Tiruchirappalli

News June 15, 2024

திருச்சி மாவட்ட ஆட்சியர் தகவல்.!

image

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் வ.உ.சி மனமகிழ் மன்றம் திருச்சி ஆட்சியரின் முழு கட்டுப்பாட்டிற்கு மீண்டும் துவங்கப்பட உள்ளது. அங்கு டென்னிஸ் மைதானத்தின் முழு நிர்வாக பொறுப்புகள், பராமரிப்பு பணிகள் அனைத்தும் மாவட்ட விளையாட்டு, இளைஞர் நலன் அலுவலரின் மேற்பார்வை மூலம் மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும் விவரங்களுக்கு திருச்சி விளையாட்டு அலுவலகத்தை தொடர்பு கொள்ள ஆட்சியர் இன்று தெரிவித்துள்ளார்.

News June 15, 2024

திருச்சி மாநகராட்சி கடைகளுக்கு சீல்

image

திருச்சி மாவட்டம் சத்திரம் பஸ் நிலையத்தில் உள்ள மாநகராட்சி கடைகளில் இன்று பேருந்து நிலையம் உள்பகுதி ,வெளிப்பகுதி, அண்ணா சாலை, டோல்கேட் சாலை, ரவுண்டானா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வாடகை பாக்கி உள்ள கடைகளுக்கு மாநகராட்சி சார்பில் மாநகராட்சி ஊழியர்கள் பணியாளர்கள் பூட்டு போட்டும், ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றும் பணி அதிகாரிகள் தலைமையில் நடைபெற்றது.

News June 15, 2024

தூய்மை பணியுடன், மரக்கன்று நடும் பணியும் தீவிரம்.!

image

திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் இன்று 37 கிலோமீட்டர் மழை நீர் கால்வாய் சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது.அதனை தொடர்ந்து,பல்வேறு பகுதிகளில் 48,730 கிலோ தூசி மற்றும் வடிகால் வண்டல் நீக்கப்பட்டது.இறுதியாக திருச்சியில் இன்று 32 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது என திருச்சி மாநகராட்சி நிர்வாகம் இன்று காலை தகவல் தெரிவித்துள்ளது.

News June 15, 2024

லால்குடி எம்எல்ஏவின் மரண அறிவிப்பு; திமுகவில் பரபரப்பு

image

லால்குடி சட்டமன்ற எம்.எல்.ஏ சௌந்தரபாண்டியன் இயற்கை எய்ததால் அந்த தொகுதி காலியான இடமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்று எம்எல்ஏ முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள சம்பவம் இன்று பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.மேலும்,அமைச்சர் நேரு தனது முகநூல் பக்கத்தில் லால்குடி தொகுதியில் மேற்கொண்ட ஆய்வு குறித்து புகைப்படங்கள் பதிவு செய்திருந்தார்.அதற்கு தன்னை அழைக்காத காரணத்தினால் இப்படி ஒரு கமெண்ட் பதிவிட்டுள்ளார்.

News June 15, 2024

திருச்சிக்கு வந்து சேர்ந்த ராஜுவின் உடல்

image

குவைத் நாட்டில் நடந்த தீ விபத்தில் உயிரிழந்த திருச்சியை சேர்ந்த ராஜுவின் உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு நவல்பட்டு அண்ணா நகரில் உள்ள அவரது வீட்டில் இறுதி அஞ்சலிக்காக இன்று வைக்கப்பட்டது. மேலும் திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலட்சுமி ராஜுவின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி, தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட ரூபாய் 5 லட்சத்திற்கான காசோலையை ராஜுவின் மனைவியிடம் வழங்கினார்.

News June 14, 2024

திருச்சியில் 4705 பேர் தேர்வு எழுத உள்ளனர்

image

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக நடைபெற, உள்ள சிவில் சர்வீசஸ் எக்ஸாமினேஷன்ஸ் வரும் ஜூன்.14ஆம் தேதி திருச்சி மாவட்டத்தில் நடைபெற உள்ளது. மேற்படி, திருச்சியில் 12 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வினை மொத்தம் 4705 தேர்வுகள் எழுத உள்ளனர். மேலும் 12 தேர்வு கூட மேற்பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என மாவட்ட ஆட்சியர் இன்று தெரிவித்துள்ளார்.

News June 14, 2024

திருச்சி பிரபல ஹோட்டலை கையகப்படுத்த தடை

image

திருச்சி எஸ்ஆர். எம் ஹோட்டல் தரப்பில் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், ‘ஹோட்டலை அரசு கையகப்படுத்துவதை தடுத்து நிறுத்த வேண்டும்’ என வழக்கு தொடரப்பட்டது. எஸ்.ஆர்.எம் ஹோட்டல் வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி, ‘ஜூன்.18ஆம் தேதி செவரை ஹோட்டலை கையகப்படுத்தக் கூடாது’ என உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவை அடுத்து பாஜக ஐஜேகே கட்சியினர் கொண்டாடி மகிழ்ந்தனர்.

News June 14, 2024

திருச்சி ஏர்போர்ட்டில் சிக்கிய வெளிநாட்டு கரன்சிகள்

image

திருச்சி விமான நிலையத்தில் இன்று சிங்கப்பூரில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஒரு பயணியிடம் சோதனை செய்யும் போது ரூ.16,75,000 மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகளை எடுத்து வந்தது தெரிய வந்தது. இதனை பறிமுதல் செய்த திருச்சி விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் அந்த பயணியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News June 14, 2024

அந்தநல்லூர் : நிர்வாகி மரணம் இபிஎஸ் இரங்கல்

image

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், “ஸ்ரீரங்கம் தொகுதி அந்த நல்லூர், போதாவூர் ஊராட்சி செவக்காடு அதிமுக கிளை செயலாளர், ஆறுமுகம் இயற்கை எய்திய செய்தி அறிந்து அதிர்ச்சியானதாகவும், அவரது குடும்பத்தாற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு அவரின் ஆன்மா இறைவன் நிழலில் இளைப்பாற பிரார்த்திப்பதாகவும் கூறியுள்ளார்.

News June 14, 2024

குறைந்த வாடகையில் வேளாண் இயந்திரங்கள்

image

திருச்சி கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், விவசாயிகள் பயன்பெறும் வகையில், நாற்று நடும் இயந்திரம், நெல் அறுவடை இயந்திரம்,டிப்பர், வைக்கோல் சுற்றும் இயந்திரம் போன்ற வேளாண் இயந்திரங்கள் விவசாயிகளுக்கு குறைந்த வாடகைக்கு வழங்க வைக்கப்பட்டுள்ளன. மேலும், இயந்திரங்களை விவசாயிகள் முன்பதிவு செய்து குறைந்த வாடகைக்கு பெற்று உழவுப் பணிகளை மேற்கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!