Tiruchirappalli

News February 28, 2025

திருச்சி: ரயில் நிலையத்தில் பாதுகாப்பு படையினர் சோதனை

image

ரயில்வே பாதுகாப்பு படையினர் ரயில் நிலையங்களில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று (பிப்.28) திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படையினர், வெடிகுண்டு தடுப்பு பிரிவு மற்றும் மோப்பநாய் உதவியுடன் பயணிகளின் உடைமைகளை சோதனை செய்தனர். கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் ஏதேனும் கடத்தி வரப்படுகிறதா என்பதை கண்காணிக்கும் வகையில் இந்த சோதனை நடைபெற்றது.

News February 28, 2025

பூட்டிக் கிடக்கும் கழிவறை, திருச்சியில் ரயில் பயணிகள் அவதி

image

திருச்சி ரயில் நிலையத்தில் தினமும் 100க்கும் மேற்பட்ட ரயில்கள் வந்து செல்கிறது. அதில் லட்சக்கணக்கான பயணிகள் பயணிக்கின்றனர். திருச்சி ரயில்வே நிலைய 5வது நடைமேடையில் அமைக்கப்பட்ட கழிப்பறை பூட்டியே கிடக்கிறது. இதனால் இரவு நேரங்களில் ரயில் பயணம் மேற்கொள்ளும் பெண், ஆண் பயணிகள் கழிவறைக்கு செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகின்றனர். இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News February 28, 2025

திருச்சி; சனிக்கிழமையும் பத்திரப்பதிவு அலுவலகம் இயங்கும்

image

திருச்சி மாவட்டத்தில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகங்கள் மார்ச் மாதம் முழுவதும் அனைத்து சனிக்கிழமைகளிலும் திறந்து இருக்கும். அதன்படி மார்ச் 01, 08,15, 22, 29 ஆகிய 5 சனிக்கிழமைகளிலும் பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படும். மேலும் விடுமுறை நாளில் ஆவண பதிவிற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என பத்திரப்பதிவு துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News February 28, 2025

திருச்சி: தேசிய பாதுகாப்பு வாரம் கடைபிடிக்க உத்தரவு

image

“பாதுகாப்பும் நலனும் தான் இந்திய முன்னேற்றத்தின் அடிப்படை” என்ற கருப்பொருளுடன் 54வது தேசிய பாதுகாப்பு தினம் எதிர்வரும் மார்ச் 4ஆம் தேதி கடைப்பிடிக்கப்பட உள்ளது. இதையொட்டி திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள தொழிற்சாலைகளில் மார்ச் 4 ஆம் தேதி முதல் ஒரு வார காலம் தேசிய பாதுகாப்பு வாரமாக கடைபிடிக்க வேண்டும் என திருச்சி தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர் விமலா தெரிவித்துள்ளார்.

News February 28, 2025

பொது தேர்வுக்கான பறக்கும் படையினர் நியமனம்

image

திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத் தோ்வுகளுக்கு பறக்கும் படையில் 220 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் 1,662 அறைக் கண்காணிப்பாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான வழிகாட்டி நெறிமுறைகள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் நேற்று (பிப்.27) வழங்கப்பட்டது. திருச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா தலைமை வகித்து ஆலோசனைகளை வழங்கினார்.

News February 28, 2025

மனைவியை அரிவாள்மனையால் தாக்கிய கணவன் கைது

image

திருச்சி, உய்யகொண்டான் திருமலை பகுதியைச் சேர்ந்தவர் ருக்மணி. இவரது கணவர் சிவமுருகன். ருக்மணி வேலைக்கு செல்வது, சிவ முருகனுக்கு பிடிக்காத நிலையில், இவர்களுக்கு இடையே நேற்றைய முந்தினம் (பிப்.26) வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் சிவமுருகன், ருக்மணியை அரிவாள்மனையால் தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த ருக்மணி அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் சிவமுருகனை கைது செய்துள்ளனர்.

News February 28, 2025

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு

image

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், டெலிகம்யூனிகேசன், டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர், அக்கவுன்ட்ஸ் பிரிவில் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு மற்றும் தென்கிழக்கு உள்ளிட்ட மண்டலங்களில் மொத்தம் 457 ‘அப்ரென்டிஸ்’ பணி இடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் 32 இடங்கள் உள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலுக்கு <>iocl.com<<>> என்ற இனையத்தை அனுகலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

News February 27, 2025

கடன் மோசடி: திருச்சி காவல்துறை எச்சரிக்கை

image

கடன் மோசடிகளை தவிர்க்க பொதுமக்களுக்கு திருச்சி காவல்துறை இன்று முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், கடன் பெற விண்ணப்பிக்கும் முன், கடன் வழங்கும் நபர் அல்லது நிறுவனத்தின் உண்மைத்தன்மையை சரிபார்க்கவும், தொலைபேசி, குறுஞ்செய்திகள், மின்னஞ்சல் மூலம் உங்கள் தனிப்பட்ட மற்றும் வங்கிக் கணக்கு விவரங்களை கொடுக்க வேண்டாம் எனவும் எச்சரிக்கையுடன் இருக்கும்படி விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளது.

News February 27, 2025

திருச்சி சர்வதேச விமான நிலையம் சாதனை

image

திருச்சி பன்னாட்டு விமான நிலையம் கடந்த ஜனவரி மாதம் 1,37,583 சர்வதேச பயணிகள், 48,165 உள்நாட்டு பயணிகளை கையாண்டு சாதனை படைத்துள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1,31,651 கையாண்ட திருச்சி விமான நிலையம் முறையாக வளர்ச்சி அடைந்திருப்பதால் ஓடுதளம் விரிவுப்படுத்தப்பட்டது. சென்னையை விட வளர்ச்சி அடைந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

News February 27, 2025

வீட்டிலிருந்து துர்நாற்றம் – சடலமாக தொங்கிய நபர்

image

நேற்று (பிப்.26) திருச்சி போலீஸ் காலனியைச் சேர்ந்த ரவிசங்கர் அவரது தந்தையை பிரிந்து தனியாக வீடு எடுத்து வசித்து வந்தார். இந்நிலையில், இவரது வீட்டின் அறையில் இருந்து துர்நாற்றம் வீசியதையடுத்து வீட்டின் உரிமையாளர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, ரவிசங்கர் தூக்கில் சடலமாக கிடந்தார். உடனே, தில்லைநகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து, போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!