Tiruchirappalli

News May 5, 2024

திருச்சி:தண்ணீர், ஓஆர்எஸ் பாக்கெட்டுகள் விநியோகம்

image

திருச்சிராப்பள்ளி ரயில்வே நிலையத்தில் நேற்று பயணிகளுக்கு தண்ணீர் மற்றும் ஓ ஆர் எஸ் பாக்கெட்டுகளை வழங்க PF 5/TPJ இல் ஹைட்ரேஷன் ஹெல்ப் டெஸ்க் அமைப்பை
சேர்ந்த பாரத் சாரணர் மற்றும் வழிகாட்டிகளின் 19 கேடட்கள் வணிக ஊழியர்களுடன் சேர்ந்து 16848 SCT-MV விரைவு வண்டியில் கிட்டத்தட்ட 350 பயணிகளுக்கு தண்ணீர் மற்றும் ஓ ஆர் எஸ் பாக்கெட்டுகளை வழங்கினர்.

News May 4, 2024

ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்ற திருச்சி வீரர்

image

இளைஞர் மற்றும் விளையாட்டு ஊக்குவிப்பு சங்கம் சார்பில் மாநில அளவிலான சாம்பியன்ஷிப் விளையாட்டுப் போட்டிகள் தஞ்சாவூர் வல்லத்தில் நேற்று நடந்தது. தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதில் 12 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான மாநில அளவிலான 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் திருச்சி பிளாஸ்டர் ஸ்போர்ட்ஸ் அகாடமி வீரர் சஹான் அகமது முதலிடம் பெற்று தங்கம் வென்றார்.

News May 4, 2024

திருச்சி அருகே நான்கு பேர் கைது

image

கண்ணனூரை சேர்ந்த தினேஷ்குமார்.அப்பகுதியில் ஹைப்பர் மார்க்கெட்டில் பணிபுரிந்து வருகிறார்.அவர் நேற்று சூப்பர் மார்க்கெட்டில் இருந்தபோது மணிகண்டன், விக்னேஸ்வரன், நேதாஜி, ரமேஷ் ஆகிய நான்கு பேர் அங்கு இருந்த சில பொருட்களை திருடி செல்ல முயன்றனர். அப்போது தினேஷ் குமார் அதனைக் கேட்டபோது அவர்கள் மிரட்டி உள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் தொட்டியம் போலீசார் நான்கு பேரையும் நேற்று கைது செய்தனர்.

News May 4, 2024

திருச்சி அருகே லட்சக்கணக்கில் மோசடி 

image

திருச்சி அரியமங்கலத்தை சேர்ந்த சந்திரசேகர் பேஸ்புக்கில் ஒரு விளம்பரத்தை பார்த்தார்.தனியார் நிறுவனம் ஒன்றில் முதலீடு செய்தால் லாபம் கிடைக்கும் என கூறப்பட்டிருந்தது.அதை நம்பி 13 லட்சத்து 15, 500 ஐ முதலீடு செய்தார்.முதலீடு செய்த பணத்திற்கு அதிக லாபம் கிடைக்காததால் பணத்தை திரும்ப கேட்டுள்ளார்.கொடுக்க மறுக்கவே சைபர் கிராம் கிரைம் போலீசில் நேற்று புகார் அளித்துள்ளார்.போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News May 4, 2024

திருச்சி அருகே லட்சக்கணக்கில் மோசடி 

image

திருச்சி அரியமங்கலத்தை சேர்ந்த சந்திரசேகர் பேஸ்புக்கில் ஒரு விளம்பரத்தை பார்த்தார்.தனியார் நிறுவனம் ஒன்றில் முதலீடு செய்தால் லாபம் கிடைக்கும் என கூறப்பட்டிருந்தது.அதை நம்பி 13 லட்சத்து 15, 500 ஐ முதலீடு செய்தார்.முதலீடு செய்த பணத்திற்கு அதிக லாபம் கிடைக்காததால் பணத்தை திரும்ப கேட்டுள்ளார்.கொடுக்க மறுக்கவே சைபர் கிராம் கிரைம் போலீசில் நேற்று புகார் அளித்துள்ளார்.போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News May 3, 2024

