India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருச்சி டவுன்ஹால் மைதானத்தில் தரைக்கடைகள் அமைக்க விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் இன்று அறிவித்துள்ளார். மேலும் இதற்கு விண்ணப்பிக்க அக்டோபர் 18ஆம் தேதிக்குள் கட்டணத் தொகையை வருவாய் கோட்டாட்சியர் திருச்சிராப்பள்ளி என்ற பெயரில் வங்கி காசோலையாக வழங்க வேண்டும். மேலும் குழுக்கள் 21ஆம் தேதி நடைபெறும் எனவும் ஆட்சியர் அறிவித்துள்ளார்.
இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின்படி, வாக்காளர் பட்டியலினை 100 சதவீதம் தூய்மையாக்கும் பணியின் தொடர்ச்சியாக, திருச்சியில் வாக்காளர்களின் பெயர்கள் இரட்டை பதிவாக வாய்ப்புள்ள 1,87,748 இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவ்வாறு, இனம் காணப்பட்ட வாக்காளர்களுக்கு மட்டும் அறிவிப்புகள் அஞ்சல் மூலமாக அனுப்பப்பட்டு வருகின்றன. இதுதொடர்பாக பொது மக்களுக்கு சந்தேகங்கள் இருந்தால் 0431-2419929 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
லால்குடி அருகே ஆதிக்குடி கிராமத்தில் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட பிரச்சனையில் மனைவி மீது சந்தேகம் அடைந்த கணவன் ராஜேஷ் கடந்த 1ஆம் தேதி இரவு மனைவியை அருவாளால் வெட்டி விட்டு தப்பி சென்றார். லால்குடி போலீசார் கொலை செய்த ராஜேஷ் மீது வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். அப்போது மனைவியை கொலை செய்துவிட்டு தலை மறைவாக இருந்த ராஜேஷை லால்குடி போலீசார் கைது செய்தனர்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் சார்பதிவாளர், உதவியாளர், துணை வணிகவரி உள்ளிட்ட பதவிகளுக்கு தேர்வுகள் நடைபெற உள்ளது. இதனையொட்டி திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் 14.10.2024ஆம் தேதி திங்கட்கிழமை காலை 10 மணி முதல் சிறப்பு கட்டணமில்லா பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. எனவே இதில் மாணவர்கள் கலந்து கொண்டு பயன் பெற ஆட்சியர் இன்று அழைப்பு விடுத்துள்ளார்.
திருச்சி சர்வதேச விமான நிலைய மேலாளருக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து, வெடிகுண்டு கண்டறியும் மற்றும் செயலிழக்க செய்யும் பிரிவு போலீசார் விமான நிலையத்தில் சோதனை நடத்தி வருகின்றனர். திருச்சியில் கடந்த சில தினங்களாக கல்வி நிறுவனங்களுக்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் வந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் சார்பதிவாளர், உதவியாளர், துணை வணிகவரி உள்ளிட்ட பதவிகளுக்கு தேர்வுகள் நடைபெற உள்ளது. இதனையொட்டி திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் 14.10.2024ஆம் தேதி திங்கட்கிழமை காலை 10 மணி முதல் சிறப்பு கட்டணமில்லா பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. எனவே இதில் மாணவர்கள் கலந்து கொண்டு பயன் பெற ஆட்சியர் இன்று அழைப்பு விடுத்துள்ளார்.
மணப்பாறை அடுத்த தொப்பம்பட்டியை சேர்ந்த சரவணன் கடந்த இரு தினங்களாக காணவில்லை. இது குறித்து மணப்பாறை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்த நிலையில் அதே பகுதியில் உள்ள கிணற்றில் சரவணன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதையறிந்த மணப்பாறை போலீசார் சடலத்தை மீட்டு உடற்கூறாய்விற்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
திருச்சி பஞ்சப்பூரில் ரூ.315 கோடி மதிப்பில், 5.58 லட்சம் சதுர அடியில் டைடல் பார்க் அமைய உள்ளது. 6 தளங்களுடன் அமைய உள்ள இந்த டைடல் பார்க்கை 18 மாதங்களில் கட்டி முடிக்க திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் இதற்கான கட்டுமான பணிகளுக்கு டெண்டர் கோரியது தமிழக அரசு. மேலும் இதன் மூலம் 5000 பேருக்கு வேலை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஷேர் செய்யவும்
நாம் தமிழர் கட்சியினர் வெளியிட்ட அவதூறு பதிவுகளை நீக்க கோரி எஸ்.பி. வருண்குமார் மனு அளித்துள்ளார். பதிவுகளை வெளியிட்டவர்கள் தொடர்பான தகவல்களை வெளியிடக் கோரியும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இதுதொடர்பாக மத்திய அரசு, எக்ஸ் வலைதள பொறுப்பு அதிகாரி பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
திருச்சி மாநகராட்சி ஆணையர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்:திருச்சி வார்டு எண் 39,42,43ஆகிய பகுதிகளிலுள்ள குடியிருப்புகளுக்கு புதிதாக பாதாள சாக்கடை இணைப்பிற்கான விண்ணப்பம் வழங்கப்படுவதற்கான சிறப்பு முகாம் வரும் 5ம் தேதி காலை 10 மணிக்கு பாண்டியன் மஹால், காந்தி சாலை மெயின் ரோட்டில் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு உரிய ஆவணங்களுடன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய கேட்டுக்கொண்டார்
Sorry, no posts matched your criteria.