India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருச்சி அதிமுக மாஜி அமைச்சர் பரஞ்சோதி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், நடைபெற்ற 2024 மக்களவைத்தேர்தலில் திருச்சி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் கருப்பையாவிற்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்த ஸ்ரீரங்கம் தொகுதி வாக்காள பெருமக்களுக்கும், பெரம்பலூர் வேட்பாளர் சந்திரமோகன் அவர்களுக்கு வாக்களித்த மணச்சநல்லூர், முசிறி, துறையூர் வாக்காள பெருமக்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இன்று 18 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த அறிவிப்பில், “தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன்படி, திருச்சி உள்ளிட்ட 18 மாவட்டங்களுக்கு இன்று இரவு 7 மணி வரையும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
பாராளுமன்ற பொது தேர்தல் 2024 நடத்தை விதிமுறைகள் விலக்கிக் கொள்ளப்பட்டதை தொடர்ந்து, வரும் 10.6.2024ம் தேதி திங்கட்கிழமை முதல் வழக்கம்போல் திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் தலைமையில் நடைபெறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும். எனவே பொதுமக்கள் மேயரிடம் தங்களுடைய குறைகளை மனுக்களாக வந்து நேரடியாக வழங்கலாம்.
தொட்டியம் வட்டம் காட்டுப்புத்தூரிலிருந்து சீப்ளாப்புத்தூர் சென்ற மீனவர் தெருவை சேர்ந்த அருண்குமார் என்பவர் நேற்றிரவு விபத்தில் அடிப்பட்ட இளைஞர் கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
திருச்சியில் தூய்மை, அடிப்படை வசதிகள் சரி பார்க்கும் பணிகள் தீவிரம் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு வரும் திங்கள்கிழமை திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் திறக்கப்படவுள்ளதால் முன்னேற்பாடாக புத்தகங்கள் சரிபார்ப்பு தொட்டிகள், கழிவறைகள் சுத்தம் செய்வது, மாவட்ட நிர்வாகம் அறிவிப்பின் பேரில் சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்று கொண்டுள்ளது.
திருச்சி மாவட்ட ஆட்சியர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மணப்பாறை வட்டம், வீரமலை பாளையத்தில் உள்ள துப்பாக்கி சுடும் இடத்தில் 10.6.2024 முதல் 13.7.2024 வரை காலை 7:30 மணி முதல் இரவு 10 மணி வரை சிவகங்கை குரூப் யூனிட்
பயிற்சியாளர்களால் துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெறும். இதனால்,அந்த பகுதியில் மேய்ச்சலுக்காக கால்நடைகள் மற்றும் மனித நடமாட்டம் எதுவும் இருக்கக் கூடாது என தெரிவித்துள்ளார்.
திருச்சி மெக்கானிக் ஷாப்பில் குழந்தை தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக,
நேற்று தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. உடனே அதிகாரிகள் அங்கு சென்று சோதனையிட்டபோது, பீகார் மாநிலத்தை சேர்ந்த 2 குழந்தைத் தொழிலாளர்கள் அங்கு ஈடுபட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களை மீட்ட அதிகாரிகள் இதுகுறித்து திருச்சி கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி மாவட்ட ஆட்சியர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், பாராளுமன்ற பொது தேர்தல் 2024 நடத்தை விதிமுறைகள் விளக்கிக் கொள்ளப்பட்டதை தொடர்ந்து எதிர்வரும் 10.06.2024 முதல் பிரதி திங்கட்கிழமை வழக்கம்போல் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் பொதுமக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும். எனவே பொதுமக்கள் தங்களுடைய மனுக்களை நேரடியாக வந்து வழங்கலாம் என தெரிவித்துள்ளார்.
திருச்சியில் கடந்த 26.5.2024ம் தேதி பிராட்டியூரில் கஞ்சாவை இளைஞர்களுக்கு விற்பனை செய்த வழக்கில் ரவுடி முத்துராமன் என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் விசாரணையில் ரவுடி முத்துராமன் மீது கஞ்சா விற்பனை செய்ததாக 3 வழக்கும்,1 கொலை வழக்கும், 2 திருட்டு வழக்கு உட்பட 23 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிய வந்ததால் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க திருச்சி கமிஷனர் இன்று உத்தரவிட்டார்.
திருச்சியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மாற்றம் அமைப்பின் சார்பில் இன்று திருச்சி ஜங்ஷன் பகுதியில் உள்ள கல்லுக்குழி ரயில்வே விளையாட்டு மைதானத்தில் விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பழ வகையிலான மரக்கன்றுகள் மற்றும் மக்கும் வகையிலான பைகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. மரம் வளர்ப்போம் புவிப் பந்தை பாதுகாப்போம் எனும் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.