திருச்சியில் உச்சம் தொட்ட வெயில்

image

தமிழக முழுவதும் நாளுக்கு நாள் வெப்பம் அதிகரித்து மக்களை வாட்டி வதைத்து வருகிறது.இன்று அக்னி நட்சத்திரம் எனும் கத்தரி வெயில் தொடங்கியதன் தாக்கம் திருச்சியில் இந்த ஆண்டு 7 முதல் 10 டிகிரி வரை வெப்பம் அதிகரித்துள்ளது.நேற்றைய வெப்பநிலை 109.58 வெயில் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காவிட்டால் நிலைமை மோசமாகிவிடும் என சமூக ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர்.

News May 3, 2024

மதுவினால் நேர்ந்த விபரீதம்: தகராறில் ஒருவர் கைது

image

திருச்சி கருங்குளத்தை சேர்ந்த ரங்கசாமி, ஜஸ்டின் ஆகியோர் அருகே வசிப்பவர்கள். இவர்கள் இருவரும் நேற்றும் மது அருந்திவிட்டு வாய் தகராறில் ஈடுபட்டுள்ளனர். பிரச்சனை பெரிதாகவே இருவரும் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டனர். அப்போது ஜஸ்டின், ரங்கசாமியை கடுமையாக கடித்துள்ளார். இதனை அடுத்து ரங்கசாமி அளித்த புகாரின் பேரில் போலீசார் ஜஸ்டினை நேற்று அதிரடியாக கைது செய்தனர்.

News May 3, 2024

திருச்சியின் புகழ்பெற்ற சமயபுரம் மாரியம்மன்!

image

திருச்சியில் உள்ள புகழ்பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவில், காவேரியின் வடகரையிலிருந்து சுமார் 15 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. இந்த ஊரின் புராண பெயர்களாக கண்ணபுரம், விக்ரமபுரம், மாகாளிபுரம் என்றழைக்கப்பட்டன. இக்கோயில் புராண கதை வரலாற்றைக் கொண்டது. 400 ஆண்டுகளுக்கு முந்தைய கோயிலாக இந்த சமயபுரம் மாரியம்மன் கோவில் கருதப்படுகிறது. மாரியம்மனுக்கு மாலை அணிந்து விரதமிருந்து வருவது சிறப்பானது.

News May 3, 2024

ஜமால் முகமது கல்லூரிக்கு புதிய முதல்வர்

image

திருச்சி ஜமால் முகமது கல்லூரியின் புதிய முதல்வராக ஜார்ஜ் அமலரத்தினம் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இதே கல்லூரியில் 36 ஆண்டுகளாக கணினி அறிவியல் துறை இணை பேராசிரியராகவும், துணைத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். புதிய முதல்வராக நியமிக்கப்பட்ட ஜார்ஜ் அமலரத்தினத்திற்கு கல்லூரியின் செயலாளரும் தாளாளருமான டாக்டர் ஏ கே காஜா நஜிமுதீன், பொருளாளர் எம்ஜிஆர் ஜமால் முகமது ஆகியோர் நேற்று வாழ்த்து தெரிவித்தனர்.

News May 2, 2024

திருச்சி ரயில்வே நிர்வாகத்தின் அறிவிப்பு

image

திருச்சி ரயில்வே செய்தி குறிப்பில் திருச்சி-தஞ்சை ரயில் திருவாரூர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.அதன்படி திருச்சி ரயில் நிலையத்தில் இருந்து மே 2 முதல் இரவு 8:25க்கு புறப்படும் தஞ்சை ரயில்,திருவாரூர் வரை நீடிக்கப்பட்டுள்ளது.இந்த ரயில் திருவாரூருக்கு இரவு 11.05க்கு சென்றடையும்.மேலும் மறு மார்க்கத்தில் மே 3முதல் திருவாரூரில் இருந்து காலை 4.45க்கு புறப்பட்டு 7 மணிக்கு திருச்சி வந்து சேரும்.

error: Content is protected !!