Tiruchirappalli

News May 16, 2024

திருச்சி மாவட்டத்தில் நேற்று பெய்த மழை விவரம்

image

திருச்சி மாவட்டம் துறையூர் வட்டத்திற்கு உட்பட்ட கொப்பம்பட்டி 0 மி.மீட்டர், தென்பரநாடு 1 மி.மீட்டர், துறையூர் 12 மி.மீட்டர் மணப்பாறை வட்டத்திற்கு உட்பட்ட மணப்பாறை 4.2 மி. மீ, பொன்னியார் டேம் 17.4 மி.மீ
மருங்காபுரி வட்டத்திற்கு உட்பட்ட கோவில்பட்டி 0 மி. மீ, மருங்காபுரி 32.4 மி. மீ முசிறி வட்டத்திற்கு உட்பட்ட முசிறி 3 மி. மீ, புலிவலம் 13 மி.மீ, மொத்தத்தில் 306.8 மில்லி மீட்டர் மழை நேற்று பதிவானது

News May 16, 2024

5,21,507 பேர் பயனடைந்துள்ளனர்

image

மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் திருச்சி மாவட்டத்தில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம், கல்லூரி மாணவிகள் பயன் பெறும் புதுமைப்பெண் திட்டம் மற்றும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் மூலமாக 5,21,507 பயனாளிகள் பயனடைந்துள்ளதாக தெரிவித்தார். மேலும் இந்த திட்டங்களால் பயனடைந்து வரும் பயனாளிகள் அரசுக்கு தங்களது நன்றியை தெரிவித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

News May 16, 2024

திருச்சியில் 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

தமிழக பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக திருச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களில் இன்று(மே 16) காலை 10 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் சில இடங்களில் மழைநீர் தேங்கலாம், போக்குவரத்து பாதிக்கப்படலாம் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News May 16, 2024

துறையூர்: இரங்கல் தெரிவித்த எடப்பாடி பழனிசாமி

image

துறையூர் ஓங்கார குடில், அகஸ்தியர் சன்மார்க்க சங்க நிறுவன ஸ்தாபகர் ரெங்கராஜன் மறைவுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கட்சி சார்பில் நேற்று(மே 15) இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், ஸ்தாபகர் ரெங்கராஜன் தேசிக சுவாமிகளை இழந்து வாடும் அவரது ஆன்மீக பக்தர்களுக்கு அதிமுக சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

News May 16, 2024

ரயில்வே பயணிகளுக்கு புதிய செயலி.

image

திருச்சிராப்பள்ளியில் உள்ள ரயில் நிலையத்தில் யூ டி எஸ் மொபைல் ஆப் பயணிகளுக்கு அறிமுகப்படுத்துவதற்கு அவர்களுக்கு உதவுவதற்கும் பிரத்யேக ஹெல்ப் டெஸ்க் இன்று தொடங்கப்பட்டது. இதன் மூலம் பயணிகளின் அனுபவத்தை நெறிப்படுத்துதல் சிரமமில்லாத டிக்கெட்டை கொடுப்பதற்கும் , பயணிகளின் பயணத்தின் மூலம் தடையின்றி செல்லவும் இந்த செயலியானது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

News May 15, 2024

தன்னை போலீசார் தாக்கினர்-சவுக்கு சங்கர்

image

பெண் போலீசாரை ஆபாசமாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கர் இன்று தற்போது திருச்சி மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் எண் 3 நீதிபதி முன்பு ஆஜர் படுத்தப்பட்டார். அப்பொழுது கோவையிலிருந்து போலீசார் தன்னை அழைத்து வரும்போது தாக்கியதாக கூறினார். அதன் காரணமாக அவருக்கு உடல் பரிசோதனை செய்ய நீதிபதி உத்தரவிட்டதன் பெயரில் போலீசார் பலத்த பாதுகாப்புடன் அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

News May 15, 2024

திருச்சி:ஆடையில் தீப்பற்றி பெண் உயிரிழப்பு

image

திருச்சி நச்சிலிப்பட்டியைச் சேர்ந்த வசந்தா(55) கடந்த 3ம் தேதி தனது வீட்டில் சமைத்துக் கொண்டிருந்தார்.அப்போது திடீரென அவரது ஆடையில் தீ பற்றியது.பின்னர் அருகில் இருந்தவர்கள் அவரை துறையூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.பின் மேல் சிகிச்சைக்காக திருச்சி ஜிஹெச்இல் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து உப்பிலியாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

News May 15, 2024

திருச்சிக்கு அழைத்து வரப்படும் சவுக்கு சங்கர்

image

பெண் காவலர்கள் குறித்து, அவதூறாக பேசிய வழக்கில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு கோயம்புத்தூர் சிறையில் வைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் அவர் இன்று நண்பர்கள் 12 மணி அளவில் திருச்சி மாவட்ட கூடுதல் மகிலா நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட உள்ளார். எனவே கோயம்புத்தூரில் இருந்து வாகன மூலம் பெண் காவலர்கள் சவுக்கு சங்கரை இன்று திருச்சி அழைத்து வந்தனர்.

News May 15, 2024

திருச்சி: திடீரென ஏற்பட்ட தீ விபத்து 

image

திருச்சி மன்னார்புரத்தில் உள்ள தனியாா் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் நேற்று விருந்து உபசரிப்பு நடைபெற்றது. இதற்காக இரண்டுக்கும் மேற்பட்ட சிலிண்டர்கள் மற்றும் அடுப்புகளை கொண்டு சமையல் பணி நடைபெற்றபோது எதிர்பாராத விதமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதையறிந்த திருச்சி தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் தீயை அணைத்தனா். இதனால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது.

News May 15, 2024

திருச்சி: ஆவின் பால் நிறுவனங்களில் கொள்ளை

image

திருச்சி காட்டூரில் உள்ள 2 ஆவின் பால் விற்பனை நிலையங்களை அதன் உரிமையாளர்கள் நேற்று திறக்க வந்தபோது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. அதனை தொடர்ந்து உள்ளே சென்று பாா்த்தபோது, கடைகளில் வைக்கப்பட்டிருந்த ரூ.20ஆயிரம் திருடு போனது தெரியவந்தது. இதையறிந்த திருவெறும்பூர் போலீஸாா் வழக்கு பதிந்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

error: Content is protected !!