Tiruchirappalli

News January 23, 2025

அனைத்தையும் ஒன்றிய அரசே செய்ய முடியாது: செல்வப் பெருந்தகை

image

திருச்சி ஜங்ஷன் ரயில்வே நிலையத்திற்கு இன்று வருகை தந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது டங்ஸ்டன் விவகாரத்தில் அண்ணாமலை எங்கு போய் பேசினாலும் அதனை நடைமுறைப்படுத்துகின்ற அதிகாரம் மாநில அரசுக்கு தான் உள்ளது. அதை தமிழக முதலமைச்சர் தான் முடிவு எடுக்க வேண்டும். அனைத்தையும் ஒன்றிய அரசை செய்ய முடியாது என தெரிவித்தார்.

News January 22, 2025

குடியரசு தலைவருக்கு அமைச்சர் அழைப்பு

image

மணப்பாறையில் வருகின்ற ஜனவரி 28ஆம் தேதி முதல் பிப்ரவரி 3 ஆம் தேதி வரை சர்வதேச அளவிலான சாரண, சாரணீய ஜாம்போரி விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் கலந்து கொள்ள இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்முவிற்கு, தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று அழைப்பு விடுத்தார்.

News January 22, 2025

மின்சாரம் தாக்கி சிகிச்சை பெற்றவர் உயிரிழப்பு

image

திருச்சியைச் சேர்ந்த சாலமன் (எ) பிரவீன் நேற்று முன்தினம் தெப்பக்குளம் பகுதியில் எலக்ட்ரீசியன் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் தாக்கி கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து, கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 22, 2025

திருச்சி விமான நிலையத்தில் தங்கம் கடத்தல்

image

துபாயிலிருந்து ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் நேற்று (ஜன.22) இரவு திருச்சி வந்தது. இதில், வந்த பயணிகளை, சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டபோது, ஆண் பயணி ஒருவரின் ஆடையின் உள்பகுதிகளில் பழுப்பு, மஞ்சள் நிற பேஸ்ட் வடிவில் 325 கிராம் தங்கத்தை 2 சிறிய கட்டிகளாக கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News January 22, 2025

இருதரப்பு மோதல் 6 பேர் கைது

image

ஸ்ரீரங்கம் அருகே காளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவையொட்டி, அன்று நள்ளிரவு அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் நடமாடினர். அப்போது, இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதில் ஒருவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. சிலர் காயமடைந்தனர். கதிரவன் (19) அளித்த புகாரின் பேரில் தமிழரசன், பிரசன்னா, கமலகண்ணன், கார்த்திக் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

News January 22, 2025

சுகாதாரத்துறையில் ஒப்பந்த அடிப்படையில் வேலைவாய்ப்பு

image

திருச்சி சுகாதாரத்துறையில் ஒப்பந்த அடிப்படையிலான பணியிடங்களுக்கான வேலை வாய்ப்புகளை மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர் அறிவித்துள்ளார். இது தற்காலிகமாக 11 மாதங்கள் ஒப்பந்த பணியிடங்கள் ஆகும். இப்பணியிடங்கள் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் நிரப்பப்பட உள்ளன. இதற்கான விண்ணப்பம் tiruchirappalli.nic.inஎன்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யாலம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். SHARE IT

News January 21, 2025

சமயபுரம் கோவிலில் உண்டியல் காணிக்கைகள் விவரம்

image

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கைகளில் ரூ.66,39,618 ரூபாய் ரொக்கமும்,1 கிலோ 580 தங்கமும், 2 கிலோ 440 வெள்ளியும், 706 அயல் நாட்டு பணம்,116 அயல் நாட்டு நாணயங்களும், உபகோவில்களான ஆதிமாரியம்மன் கோவில் உண்டியல்கள் மூலம் ரூ.2,43, 747. ரொக்கமும், உஜ்ஜயினி ஓம்காளி அம்மன் கோவில் மூலம் 13,600 ரொக்கமும், போஜீஸ்வரர் கோவில் மூலம் .5,914 ரொக்கமும் காணிக்கையாக கிடைக்கப் பெற்றது.

News January 21, 2025

விருதுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

image

திருச்சி ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்து மாவட்டங்களிலும், மாவட்டத்திற்கு ஒருவர் என 38 பேருக்கு தமிழ்நாடு முதலமைச்சரின் “நீர்நிலை பாதுகாவலர் விருது”, ரூ.1 லட்சம் ரொக்க பரிசும் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இதற்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் 31.1.25 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விருப்பம் உள்ளவர்கள் awards.tn.gov.in இணையதளத்தில் விண்ணப்பித்து பயன் பெறலாம். SHARE IT 

News January 21, 2025

திருச்சியில் சீமான் ஆஜராக உத்தரவு

image

திருச்சி சரக டிஐஜி வருண்குமார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது அவதூறு வழக்கு தாக்கல் செய்த நிலையில், அந்த வழக்கு விசாரணை திருச்சி மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் எண் 4 நீதிபதி பாலாஜி முன்பு இன்று நடைபெற்றது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதி வழக்கு விசாரணையை பிப்ரவரி 19ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். அன்றைய தினம் சீமான் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். COMMENT & SHARE IT

News January 21, 2025

திருச்சியில் 1,400 கிலோ அரிசி பறிமுதல்

image

அரியமங்கலம் பகுதியில் நேற்று குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுதுறை காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் படி, தனிப்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது 2 மூட்டைகளுடன் நின்று கொண்டிருந்த ஒரு நபரை பிடித்து விசாரித்ததில், அவர் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி, அதிக விலைக்கு விற்பதற்காக கடத்தி வந்தது தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 1,400 கிலோ அரிசியை பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!