India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருச்சி மாநகராட்சி ஆணையர் உத்தரவுபடி, இன்று திருச்சி அம்மன் நகர் குடியிருப்பு பகுதிகளில் வீடுகள் தோறும் சென்று குப்பைகளை தரம் பிரித்து வழங்குவது குறித்தும், தரம் பிரித்து வழங்குவதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை சுகாதார ஆய்வாளர்கள் மேற்கொண்டனர். மேலும் பொதுமக்கள் அனைவரும் குப்பைகளை தரம் பிரித்து வழங்குகின்றனரா எனவும் ஆய்வு செய்தனர்.
திருச்சி கொட்டப்பட்டில் உள்ள மத்திய சிறை உள்ளது. இவ்வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருந்த இலங்கையைச் சேர்ந்த அப்துல் ரியாஸ்கான் என்பவர் இன்று ஜன்னல் கம்பியை வளைத்து தப்பி ஓடிவிட்டார். மேலும் இவர் மீது 17 வழக்குகள் நிலுவையில் உள்ளது. இச்சம்பவ இடத்திற்கு திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் ரூபாய் 27 ஆயிரத்து 800ரூபாய் மதிப்பிலான காதொலி கருவிகளை பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் இன்று வழங்கினார். இந்நிகழ்வில் அரசுத் துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பொதுமக்கள் மற்றும் மாற்று திறனாளிகளிடமிருந்து நேரடியாக மாவட்ட ஆட்சியர் மனுக்களை பெற்று அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பயனாளிகளுக்கு உறுதியளித்தார். மேலும் இதில் சுமார் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று திருச்சிக்கு வருகை தருகிறார். இதையடுத்து அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொள்ள வேண்டும் என திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்சோதி, புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் குமார், திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் ஆகியோர் அறிவுறுத்தியுள்ளனர்.
திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து ஈரோடு செல்லும் அரசு பேருந்து நேற்று நள்ளிரவு முருங்கப்பேட்டை பகுதியில் எதிரில் வந்த ஆட்டோ மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்தனர். மேலும் மூன்று பேர் படுகாயம் அடைந்த நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆட்டோவில் பயணித்த அனைவரும் திருச்சி தில்லை நகர் வடவூர் பகுதி சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது.
திருச்சி மாநகராட்சியால் சாலை விரிவாக்க பணிகளுக்காக நாளை (22.07.2024) மரங்களை வெட்டும் பணிகள் மேற்கொள்ள உள்ளது. ஆகையால் 33 கே.வி. E.B. ரோடு துணை மின் நிலையத்திலிருந்து செல்லும் 11கி.வோ. வெல்லமண்டி உயரழுத்த மின்பாதையில் நாளை (22.07.2024) காலை 09:45 மணி முதல் மணி மாலை 04:00 வரை மின்சார நிறுத்தம் செய்யப்பட உள்ளது.துவரங்குறிச்சி சுற்றுவட்டார பகுதியிலும் மின்தடை அறிவிக்கபப்ட்டுள்ளது
திருச்சி மாவட்டம் பிஷப் ஹீபர் பள்ளியில் 326 தேர்வர்களும், ஹோலி கிராஸ் பள்ளியில் 318 தேர்வர்களும், ஆர்.சி பள்ளியில் 333 தேர்வர்களும், செயின்ட் ஜேம்ஸ் பள்ளியில் 143 தேர்வர்கள் என இன்று 4 தேர்வு மையத்தில் நடைபெற்ற இடைநிலை ஆசிரியர் பணிக்கான தேர்வினை மொத்தம் 1120 பேர் எழுதினர். இதற்கு 1167 பேர் விண்ணப்பித்த நிலையில் 47 பேர் தேர்வு எழுத வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
திருச்சி செயின்ட் ஜேம்ஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி தேர்வு மையத்தில் இடைநிலை ஆசிரியர் பணிக்கான தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த தேர்வினை இன்று மாவட்ட ஆட்சி தலைவர் பிரதீப் குமார் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் தேர்வு மையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் வசதிகள் குறித்தும், மாணவர்களின் வருகை குறித்தும், வினாத்தாள்கள் குறித்தும் கேட்டார்.
திருச்சி மாவட்டத்தில் அக்னி பாத் திட்டத்தின் கீழ் அக்னி வீர் வாயு ஆள்சேர்ப்பு தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியர் பிரதீப் குமார் அறிவித்துள்ளார். இதற்கு திருமணமாகாத இந்திய ஆண் மற்றும் பெண் வருகிற 28ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று இந்திய விமானப்படை அறிவித்திருந்தது. மேலும் தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் https://agnipathvayu.cdac.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
Sorry, no posts matched your criteria.