Tiruchirappalli

News March 5, 2025

பேருந்து நிலையத்திற்குள் பயணியிடம் கைவரிசை – நான்கு பேர் கைது

image

புதுவாடி கிராமத்தைச் சேர்ந்த கருப்பையா நேற்று மணப்பாறை பேருந்து நிலையத்திலிருந்து தனது ஊருக்கு செல்வதற்காக பேருந்தில் ஏறிய போது மர்ம நபர் ஒருவர் இவரது பாக்கெட்டில் பணத்தை எடுப்பதைப் பார்த்து திருடன் திருடன் என கத்தினார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். அதனைத் தொடர்ந்து அவனுடன் சேர்ந்த மேலும் மூன்று நபர்களை கைது செய்து இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

News March 5, 2025

திருச்சி: சமணத் துறவி தவமிருந்த ஊர்

image

திருச்சி மலைக்கோட்டையில் காணப்படும் குகையில் ‘சிரா’ என்னும் பெயருடைய சமணத் துறவி தங்கியிருந்து தவமிருந்ததாக அக்குகையில் உள்ள பதினோராம் நூற்றாண்டுக் கல்வெட்டு கூறுகிறது. இந்த “சிரா” துறவியின் பள்ளியான ‘சிராப்பள்ளி’ என்றாகி அதுவே காலப்போக்கில் திருச்சிராப்பள்ளி என அழைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்..

News March 5, 2025

திருச்சியில் 32,094பேர் பிளஸ்-1 தேர்வு

image

தமிழகம் முழுவதும் இன்று பிளஸ்-1 தேர்வு தொடங்கி வருகிற 27-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் 106அரசு பள்ளிகள், 71அரசு உதவி பெறும் பள்ளிகள் 81தனியார் மெட்ரிக் பள்ளிகள் என மொத்தம் 258பள்ளிகளிலிருந்து 15,357மாணவர்களும், 16,737மாணவிகளும் மாற்றுத்திறனாளிகளுக்கான சலுகை பெற்று 392மாணவர்களும் தனித்தேர்வர்களாக 271மாணவர்களும், 176மாணவிகளும் தேர்வு எழுத உள்ளார்கள்.

News March 5, 2025

நில மோசடியை தவிர்க்க காவல்துறை எச்சரிக்கை

image

அண்மையில் நில மோசடி வழக்குகள் அதிகமாகி வரும் நிலையில் இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் திருச்சி மாவட்ட காவல் துறை இன்று ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் நில மோசடியை தவிர்க்க, நிலம் வாங்கும் முன் சொத்தின் கடந்த 20 ஆண்டுகளுக்கான வில்லங்கச் சான்றிதழை (Encumbrance certificate) பெற்று, அதை முழுமையாக சரி பார்த்துக்கொள்ளவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது…

News March 4, 2025

திருச்சி-திருவனந்தபுரம் இடையே ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

image

ரயில்வே தேர்வு எழுதும் மாணவர்களின் வசதிக்காக எக்ஸ்பிரஸ் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் சேர்க்கப்படுகின்றன. அதன்படி, எர்ணாகுளம் – கண்ணூர், திருச்சி – திருவனந்தபுரம், திருவனந்தபுரம் – குருவாயூர் (பெட்டி எண்- 16305, 22627, 16342) இடையே இயக்கப்படும் விரைவு ரயில்களில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் 18ஆம் தேதி வரை கூடுதலாக 2ஆம் வகுப்பு பொதுப் பெட்டி சேர்க்கப்படுகிறது.

News March 4, 2025

திருச்சி அருகே 1800 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில்!

image

திருச்சி மாவட்டத்தில் ஸ்ரீ ரங்கம் அரங்கநாத சுவாமி கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில், திருச்சி உச்சிப்பிள்ளையார் கோவில் என பல்வேறு பிரசித்த பெற்ற தளங்கள் அமைந்துள்ளன. அந்த வரிசையில் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலும் அடங்கும். சுமார் 1,800 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த கோவிலானது சுமார் 275 பாடல் பெற்ற தலமாகவும், ‘பஞ்ச பூத ஸ்தலங்களில்’ ஒன்றாகவும் விளங்குவது குறிப்பிடத்தக்கது. SHARE NOW!

News March 4, 2025

திருச்சி எஸ்.பி அதிரடி: இருவர் மீது குண்டர் சட்டம்

image

திருச்சி கௌத்தரசநல்லூர் வயல் பகுதியில் கடந்த மே மாதம் ஆடு மேய்த்து கொண்டிருந்த 11 வயது சிறுமியை அதே ஊரைச் சேர்ந்த சின்னதம்பி, மதன் குமார் ஆகியோர் சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் கைது செய்யப்பட்ட சின்னத்தம்பி, மதன் குமார் இருவர் மீது எஸ் பி உத்தரவின் படி இன்று குண்டர் தடுப்பு சட்டம் பதிவு செய்யப்பட்டது.

News March 4, 2025

கவிஞர் நந்தலாலா உடல் நாளை நல்லடக்கம்

image

கவிஞர் நந்தலாலா ஓசூர் அருகில் உள்ள நாராயணா இருதய சிகிச்சை மருத்துவமனையில் பை பாஸ் ஆபரேஷன் செய்து சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்த நிலையில் இன்று காலை இயற்கை எய்தினார். அவரது உடல் இன்று இரவு திருச்சி வந்து சேரும். நாளை இறுதிக் காரியங்கள் நடைபெறும். பொதுமக்கள் மற்றும் அரசியல்வாதிகளின் இறுதி அஞ்சலிக்காக அவரது உடல் திருச்சி கருமண்டபம் விஸ்வாஸ் நகர் பகுதியில் உள்ள அவரது குடியிருப்பில் வைக்கப்படும்.

News March 4, 2025

பிரபல கவிஞர் நந்தலாலா காலமானார்

image

திருச்சி வயலூர் சாலையில் வசித்து வந்த பிரபல பட்டிமன்ற பேச்சாளர் இலக்கியவாதி கவிஞர் நந்தலாலா சற்றுமுன் உடல் நலக்குறைவால் பெங்களூர் மருத்துவமனையில் காலமானார். அவரது இறப்புக்கு அரசியல்வாதிகள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் உள்ளிட்ட திரை பிரபலங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அவரது உடல் இன்று இரவு திருச்சிக்கு எடுத்து வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News March 4, 2025

திருச்சி: +2 தேர்வு முதல்நாள் – 295 பேர் ஆப்சண்ட்

image

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் நேற்று தொடங்கியது. இதில் திருச்சி மாவட்டத்தில் தேர்வு எழுத மொத்தம் 31,337 மாணவர்கள், மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர். முதல் நாளான நேற்று நடைபெற்ற தமிழ் தேர்வை 31,075 மாணவர்கள், மாணவிகள் எழுதியுள்ளனர். 262 பேர் தேர்வு எழுதவில்லை. தனித்தேர்வர்களில் 323 பேர் விண்ணப்பித்ததில் 290 பேர் எழுதினர். 33 பேர் தேர்வு எழுதாத நிலையில் மொத்தமாக 295 பேர் ஆப்சண்ட் ஆகியுள்ளனர்.

error: Content is protected !!