India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கலைப்புலி ராஜா மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து நவீன் என்பவரை படுகொலை செய்த வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கலைப்புலி ராஜாவை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் சிறுகனூர் அருகே அவர் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் அங்கு சென்று பிடிக்க முயன்ற போது அவர் தப்பி ஓடிய நிலையில் போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். ராஜா தற்போது அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
திருச்சி விமான நிலையத்திற்கு நேற்று இரவு சிங்கப்பூரிலிருந்து வந்த ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் ஆண் பயணி ஒருவர் மூட்டுக்கு போடும் நீ கேப்ஸில் 1 கிலோ 65 கிராம் எடையுள்ள தங்கத்தை கடத்தி வந்தது தெரிய வந்தது. மேலும் அவற்றின் இந்திய மதிப்பு ரூ.1 கோடியே 16 லட்சம் என அதிகாரிகள் இன்று தெரிவித்தனர்.
திருச்சி மாவட்டத்தில் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில், காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் ஆசிரியர் தகுதி தேர்வில் டெட் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பத்தினை நேரடியாகவோ அல்லது potribaltry@gmail.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க ஆட்சியர் நேற்று தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டத்தில் காரீப் பருவத்தின் தோட்டக்கலை பயிர்களான, வாழை, வெங்காயம், மரவள்ளி மற்றும் மஞ்சள் பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகள் அந்தநல்லூர்,மணிகண்டம், திருவெறும்பூர்,முசிறி, துறையூர்,வையம்பட்டி, மணச்சநல்லூர் வட்டாரங்களில் பயிர் காப்பீட்டிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள பீர்காவில் 2024-2025ம் ஆண்டு காரீப் பருவத்திற்கு பயிர் காப்பீடு செய்து கொள்ள ஆட்சியர் இன்று அழைப்பு விடுத்துள்ளார்.
திருச்சியில் இன்று செய்தியாளர்களுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டியளித்தார். அதில், என்னைப் பற்றி தொடர்ந்து அவதூறாக கருத்துக்களை தெரிவித்து வரும் திமுக செய்தி தொடர்பாளர் ஆர் எஸ் பாரதிக்கு ரூ.1கோடி நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பினேன். அதற்கு இதுவரை பதில் இல்லை. எனவே, இதை அவதூறு வழக்காக மாற்றி வரும் செவ்வாய்க்கிழமை நானே நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி வழக்கை நடத்தவிருக்கிறேன் என்றார்.
கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியர்கள், வேதியர்கள், பாடகர்கள், கல்லறை பணியாளர்களுக்கு நலவாரியம் அமைக்கப்பட உள்ளது. இந்த வாரியத்தில் உறுப்பினராக சேர்வதற்கு விண்ணப்ப படிவம் திருச்சி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ள ஆட்சியர் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடைபெற உள்ள பர்சனல் அசிஸ்டன்ட் ஆபிஸர் தேர்வு, ஜூலை 7ஆம் தேதி திருச்சி மாவட்டத்தில் 9 தேர்வு மையங்களில் நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 3,370 பேர் தேர்வு எழுதுகின்றனர். மேலும், 3 ஆண் காவலர்கள், 2 பெண் காவலர்கள் என மொத்தம் 5 காவலர்கள் கண்காணிப்பு பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று மாவட்ட ஆட்சியர் இன்று தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாய விலை கடைகளிலும் ஜூன்-2024ம் மாதத்திற்கு துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பெற, தகுதியான குடும்ப அட்டைதாரர்களில், இதுவரை வாங்காத குடும்ப அட்டைதாரர்கள் ஜூலை மாதம் முழுவதும் பாமாயில், துவரம்பருப்பு பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் இன்று தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குருப் 2 ஏ தேர்வுக்கான அறிவிப்பாணையை வெளியிட்டது. மேலும் இந்த தேர்வானது வரும் 14.9.2024ம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்வினை போட்டி தேர்வுகள் சிறப்பாக எதிர்கொள்ளும் வகையில், சிறப்பு கட்டணம் இல்லா இலவச பயிற்சி வகுப்பு திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் 8.7.2024ம் தேதி காலை 10 மணிக்கு துவங்க உள்ளது என ஆட்சியர் இன்று தெரிவித்துள்ளார்.
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த உதவி தொகையினை பெற மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, ஆதார் கார்டு, வங்கி கணக்கு புத்தகம் தேவை. தகுதி உள்ளவர்கள் www.tnesevai.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என ஆட்சியர் இன்று தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.