்வாஸ் நகர், வேதாத்ரி நகர், ஏ.பி. நகர், உக்கடை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் வரும் 3 ஆம் தேதி காலை 9.45 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி கோட்டத்தில் இயக்கப்படும் ரயில்களின் நேரம் நாளை (01-01-2025) முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து திருச்சி ரயில்வே கோட்ட நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், திருச்சி – ஈரோடு – திருச்சி ரயில்களானது காலை 7 மணிக்கு பதிலாக 7.20க்கு புறப்பட்டு, இரவு 8.45 மணிக்கு பதிலாக 8.50க்கு வந்தடையும். திருவாரூர் – திருச்சி ரயிலானது காலை 7 மணிக்கு பதிலாக 6.55க்கு வந்தடையும். ஷேர் செய்யவும்
திருச்சி மக்களே நாம் அனைவரும் புதிய வருடத்தில் நுழைய உள்ளோம். கடந்த 2024ஆம் ஆண்டில் திருச்சிக்கு வழக்கத்திற்கு மாறான மழை, வெயில், புதிய புதிய அரசின் திட்டங்கள் கிடைக்கப்பெற்றது. இந்த சமயத்தில் நாம் அனைவரும் ஒன்றை நினைவு கூறுவோம். அதன்படி இந்த வருடத்தின் மறக்க முடியாத நினைவுகள் மற்றும் புதிய வருடத்தில் இதை செய்ய விரும்புகிறேன் என்பதை COMMENT செய்யவும். உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்
திருச்சி மாநகராட்சியில் நடைபெறும் பால பணிகள், பாதாள சாக்கடை பணிகள் உள்ளிட்ட பணிகள் சுனக்கமாக நடைபெறுவதை கண்டித்து திருச்சி மரக்கடையில் அதிமுகவினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதனால் திருச்சி மாநகரம் முழுவதும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட 300-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்
..
மஞ்சம்பட்டியை சேர்ந்தவர் ஆனந்த். இவரது மகள் 10 வயதான இவர் அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் 5 ம் வகுப்பு படித்து வருகிறார். தந்தை மேஜிக் கலைஞர் என்பதால் ஆரம்பத்தில் இருந்தே சிறுமிக்கு மேஜிக் கலை மீது ஆர்வம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் இளம் வயதிலேயே கின்னஸ் சாதனை படைக்க வேண்டும் என்ற ஆர்வத்ததில் 59 வினாடிகளில் 32 வகையான மேஜிக் செய்து அசத்தியுள்ளார்.
திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் காமினி நேற்று வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், “இன்று நள்ளிரவு புத்தாண்டு பிறப்பு தினத்தை முன்னிட்டு இரு சக்கர வாகன வீலிங் செய்வோர் கடுமையாக தண்டிக்கப்படுவர் என்றும் பொதுமக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் யாரும் ஈடுபடக்கூடாது என்றும், நள்ளிரவு ரூம் மற்றும் பாதுகாப்பு பணியில் மாநகரில் மட்டும் 350 போலீசார் ஈடுபட இருப்பதாக தெரிவித்துள்ளார்
Sorry, no posts matched your criteria.