India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருச்சி மக்களவைத் தொகுதியின் வாக்குகள் எனப்படுகின்றன. வாக்கு என்னும் மையத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் முதல் கட்டமாக தபால் வாக்குகள் அந்தந்த தொகுதி வாரியாக ஒரே அறையில் வைத்து எண்ணும் பணி துவங்கியுள்ளது. இந்த தபால் வாக்கு எண்ணிக்கையில் தற்போது மதிமுக வேட்பாளர் துரை வைகோ தொடர் முன்னணியில் உள்ளார். 2ஆம் இடத்தில் நாம் வேட்பாளர் உள்ளார்.
நாடே எதிர்பார்க்கும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை சற்றுமுன் தொடங்கியது. அதன்படி, திருச்சி மாவட்டத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு சுற்றுகளின் முடிவுக்காக அரசியல் கட்சி முகவர்கள், அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டுள்ளனர். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன.
2024 மக்களவைத் தேர்தலில் திருச்சி தொகுதியில் மொத்தம் 67.45% வாக்குகள் பதிவாகி உள்ளன. வேட்பாளராக மதிமுக சார்பில் துரை வைகோ , அதிமுக சார்பில் கருப்பையா, நாம் தமிழர் சார்பில் ஜல்லிக்கட்டு ராஜேஷ், பாஜக சார்பில் செந்தில் நாதன் போட்டியிட்டுள்ளனர். இவர்களில் வெற்றி பெறப்போவது யார்? தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Way2News உடன் இணைந்திருங்கள்.
திருச்சி கோவில்களில் இரவு நேர பாதுகாப்பு பணிக்கான முன்னாள் படை வீரர்கள் மற்றும் ஓய்வு பெற்ற காவல் ஆளிநர்களுக்கான 18 காலியிடங்கள் பூர்த்தி செய்யப்பட உள்ளது. விண்ணப்பதாரர்கள் முன்னாள் படைவீரர்கள் அல்லது ஓய்வு பெற்ற காவல் ஆளுநர்களாக இருக்க வேண்டும், வயது 62க்கு மிகவும் இருக்க வேண்டும். தகுதி உள்ளவர்கள் திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளிக்க திருச்சி கமிஷனர் இன்று தெரிவித்துள்ளார்.
திருச்சி பாலக்கரை சங்கிலியாண்டபுரத்தைச் சோ்ந்த தம்பதியின் மகள் கடந்த 2.5 ஆண்டுகளாக சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் மூலம் காஞ்சிபுரம் மாவட்ட இளைஞா் ஒருவரை காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக அந்த இளைஞா் தன்னிடம் பேசாததால் மனஉளைச்சலில் இருந்த சிறுமி வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.இது குறித்து பாலக்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் சாட்டை துரைமுருகன் குறித்து அண்மையில் பாஜகவின் திருச்சி சூர்யா தெரிவித்த கருத்துக்கு நாம் தமிழர் கட்சியினரிடமிருந்து எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து வாசன் வேலியில் உள்ள திருச்சி சூர்யா வீட்டிற்கு சோமரசம்பேட்டை காவல் ஆய்வாளர் முகமது ஜாபர் தலைமையில் நேற்று பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது
புத்தாநத்தம் அடுத்த கட்டாரியூர் கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி
கிருஷ்ணமூர்த்தி. கும்பகோணத்தில் ஜவுளி கடை ஒன்றில் தங்கி வேலை பார்த்து வந்த நிலையில் நேற்று வழக்கம்போல் ஊருக்கு வந்தவர் வீட்டிற்கு வராமல் மது அருந்திவிட்டு எளமனம் நிழற்குடையில் இருந்தார். இந்நிலையில், இன்று மர்ம இறந்த கிடந்தார். தகவலறிந்து வந்த புத்தாநத்தம் போலீசார் அவரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொட்டியம் அருகே மேலக்கார்த்திகைப்பட்டி தெற்குத்தெருவை சேர்ந்த பொன்னன் மகன் சுப்ரமணியன் (23). இவர் நேற்று இரவு கீழக் கார்த்திகைபட்டி மாரியம்மன் கோயில் திருவிழாவிற்கு சென்று விட்டு வீட்டிற்கு சுமார் இரவு 1 மணி அளவில் நடந்து சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி
சுப்பிரமணியன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தொட்டியம் போலீசார் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.
திருச்சி தில்லை நகர் பகுதியில் கார்த்திக் வைத்தியசாலையில், அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கம் சார்பில் முன்னாள் முதல்வர் கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று டாக்டர் சுப்பையா பாண்டியன் தலைமையில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாமில் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு முகாமை தொடங்கி வைத்து, ஏழை எளிய மக்களுக்கு ரூ.4 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தொட்டியம் வட்டம் முள்ளிப்பாடியில் நேற்று இரவு திருவிழா நடத்துவது குறித்து ஊர் பொதுமக்கள் ஆலோசனை கூட்டம் நடத்தினர். இதில் தகராறு ஏற்பட்டதில் 16 வயது 12ம் வகுப்பு மாணவனை கத்தியால் குத்தியதில் பலத்த காயம் ஏற்பட்டு தொட்டியம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். காவல் உதவி ஆய்வாளர் முருகன் மூன்று பேரை கைது செய்தனர். தப்பி ஓடிய இருவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.