Tiruchirappalli

News June 1, 2024

திருச்சி அருகே மோதல்: கத்திக்குத்து

image

தொட்டியம் வட்டம் முள்ளிப்பாடியில் நேற்று இரவு திருவிழா நடத்துவது குறித்து ஊர் பொதுமக்கள் ஆலோசனை கூட்டம் நடத்தினர். இதில் தகராறு ஏற்பட்டதில் 16 வயது 12ம் வகுப்பு மாணவனை கத்தியால் குத்தியதில் பலத்த காயம் ஏற்பட்டு தொட்டியம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். காவல் உதவி ஆய்வாளர் முருகன் மூன்று பேரை கைது செய்தனர். தப்பி ஓடிய இருவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

News June 1, 2024

திருச்சி: மழைப்பொழிவு விவரம்

image

திருச்சியில் நேற்று (மே.31) பெய்த மழைப்பொழிவின் விவரத்தை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, சிறுகமணி KVK AWS பகுதியில் 3 செ.மீட்டரும், சிறுகுடி, துறையூர், தேவிமங்கலம், திருச்சி நகரம் மற்றும் ரயில் நிலையம் போன்ற பகுதிகளில் 1 செ.மீட்டரும் மழைப்பொழிவு பதிவானது.

News June 1, 2024

வார சந்தையில் பறிமுதல் செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள்

image

திருச்சி மாவட்டம், லால்குடி நகராட்சியில் இன்று வார சந்தை நடைபெற்றது. இந்த நிலையில் நகராட்சி அலுவலர்கள் வார சந்தையில் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் சந்தையில் பிளாஸ்டிக் பைகள் உபயோகப்படுத்தும் கடைகளுக்கு அபராதம் விதித்து அங்கு பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் நகராட்சி அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

News June 1, 2024

திருச்சி: உடனே பதிவு செய்ங்க.!

image

இந்திய ராணுவத்தால் அக்னி வீர் வாயு தேர்விற்கு பெங்களூரில் அமைந்துள்ள 7வது ஏர் மேன் தேர்வு மையத்தில் 3.7. 2024 முதல் 12.7.2024 வரை ஆள்சேர்ப்பு பேரணி நடத்தப்பட உள்ளது. எனவே, இதில் விருப்பமுள்ள திருச்சியைச் சேர்ந்த இசைப் பயிற்சி பெற்ற மாணவ, மாணவியர்கள் மற்றும் இசை கலைஞர்கள் www.agnipathvayu.cdac.inஎன்ற இணையதளத்தில் வரும் 5.6.2024ம் தேதிக்குள் பதிவு செய்ய மாவட்ட ஆட்சியர் இன்று தெரிவித்துள்ளார்.

News May 31, 2024

வெளிநாட்டில் செவிலியராக பணிபுரிய ஒரு அறிய வாய்ப்பு

image

வெளிநாட்டில் செவிலியராக பணிபுரிய விரும்பும் திருச்சியை சேர்ந்த தகுதி, விருப்பம் உள்ள செவிலியருக்கு உடனடியாக அயல்நாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுத்தர, தமிழ்நாடு அரசு நிறுவனமான, அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும்,வெளிநாட்டு வேலைகளுக்கான பணி காலியிடங்கள் குறித்த விவரங்களை www.omcmanpower.tn.gov.in என்ற இணையதளத்தில் பார்வையிடலாம் என ஆட்சியர் இன்று தெரிவித்துள்ளார்.

News May 31, 2024

திருச்சியில் மதுபான விற்பனை தடை

image

பாராளுமன்ற தேர்தல் 2024 வாக்கு எண்ணும் நாளினை முன்னிட்டு திருச்சியில் உள்ள மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனுடன் இணைந்து இயங்கும் மதுக்கூடங்கள் FL2 முதல் FL13 முடிய உள்ள பார்கள் அனைத்தும் 4.6.2024 அன்று காலை 10 மணி முதல் இரவு 12 மணி வரை 1 நாள் விற்பனை இன்றி மூடப்பட்டிருக்கும். மேலும் இதனை மீறி பார்கள் செயல்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாவட்ட ஆட்சியர் இன்று தெரிவித்துள்ளார்.

News May 31, 2024

ஜமால் முகமது கல்லூரியில் ஆய்வு செய்த ஆட்சியர்

image

பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை ஒட்டி திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் நாள்தோறும் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார் அந்த வகையில் இன்று ஜமால் முகமது கல்லூரியில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் வாக்குப்பதிவு இயந்திரங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

News May 31, 2024

திருச்சியில் 2 பேர் மீது பாய்ந்த குண்டாஸ்.!

image

திருச்சியில் கடந்த 3.5.2024ம் தேதி நடந்து சென்ற சுமை தூக்கும் தொழிலாளி ஒருவரை ஆபாசமாக பேசி அரிவாளால் தாக்கி கொலை முயற்சி செய்ததாக மாரிமுத்து, வாசுதேவன் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் மாரிமுத்து மீது கொலை வழக்கு உட்பட 4 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிய வந்ததால் மாரிமுத்து மற்றும் வாசுதேவன் ஆகிய இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க திருச்சி கமிஷனர் நேற்று உத்தரவிட்டார்.

News May 31, 2024

திருச்சி இன்று மழைக்கு வாய்ப்பு

image

திருச்சி மாவட்டத்தில் இன்று (மே.31) இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருச்சியில் இன்று இடி மற்றும் மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கோடையில் பெய்து வந்த மழை சமீபமாக குறைந்து வெப்பம் அதிகரித்து வருகிறது ஓரிரு இடங்களில் மட்டுமே குறைந்தளவு மழைப்பொழிவு பதிவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

News May 31, 2024

திருச்சி வாக்கு எண்ணிக்கை மையத்தை “விசிட்” அடித்த ஆட்சியர்.!

image

திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள, திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையத்தினை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான பிரதீப் குமார் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் அங்கு பாதுகாப்பு பணியில் இருக்கும் காவல்துறையினரிடமும் , ராணுவ துறையினரிடமும் தீவிரமாக வாக்கு எண்ணிக்கை மையத்தை கண்காணிக்க உத்தரவிட்டார்.

error: Content is protected !!