India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோடை வெயிலை சமாளிக்க, இன்று காலை வயலூர் ரோடு, பகுதிகளில் முலாம்பழம் விற்பனை சூடு பிடித்துள்ளது. கிலோ 100 ரூபாய்க்கு விற்றாலும் ஆரோக்கியமான குளிர்ச்சி தரும் பழம் என்பதால் மக்கள் விருப்பமுடன் வாங்கிச் செல்கின்றனர். 10 பெட்டி வாங்கினாலும் 2 நாட்களில் விற்று தீர்ந்து விடுகிறது. மேலும் வெயில் ஆரம்பித்ததில் இருந்து பழ விற்பனை படு ஜோர் என்று மகிழ்ச்சியாக இருக்கிறோம் என விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் இந்த ஆண்டு கோடை காலம் தொடங்கியது முதலில் வெப்பத்தின் தாக்கம் உச்சத்தில் இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக திருச்சி சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் சர்வ சாதாரணமாக வெயில் சதம் அடித்து வருகிறது. இதனால் மக்கள் குளிர்ச்சி தரும் பழங்களை வாங்கி சாப்பிடுகின்றனர், ஆனால் மது பிரியர்களோ ஜில் பீர்களை அதிகம் குடிக்க தொடங்கியுள்ளனர். இதனால் டாஸ்மாக் மதுபான கடைகளில் பீர் விற்பனை அதிகரித்துள்ளது.
திருச்சி பொன்மலை பட்டியை சேர்ந்த எபினனேசர் (27) நேற்று கருமண்டபத்திலிருந்து பஸ் நிலையம் நோக்கி பைக்கில் வந்தார் பைக் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மின்கம்பம் மீது மோதியது. பலத்த காயமடைந்த எபினேசரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சை பலனின்றி எபினேசர் நேற்று இரவு இறந்தார். போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
திருச்சி பொன்மலை பட்டியை சேர்ந்த எபினனேசர் (27) நேற்று கருமண்டபத்திலிருந்து பஸ் நிலையம் நோக்கி பைக்கில் வந்தார் பைக் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மின்கம்பம் மீது மோதியது. பலத்த காயமடைந்த எபினேசரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சை பலனின்றி எபினேசர் நேற்று இரவு இறந்தார். போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
காரைக்குடியைச் சேர்ந்தவர் பிரசாந்த். வீட்டை விட்டு வெளியேறி திருச்சிக்கு வந்தார். இந்நிலையில், திருச்சியில் பல்வேறு இடங்களில் சுற்றித்திரிந்த இவர் நேற்று வரகனேரி ஓடத் தெரு பகுதியில் உள்ள சாக்கடையில் சடலமாக கிடந்தார்.இச்சம்பவம் குறித்து போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் அவர் எப்படி இறந்தார்?என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் மாவட்ட அளவிலான கோடைகால பயிற்சி முகாம் நாளை முதல் மே மாதம் 13ஆம் தேதி வரை திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது. தினமும் காலை 6.30 மணி முதல் 8.30 மணி வரையும் நடைபெற உள்ளது. கூடுதல் விபரங்களுக்கு 04312420685 எண்ணை தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் பிரதீப்குமார் இன்று அறிவித்துள்ளார்.
சமயபுரம் ராமகிருஷ்ணன் பொறியியல் கல்லூரியின் இன்ஸ்டிடியூட் இன்னோவேஷன் கவுன்சில் மற்றும் உலக அறிவுசார் சொத்து தினத்தை முன்னிட்டு கருத்தரங்கு நேற்று நடந்தது. கருத்தரங்கை நிர்வாக இயக்குனர் குப்புசாமி தொடங்கி வைத்தார். கல்லூரி முதல்வர் தேவராசு சீனிவாசன் வரவேற்றார். முதன்மை விருந்தினராக ஐ இ டி எஸ் இயக்குனர் தமிழ்செல்வன் பங்கேற்று, நிதி திட்டங்கள் பற்றிய நின்றவர்கள் வழங்கினார்.
திருச்சி தென்னூர் மனோகரன், தீபா இவர்களது மகன் சாருகேஷ் (19) திருச்சி கல்லூரி ஒன்றில் 3-ஆம் ஆண்டு படித்து வருகிறார் .தன் நண்பர்கள் பலரும் வேலையில் பிளேசாகி விட்டார்கள். நாம் மட்டும் இன்னும் பிளேஸ் ஆகவில்லையே என்ற மன அழுத்தத்தில் இருந்து வந்த சாருகேஷ் ,நேற்று வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.இது குறித்த புகாரின் பேரில் தில்லை நகர் போலீஸ் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
திருச்சியில் ரயில் பயணம் செய்பவர்கள் ஐஆர்சிடிசி விற்பனை செய்யும் உணவுகள் மற்றும், ரயில் நிலையத்தில் உள்ள கடைகளில் விற்கப்படும் உறவுகளை அதிக விலை கொடுத்து வாங்கி பயன்படுத்துகின்றனர். இந்நிலை தென்னக ரயில்வே சார்பில் தமிழகத்தின் அனைத்து ரயில் நிலையங்களிலும் நேற்றிலிருந்து, 20 ரூபாய் மீல்ஸ் விற்பனை செய்யப்படுகிறது. இந்த திட்டம் ரயில் பயணிகளிடம் வரவேற்பை பெற்றுள்ளது.
திருச்சி புதிய கலையரங்கத்தில், கல்யாணமாலை நிகழ்ச்சி நேற்று தொடங்கியது. கடந்த 24 ஆண்டுகளில் 5 லட்சத்திற்கு மேலான திருமணங்களை வெற்றிகரமாக நடத்தியுள்ள கல்யாண மாலை நிகழ்ச்சி இன்று காலை 9 மணி முதல், மாலை 7 மணிவரை நடைபெற உள்ளது. நிகழ்ச்சியில் அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டு, தங்கள் பிள்ளைகளுக்கு வரன் தேடலாம். நிகழ்ச்சி ஏற்பாடுகளை, கல்யாணமாலை மோகன். மீரா மோகன், ரமேஷ் ஆகியோர் செய்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.