India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தொட்டியம் தோளூர்பட்டியை சேர்ந்தவர் உமாராணி.இவருக்கும் பாலசுப்பிரமணியன் என்பவருக்கும் திருமணமாகி 3 மகன்கள் உள்ளன. இந்நிலையில்,4வது முறையாக உமாராணி கர்ப்பமாகி உள்ளார். திடீரென,நேற்று அவருக்கு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் தொட்டியம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இது குறித்து தொட்டியம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவெறும்பூர் அருகே ஆசை வார்த்தைகளால் பகவதிபுரத்தைச் சேர்ந்த முகமது அலி (37) என்பவர் பள்ளி மாணவியிடம் 2 வருடமாக பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில் அந்த பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து தலைமறைவான வேன் டிரைவரை திருவெறும்பூர் அனைத்து மகளிர் போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
திருச்சி மாவட்டம் குண்டூரை சேர்ந்த சாஹிர் நேற்று தனது மனைவியுடன் தனது டூவீலரில் புதுக்கோட்டை திருச்சி சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது குண்டூர் அருகே வந்தபோது அதே வழியில் பாலாஜி என்பவர் டூவீலரில் வந்து வேகமாக ஷாகிர் டூவீலர் மீது மோதினார். இதில் மூன்று பேரும் காயம் அடைந்து திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து நவல்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மணப்பாறை, கல்பட்டி சத்திரம் வனத்துறை மற்றும் மாவட்ட வன அலுவலர் இன்று எச்சரிக்கை செய்தி வெளியிட்டுள்ளார். அதில் மணப்பாறை உள்ளடக்கிய வனப்பகுதிகளுக்குள் அத்து மீறி நுழைவது மது அருந்துவது ஆடு, மாடு மேய்ப்பது தேன் எடுப்பது தீப்பந்தம் எடுத்துச் செல்வது வனப்பகுதி, தனியார் நிலங்களில் வேட்டையாடுவது மயில்களுக்கு மருந்து வைப்பது, சூதாட்டம் நடத்துவது, போன்ற செயல்களில் ஈடுபட கூடாது என எச்சரித்துள்ளார்.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் இலவச வீட்டு மனை பட்டா, பட்டா மாற்றுதல், ஜாதி சான்று, இதர சான்று, பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்ட உதவிகள், முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மக்களிடமிருந்து 435 மனுக்கள் பெறப்பட்டன….
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் 28ஆம் தேதி வெள்ளிக்கிழமை விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் இன்று அறிவித்துள்ளார். ஆட்சியர் தலைமையில் நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் விவசாயிகள் விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் படை வீரர்கள் மற்றும் சார்ந்தோர்களுக்கு, ராணுவத்தில் கணவனை இழந்த கை பெண்கள் ஆகியோருக்கு தொழில் தொடங்க மானியத்துடன் கடன் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் இன்று அறிவித்துள்ளார். இது தொடர்பாக விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பிப்ரவரி 26 ஆம் தேதி திருச்சி கலையரங்கத்திற்கு நேரடியாக சென்று விண்ணப்பித்து பயன் பெறலாம் என்றும் ஆட்சியர் அறிவித்துள்ளார்.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (பிப்.24) மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மாற்றுத்திறனாளிகள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்களாக வைத்திருந்தனர். இதை அறிந்த மாவட்ட ஆட்சியர் அவர்கள் இருக்கும் இடத்திற்கு தேடி வந்து அவர்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டு நேரில் சந்தித்து பேசினார்.
திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், அவர்கள் தலைமையில் மாநகராட்சி மேயர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாநகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கோரிக்கை மனுக்களை மேயரிடம் அளித்தார்கள். ஆணையர் சரவணன், துணை மேயர் திவ்யா, துணை ஆணையர் பாலு, மண்டலத் தலைவர் துர்காதேவி, செயற்பொறியார்கள், உதவி ஆணையர்கள் ஆகியோர் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று கொண்டனர்.
திருச்சி எடமலைப்பட்டி புதூர் போலீசார் நேற்று ஆக்ஸ்போர்ட் இன்ஜினியரிங் கல்லூரி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, சந்தோஷ்குமார், ருக்குமன் ஆகிய இருவரும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சாவை கல்லூரி மாணவர்களிடம் விற்பனை செய்வதற்காக வைத்திருந்தனர். உடனே போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து, ரூபாய் 2000 மதிப்புள்ள 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
Sorry, no posts matched your criteria.