Tiruchirappalli

News May 29, 2024

திருச்சியில் 1 கிலோ தங்கம் பறிமுதல்

image

திருச்சி விமான நிலையத்திற்கு இன்று சிங்கப்பூரிலிருந்து ஸ்கூட் ஏர்லைன்ஸ் விமானம் வந்தது.அதில் பயணம் செய்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்ததில் பயணி ஒருவரிடம் நீ கேப் போன்று அணிந்து தங்கத்தை கடத்தி வந்தது தெரிய வந்தது. அவற்றை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் பயனியிடம் விசாரிக்கின்றனர். மேலும் அந்த பயணி கடத்தி வந்த தங்கத்தின் மதிப்பு 1 கோடியே 3 லட்சத்தி 13 ஆயிரத்து 257 ஆகும்.

News May 29, 2024

திருச்சி அண்ணா அறிவியல் மையம் சிறப்புகள்!

image

அண்ணா அறிவியல் மையம் என்ற கோளரங்கம், திருச்சி-புதுக்கோட்டை நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இந்த அண்ணா அறிவியல் மையம், தமிழக அரசால் ஜூன் 10, 1999 அன்று திறக்கப்பட்டது. இந்த கோளரங்கத்தின் மையமாக, சுற்றுச்சூழல் அமைப்புகள், உயிர்-புவிசார் வேதியியல் சுழற்சிகள், உயிர்-வேறுபாடு மற்றும் பாதுகாப்பு உள்ளன. இதில் “ஷார்க் தீவு”, மேஜிக் ஷோ, ரோலர் கோஸ்டர் போன்ற பல முப்பரிமாணப் படங்கள் உள்ளது.

News May 29, 2024

ஆவின் நிறுவன ஓட்டுநர்களின் போராட்டம் வாபஸ்

image

திருச்சி கொட்டப்பட்டு நிறுவனத்தில் ஒப்பந்த முறையில் செயல்படும் வேன்களுக்கான வாடகை சுமார் இரண்டு மாதமாக நிலுவையில் இருந்ததால் வேன் உரிமையாளர்கள் இன்று காலை திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 80 லட்சம் லிட்டர் பால் விநியோகம் தடைபட்டது. இந்த நிலையில் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையின் முடிவில் போராட்டத்தை வாபஸ் பெற்றனர். இன்று மாலை வழக்கம் போல் பால் விநியோகம் தொடரும் என தெரிவித்தனர்.

News May 29, 2024

திருச்சியில் ஆவின் பால் விநியோகம் பாதிப்பு!

image

திருச்சி முழுவதும் ஆவின் பால் விநியோகம் இன்று பாதிக்கப்பட்டுள்ளது. ஆவின் பால் எடுத்துச் செல்லும் வாடகை வாகன உரிமையாளர்கள், ஓட்டுநரக்ளுக்கு 4 மாதமாக வாடகை கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்த குற்றச்சாட்டை முன்வைத்து வேலைநிறுத்தம் செய்துள்ளனர். இது குறித்து நடவடிக்கை எடுக்க கோரி கொட்டப்பட்டு ஆவின் பால் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், ஆவின் பால் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

News May 29, 2024

திருச்சி:சங்கத்தின் முதலாம் ஆண்டு விழா

image

திருச்சிராப்பள்ளி அனைத்து வணிகர்கள் நல சங்கத்தின் முதலாம் ஆண்டு விழா சந்தன மஹாலில் நடைபெற்றது.விழாவுக்கு தலைவர் ராஜன் பிரேம்குமார் தலைமை வகித்தார்.விழாவில் பொதுச் செயலாளர் கணேசன் வரவேற்று பேசினார்.பொருளாளர் அன்சார் முஹம்மது,விக்னேஷ் ரவி,முத்துராஜா,சேகர் செல்லதுரை,வினோத்குமார் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி வைத்தனர்.ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் தீர்மானத்தை வாசித்தார்.உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

News May 28, 2024

வெங்காயம் மூட்டைகள் திருச்சியில் தேக்கம்

image

திருச்சி மார்க்கெட்டிற்கு வெளி மாநிலங்களில் இருந்து வெங்காயம் வருகிறது.திருச்சி மார்க்கெட்டில் இருந்து வெளி மாவட்டத்திற்கும், வெளிநாடுகளுக்கும் வெங்காயம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நிலையில் மத்திய அரசு ஏற்றுமதிக்கு 40% வரி உயர்த்தி உள்ளதால் திருச்சி மார்க்கெட்டில் உள்ள வெங்காயம் மூட்டை மூட்டையாக தேங்கி உள்ளதாக வெங்காயம் வியாபாரிகள் சங்க செயலாளர் தங்கராசு இன்று தெரிவித்தார்.

News May 28, 2024

திருச்சி மின்வாரிய அதிகாரி லஞ்ச வழக்கில் கைது

image

திருச்சி, கிராப்பட்டியில் அந்தோணி என்பவர் ஒரு வீட்டிற்கு உயர் மின்னழுத்த கம்பம் ஒன்று இடையூறாக இருப்பதால் அந்த கம்பத்தை சற்று தள்ளிப் போடுவதற்கு கிராப்பட்டியில் உள்ள உதவி செயற் பொறியாளர்,இயக்கலும் காத்தலும், மின் பகிர்மான மற்றும் உற்பத்தி கழக வணிக உதவியாளர் அன்பழகன் என்பவரை தொடர்பு கொண்டார். அன்பழகன் ரூ.20,000 லஞ்சம் கேட்டு பெற்றபோது லஞ்ச ஒழிப்புத் துறையினரால் இன்று காலை கைது செய்யப்பட்டார்.

News May 28, 2024

திருச்சி:அதிகரிக்கும் அரசு பள்ளி மாணவர் சேர்க்கை

image

திருச்சி கிழக்கு எம்எல்ஏ இனிகோ நேற்று ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை தீவிர படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.இதனால் இல்லம் தேடி கல்வி திட்டமும் முழு முயற்சியில் நடைபெற்று வருகிறது.எனவே இந்த ஆண்டு அரசு பள்ளி மாணவர் சேர்க்கை மேலும் அதிகரிக்கும் என்றும் அரசு பள்ளிகளை காப்போம் அறிவார்ந்த சமூகத்தை அமைப்போம் என பெருமிதமாக தெரிவித்துள்ளார்.

News May 27, 2024

திருச்சி ஏர்போர்ட்டில் சிக்கிய இ-சிகரெட்டுகள்

image

திருச்சி விமான நிலைய AIU அதிகாரிகள் இன்று கோலாலம்பூரில் இருந்து OD 223 Batik Airlines விமானம் மூலம் வந்த பாக்ஸ்களை சோதனை நடத்தினர். அதில், ரூ.32.12 லட்சம் மதிப்புள்ள 1285 இசிகரெட்டுகள் (VAPE) கடத்த முயன்றது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இ-சிகரெட்டுகள் இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதால் அவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

News May 27, 2024

திருச்சி அலுவலர்களுக்கு ஆய்வு கூட்டம்

image

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக அனைத்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் இன்று மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சித் தலைவருமான பிரதீப் குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் உட்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!