Tiruchirappalli

News March 8, 2025

திருச்சி – ஈரோடு ரயில் பகுதியாக ரத்து

image

சேலம் கோட்டத்தில் ஊஞ்சலூர்-பாசூர் இடையே பொறியியல் பணிகள் நடைபெறுவதால், திருச்சி-ஈரோடு பயணிகள் ரயிலானது (56809) மார்ச் 8, 11, 13, 15 ஆம் தேதிகளில் ஈரோடு-கரூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது திருச்சி-கரூர் இடையே மட்டும் இயங்கும் என திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News March 8, 2025

திருச்சி: ரூ.1,30,400 சம்பளத்தில் வேலைவாய்ப்பு

image

தமிழக மருத்துவ தேர்வாணையம் பார்மசிஸ்ட் பிரிவில் உள்ள 425 காலியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு ஆன்லைன் வாயிலாக தேர்வு நடைபெறும். ஊதியம் ரூ.35,000 – ரூ.1,30,400ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே டி.பார்ம், பி.பார்ம், பார்ம்.டி படிப்பை முடித்தோர் <>இங்கு க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க மார்ச்.10 கடைசி நாளாகும். பிறரும் பயனடைய SHARE பண்ணுங்க…

News March 7, 2025

காட்டூரில் பிரபல ரவுடி தற்கொலை

image

காட்டூரை சேர்ந்த பிரபல ரவுடி இளையராஜா (36). தற்பொழுது குடிபோதைக்கு அடிமையாகி உள்ளார். இவருக்கு கனகா என்ற மனைவியும் இரண்டு பெண் குழந்தை மற்றும் ஒரு மகன் உள்ள நிலையில் எந்த வேலைக்கும் செல்லாமல் இருந்ததால் கனகா குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியே சென்று விட்டார். இந்நிலையில் நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையறிந்த திருவெறும்பூர் போலிசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 7, 2025

ஆலம்பாக்கத்தில் போலீசார் விசாரணை

image

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியம் ஆலம்பாக்கம் கிராமத்தில் அழுகிய நிலையில் பெண் உடல் இன்று அதிகாலை காணப்பட்டது. இந்த தகவல் அறிந்த கல்லக்குடி போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் . அதனை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

News March 7, 2025

திருச்சி காவல்துறை எச்சரிக்கை

image

முதலீடுகள் செய்யும்போது எச்சரிக்கையுடன் இருக்க திருச்சி காவல்துறை முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், முதலீடு செய்யும் நிதி நிறுவனம் RBI-யால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும். அங்கீகரிக்கப்பட்ட நிதி நிறுவனங்களின் பெயர்கள், முகவரி RBI-ன் இணையதளத்தில் பட்டியலிடப்பட்டிருக்கும். டெபாசிட் செய்ய பரிசு பொருட்கள் தரும் நிறுவனங்கள் போலியானவை என்பதை நினைவில் கொள்ள கூறியுள்ளது.

News March 7, 2025

திருச்சி விமான பயணிகளுக்கு ஓர் நற்செய்தி

image

திருச்சி எம்.பி துரைவைகோ கடந்த (பிப்.14) டெல்லி ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிலைய அதிகாரிகளை சந்தித்து திருச்சி -மும்பைக்கு நேரடி விமான சேவையை கேட்டிருந்தார். அதன்படி வரும் மார்ச் 30ந்தேதி முதல் தினசரி திருச்சி -மும்பை விமான போக்குவரத்து இரவு 10:30 மணிக்கு மும்பையிலிருந்து இரவு12:35 க்கு திருச்சிக்கு வரும், பின்னர் இரவு 01:05க்கு திருச்சியிலிருந்து புறப்பட்டு அதிகாலை 03:10 க்கு மும்பை சேர உள்ளது.

News March 6, 2025

துறையூரை சேர்ந்த பெண் ஏற்காட்டில் கொலை

image

துறையூர் பகுதியை சேர்ந்தவர் அல்பியா (32). இவரும் அப்துல் ஹபீஸ் (22) என்ற நபரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில்  ஹபீஸுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதையறிந்த அல்பியா தன்னை உடனடியாக திருமணம் செய்து கொள்ளுமாறு வறுபுறுத்தியதால் அவரை ஏற்காடு பகுதிக்கு அழைத்து சென்று தனது 2 தோழிகள் உதவியுடன் ஹபீஸ் கொலை செய்துள்ளார். இதையடுத்து போலீசார் மூவரையும் கைது செய்தனர்.

News March 6, 2025

திருச்சி: நீட் தேர்விற்கு நாளையே கடைசி நாள்

image

MBBS, BDS படிப்புகளில் சேர்வதற்கு நீட் தேர்வு கட்டாயம். ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வை தேசிய தேர்வு நடந்து வருகிறது. இந்த ஆண்டுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த மாதம் 7ஆம் தேதி தொடங்கியது. இதற்கு விண்ணப்பிதற்க்கான கடைசி நாள் நாளை இரவு 11.50 மணி வரை மட்டுமே. எனவே விண்ணப்பிக்காத மாணவர்கள் விரைவாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இந்த தேர்வு மே மாதம் 4ஆம் தேதி நடைபெற உள்ளது.

News March 6, 2025

திருச்சியில் “ChatGPT”: இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு

image

தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன நடத்தும் ஒருநாள் பயிற்சி வகுப்பு. இதில் தொழில்முனைவோருக்கான “ChatGPT”பயிற்சி வகுப்பு வரும் மார்ச் 08 ஆம் தேதி அரியமங்கலம் சேஷசாயி தொழில்நுட்ப நிறுவனத்தில் நடைபெற உள்ளது. தொழில்முனைவோர். சிறு மற்றும் நடுத்தர வணிக உரிமையாளர்கள் மற்றும் ஸ்டார்ட்அப் நிறுவனர்கள் இந்த பயிற்சி வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுகொள்ளப்படுகிறது.

News March 6, 2025

வங்கி மோசடி : திருச்சி காவல்துறை எச்சரிக்கை

image

வங்கியில் இருந்து பேசுவதாக கூறி KYC புதுப்பிப்பதற்காக வங்கிக் கணக்கு விபரம், OTP, கடவுச்சொற்கள் போன்றவற்றை கேட்டால் கொடுக்க வேண்டாம் என திருச்சி காவல்துறை இன்று அறிவித்துள்ளது. மேலும் அவர்கள் சைபர் குற்றவாளிகளாக இருக்கலாம். எந்த ஒரு வங்கியில் இருந்தும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு KYC விபரங்கள் கேட்கமாட்டார்கள் என்பதை நினைவில் கொள்ளவும், சைபர் குற்றங்கள் புகார்கள் தெரிவிக்க அழைக்க 1930 கூறியுள்ளது.

error: Content is protected !!