India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருச்சி அமையபுரம் பகுதியைச் சேர்ந்த பிரான்சிஸ் என்பவர் கடந்த 30.4.2024ம் தேதிமூளைச்சாவு அடைந்தார்.இவரின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டது.இந்நிலையில்
இன்று திருச்சி மாவட்ட மக்கள் சக்தி இயக்கத்தின் சார்பில், அவர்களின் இல்லத்திற்கு சென்று உடல் உறுப்பு தானம் செய்த அந்த குடும்பத்தினரை பாராட்டி அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி,பாராட்டு தெரிவிக்கப்பட்டது.மேலும் சான்றிதழும், நிதி உதவியும் வழங்கப்பட்டது.
தமிழில் முன்னணி Short News செயலியான Way2News-ல் உங்களை சுற்றி நடக்கும் நிகழ்வுகள், சம்பவங்கள், கோரிக்கைகளை செய்தியாக பதிவிட்டு நீங்களும் செய்தியாளராக மாறுங்கள். ஆர்வம் உள்ளவர்கள் 9642422022, என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும். செய்தியாளராக பணியாற்றுபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
லால்குடி அருகே தண்டாங்கோரை கிராமத்தை சேர்ந்த மோகன் நேற்று மாலை வெயிலின் தாக்கத்தால் தனது அண்ணன் மகன் ரிதனுடன் (8) கண்டாங்கோரை கிராமத்துக்கு அருகில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் குளிக்கச் சென்றார். ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்ற ரிதன் தண்ணீரில் மூழ்கினான். காப்பாற்ற முயன்ற மோகனும் தண்ணீரில் மூழ்கி இறந்தார். தகவல் அறிந்த தீயணைப்புதுறையினர் இருவரது உடலையும் கைப்பற்றி வழக்கு பதிந்துள்ளனர்.
12ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கான ‘கல்லூரிக் கனவு’ நிகழ்ச்சி அட்டவணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்நிகழ்வில் சிறந்த கல்வியாளர்கள் கலந்துகொண்டு 12ம் வகுப்பிற்கு பிறகு உயர்கல்வியியல், கலை அறிவியல், பொறியியல், அறிவியல் தொழில்நுட்ப பிரிவுகள் என்னென்ன படிப்புகள் உள்ளன என்பது தொடர்பாக விரிவான தகவல்களை மாணவ, மாணவியருக்கு வழங்க உள்ளனர். அதன்படி, திருச்சியில் இன்று கல்லூரி கனவு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
திருச்சி, கரூர் பைபாஸ் சாலையில் தமிழகத்தில் முக்கியமான சுற்றுலா தளங்களில் ஒன்றான முக்கொம்பு சுற்றுலா ஸ்தலம் அருகே இன்று நண்பகல் சாலையோரம் உள்ள வயல்வெளிக்கு மர்ம நபர்கள் தீ வைத்ததால் தீ கொழுந்து விட்டு எரிந்ததால் பிரதான சாலையில் வாகன ஓட்டிகள் பெரும் அவதி அடைந்தனர். இதனை அடுத்து ஸ்ரீரங்கம் தீயணைப்பு வண்டி மற்றும் கண்டோன்மெண்ட் தீயணைப்பு வண்டி சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர்.
மணப்பாறை கோவில்பட்டி சாலையில் வசித்து வரும் இடையபட்டியை சேர்ந்த நாகராஜன் என்பவர் இன்று காலை அவரது காரை இயக்க முயன்றபோது எதிர்பாராத விதமாக தீப்பிடித்து எரிய தொடங்கியது. தகவலின் பேரில் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்த போதிலும் கார் முற்றிலுமாக எரிந்து சேதமானது. இச்சம்பவம் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ள நிலையில் இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
திருச்சி தமிழ்நாடு பார்மா டிஸ்ட்ரிபியூஷன் அசோசியேஷன் சார்பில் சத்திரம் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் ஜிஎஸ்டி பற்றிய சிறப்பு கருத்தரங்கம் நேற்று நடந்தது.மாநிலத் தலைவர் சிதம்பரம் தலைமையில் பொதுச் செயலாளர் ராஜன் வரவேற்க அமைப்புச் செயலாளர் சோமசுந்தரம் துணைத் தலைவர்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.சேலத்தைச் சேர்ந்த மூத்த வரி ஆலோசகர் ஆடிட்டர் ராஜ பாலு கலந்துகொண்டு ஜிஎஸ்டி பற்றி பேசினார்.
திருச்சியில் அமைந்துள்ள கத்தோலிக்க தேவாலயமான செயிண்ட் மேரீஸ் கேத்ரல் புனித மேரிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த தேவாலயம் ஜேசுட் மிஷனரியான Fr.Louis Carnier என்பவரால் 1839இல் கட்டத் தொடங்கப்பட்டு 1841இல் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இந்த தேவாலயம் கேத்திக் மற்றும் ரோமானஸ் பாணிகளில் கட்டப்பட்டுள்ளது. திருச்சியின் மையத்தில் அமைந்து நகருக்கு அழகு சேர்க்கிறது இத்தேவாலயம்.
தமிழ்நாட்டில் தற்போது அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெயில் தொடங்கியுள்ளது. இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் முதல் 4 டிகிரி செல்சியசுக்கும் அதிமாக வெப்பம் அதிகரித்துள்ளது.தமிழ்நாட்டில் இன்று ஓரிரு இடங்களில் வெப்ப அலை விசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று திருச்சி மாவட்டத்திற்கு வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தற்போது அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெயில் தொடங்கியுள்ளது. இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் முதல் 4 டிகிரி செல்சியசுக்கும் அதிமாக வெப்பம் அதிகரித்துள்ளது.தமிழ்நாட்டில் இன்று ஓரிரு இடங்களில் வெப்ப அலை விசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று திருச்சி மாவட்டத்திற்கு வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.