India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவெறும்பூர் வட்டம், சூரியூர் மற்றும் இலந்தைப்பட்டி கிராமத்தில் சிப்காட் அமைய உள்ள இடத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா ஆகியோர் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள படைவீரர்கள், முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம், வரும் ஜூலை.19 அன்று பிற்பகல் 3.30 மணிக்கு திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெறவுள்ளது. இதில், பெறப்படும் மனுக்கள் அந்தந்த துறை அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டு விரைவில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த படைவீரர்கள், முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோருக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் வரும் வெள்ளிக்கிழமை 17ஆம் தேதி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளதாக ஆட்சியர் பிரதீப் குமார் இன்று அறிவித்துள்ளார். இதில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த படை வீரர்கள், முன்னாள் படை வீரர்கள், அவர்களின் குடும்பத்தினர் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை மனுவாக அளிக்கலாம்.
திருச்சியில் இன்று பல்வேறு மாவட்ட வழக்கறிஞர்கள் பேரணியில் ஈடுபட்டனர். பேரணிக்கு திருச்சி எம்.பி. துரை வைகோ நேரில் ஆதரவு தெரிவித்தார். இதில், “மூன்று குற்றவியல் சட்டங்களையும் நடைமுறைப்படுத்தக் கூடாது; சட்ட நிபுணர்கள், எதிர்க்கட்சி எம்பிக்கள், ஓய்வு பெற்ற நீதிபதிகளை கொண்ட குழு அமைத்து சட்டங்கள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும்” என வலியுறுத்தினர்.
திருச்சி மாவட்ட அரசு இசைப்பள்ளியில் பகுதிநேர நாட்டுப்புற கலை பயிற்சி வகுப்புகள் 12-ஆம் தேதி துவங்க உள்ளன. இதில், பாரம்பரிய கலைகள் தெருக்கூத்து, பெரியமேளம், பம்பை, கிராமிய பாடல் பயிற்சி அளிக்கப்படுகிறது. 8 ஆம் வகுப்ப தேர்ச்சி பெற்ற 17 வயதை கடந்தோர் கலந்துகொள்ளலாம். விருப்பமுள்ளோர் திருச்சியில் உள்ள இசைப்பள்ளியில் விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளலாமென ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் யு பி எஸ் சி – நர்சிங் ஆஃபீசர், ESIC தேர்வுகள் இன்று நடைபெற்றன. இந்த நிலையில் திருச்சி பெரியார் ஈவேரா கல்லூரியில் உள்ள தேர்வு மையத்தில் நடைபெற்ற தேர்வை திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இன்று புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதியின் இல்ல திருமண விழாவில் பங்கேற்பதற்காக தனி விமானம் மூலம் முதலமைச்சர் ஸ்டாலின் திருச்சிக்கு இன்று மாலை 5 மணி அளவில் வருகை தந்து, அங்கிருந்து சாலை மார்க்கமாக புதுக்கோட்டை சென்று மாலை நடைபெற உள்ள வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக இருந்தது. இந்த நிலையில் சில காரணங்களால் தற்போது திடீரென இந்த நிகழ்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.
முதல்வர் ஸ்டாலின் ஒரு நாள் பயணமாக நாளை புதுக்கோட்டை வருகிறார். விமானத்தின் மூலம் திருச்சி வரும் அவர், புதுக்கோட்டை மாவட்டத்திற்கு கார் மூலம் செல்ல உள்ளார். இதனால், அரசு பாதுகாப்பு காரணம் கருதி திருச்சி – புதுகை சாலைகளில் இன்று மாலை 6 மணி முதல் நாளை 7ம் தேதி முழுவதும் ட்ரான்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
திருச்சி மத்திய அரசு பணியாளர் யுபிஎஸ்சி சார்பில் இபிஎஃப்ஓ தனி உதவியாளர் மற்றும் இஎஸ்ஐசி நர்சிங் அலுவலர்களுக்கான தேர்வு நாளை(7ம் தேதி) காலை 9.30 மணி முதல் 11:30 மணி வரை, பிற்பகல் 2 முதல் 4 மணி வரையிலும் நடைபெற உள்ளது. திருச்சி மாவட்டத்தில் ஒன்பது மையங்களில் நடைபெறும் தேர்வை 3,370 தேர்வாளர்கள் எழுத உள்ளனர். இத்தகவலை கலெக்டர் பிரதீப் குமார் அறிவித்துள்ளார்.
திருச்சியில் நாட்டுப்புற கலை பயிற்சி மைய மாவட்ட அரசு இசைப்பள்ளியில் இலவசமாக நாட்டுப்புற கலை பயிற்சி வழங்கப்பட உள்ளது. இப்பயிற்சி வகுப்பில் நாடகம், கரகாட்டம்,சிலம்பாட்டம் முதலிய கலைகளில் 17 வயதுக்கு மேற்பட்ட எந்த வயதினரும் சேர்ந்து கொள்ளலாம். இந்தப் பயிற்சி மையத்தில் ஆண்டு கட்டணமாக ரூ.500 செலுத்தினால் போதும். மேலும் தகவலுக்கு 0431-2962942 என்ற எண்ணை தொடர்பு கொள்ள ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.