Tiruchirappalli

News July 25, 2024

மாணவர்களுக்கு ஆட்சியர் அழைப்பு

image

திருச்சி மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு வருகிற ஆகஸ்ட் ஆறாம் தேதியும், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு ஆகஸ்டு ஏழாம் தேதியும் திருச்சி மாவட்டத்தில் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கான பேச்சுப் போட்டிகள் ஜோசப் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது என்று ஆட்சியர் பிரதீப் குமார் அறிவித்துள்ளார்.

News July 25, 2024

திருச்சி எஸ்ஆர்எம் ஹோட்டல் வழக்கில் திடீர் திருப்பம்

image

திருச்சி அருகே தமிழக சுற்றுலா கழகத்திற்கு சொந்தமான இடத்தில் எஸ்ஆர்எம் ஹோட்டல் உள்ளது. குத்தகை காலம் முடிந்து விட்டதால் இடத்தை காலி செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹோட்டல் நிர்வாகம் கோர்ட்டில் மனு செய்தது. இந்த மனுவின் மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. இதில் மாவட்ட நிர்வாக அதிகாரிகள், போலீசாரின் நடவடிக்கை சட்ட விரோதமானது எனக் கூறி கோர்ட் வழக்கை இன்று ஒத்தி வைத்தது.

News July 25, 2024

வேளாண் பட்டதாரிகளுக்கு ஆட்சியர் அழைப்பு

image

திருச்சி வேளாண்மை துறை மூலம், மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், வேளாண்மை பட்டப்படிப்பு முடித்த இளைஞர்கள் வேளாண் சார்ந்த தொழில் தொடங்கி தொழில் முனைவோராகும், திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு 10,12ஆம் மதிப்பெண் சான்றிதழ், தோட்டக்கலை பட்ட படிப்பிற்கான சான்றிதழ், தொழில் தொடங்க விரிவான திட்ட அறிக்கை ஆகியவற்றுடன் வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

News July 24, 2024

விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அழைப்பு.!

image

திருச்சி தோட்டக்கலை துறையின் மூலம், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.36 லட்சத்திற்கு இலக்குகள் பெறப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் தென்னையில் வாழை ஊடுபயிர் சாகுபடி செய்ய ரூ.10,000 மதிப்பில் இடுபொருட்களும், காய்கறி சாகுபடி செய்ய ரூ.8000 மதிப்பில் விதைகள், இடுபொருட்களும் வழங்க உள்ளது. விவசாயிகள் இதனை பயன்படுத்திக் கொள்ள ஆட்சியர் இன்று தெரிவித்தார்.

News July 24, 2024

வேளாண்மை பட்டதாரிகள் விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு.!

image

திருச்சி வேளாண்மை துறை மூலம், மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், வேளாண்மை பட்டப்படிப்பு முடித்த இளைஞர்கள் வேளாண் சார்ந்த தொழில் தொடங்கி தொழில் முனைவோராகும், திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு 10,12ம் மதிப்பெண் சான்றிதழ், தோட்டக்கலை பட்ட படிப்பிற்கான சான்றிதழ், தொழில் தொடங்க விரிவான திட்ட அறிக்கை ஆகியவற்றுடன் வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ள ஆட்சியர் இன்று தெரிவித்தார்.

News July 24, 2024

புதுமைப்பெண் திட்டம் விண்ணப்பிக்க அழைப்பு

image

திருச்சி மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்டம் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் இன்று அறிவித்துள்ளார். அரசு பள்ளியில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயின்ற மாணவிகள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான விபரங்களுக்கு திருச்சி மாவட்ட சமூகநல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News July 24, 2024

பாரிஸ் ஒலிம்பிக்கில் திருச்சி வீராங்கனை

image

திருச்சி மாவட்டம் திருவெறும்பூரை சேர்ந்த தடகள வீராங்கனை சுபா வெங்கடேசன் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கிறார். இந்த வீராங்கனை சுபாவிற்கு திருச்சி மாவட்ட தடகள சங்கத்தின் செயலாளர் ராஜு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்திலிருந்து ஒலிம்பிக் போட்டியில் 12 பேர் கலந்து கொள்ள உள்ளனர். அவர்களுக்கும் விளையாட்டு பயிற்சியாளர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.

News July 24, 2024

எச்சரிக்கை விடுத்த திருச்சி எஸ்.பி.

image

பெட்டவாய்த்தலை பகுதியில் ரஜினி என்பவர் மது போதையில் பெட்ரோலை கேனில் வாங்கி, தலையில் ஊற்றிக் கொண்டார். உடனே, அங்கு நின்று கொண்டிருந்த காவலர்கள் அவரை தடுத்த போது, காவலர்களை அசிங்கமான வார்த்தைகளால் பேசிய ரஜினி போலீஸாரால் கைது செய்யப்பட்டார். இதுபோன்று சட்டத்திற்கு புறம்பாக வாட்டர் கேனில் பெட்ரோல் விற்பனை செய்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி எஸ்.பி இன்று எச்சரித்துள்ளார்.

News July 24, 2024

வாகன விபத்தில் தம்பதியினர் பரிதாபமாக உயிரிழப்பு

image

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே நியூரோ ஒன் மருத்துவமனை எதிரில் இருசக்கர வாகனத்தில் சென்ற கணவன், மனைவி முன்னால் சென்ற டிப்பர் லாரியை ஓவர் டேக் செய்ய முயன்ற போது விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தின் மீது டிப்பர் லாரி ஏறியதில் கணவன், மனைவி இருவரும் தலைநசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் அங்கு சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

News July 24, 2024

திருச்சியில் புகார் எண்கள் அறிவிப்பு

image

திருச்சியில் இன்று லஞ்சம் குறித்து பொதுமக்கள் அளிக்கும் புகார் மீது டிஎஸ்பி மணிகண்டன் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் டிஎஸ்பியின் தொலைபேசி நம்பர் 9498157799 க்கு வாட்ஸ் அப் மூலம் பொதுமக்கள் எந்நேரமும் புகார் தெரிவிக்கலாம். உரிய ஆவணங்கள் இருந்தும் சான்றிதழ் வாங்க பணம் கேட்டால், பொதுமக்கள் உடனே தொடர்பு கொள்ளலாம் என லஞ்ச ஒழிப்பு துறையினர் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!