Tiruchirappalli

News June 20, 2024

திருச்சியில் 2 ரவுடிகள் மீது பாய்ந்த குண்டாஸ்.!

image

திருச்சி அரியமங்கலத்தில் கடந்த 30.4.2024ம் தேதி ரவுடி முத்துக்குமார் என்பவரை வெட்டிக்கொலை செய்த வழக்கில் 6 பேர் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் அதில் ரவுடி தங்கமணி மற்றும் ரவுடி தினேஷ் ஆகியோர் மீது திருச்சி காவல் நிலையங்களில் 13 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிய வந்ததால், இவர்கள் இருவரையும் இன்று குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க திருச்சி கமிஷனர் உத்தரவிட்டார்.

News June 19, 2024

சிமெண்ட் ஆலைக்கு அனுப்பப்பட்ட நெகிழி கழிவு.!

image

திருச்சி மாநகராட்சியில் தினசரி சேரும் குப்பைகளை மாநகராட்சி ஊழியர்கள் மக்கும் குப்பை,மக்கா குப்பை என தரம் பிரித்து உரக்கிடங்கிற்கு அனுப்பி வைத்தனர்.இந்த குப்பைகளில் மறுசுழற்சி செய்ய முடியாத நெகிழி கழிவுகள் தரம் பிரிக்கப்பட்டு மாநகராட்சி ஆணையர் சரவணன் அறிவுறுத்தலின்படி,இன்று டால்மியா சிமெண்ட் பாரத் ஆலைக்கு லாரி மூலம் கொண்டு செல்லப்பட்டது.

News June 19, 2024

திருச்சி-50,280 கிலோ தூசி அகற்றம்

image

திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் இன்று 17 கிலோமீட்டர் மழை நீர் கால்வாய் சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. அதனை தொடர்ந்து, பல்வேறு பகுதிகளில் 50,280 கிலோ தூசி மற்றும் வடிகால் வண்டல் நீக்கப்பட்டது. இறுதியாக திருச்சியில் இன்று 17 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது என திருச்சி மாநகராட்சி நிர்வாகம் இன்று தகவல் தெரிவித்துள்ளது.

News June 19, 2024

திருச்சி:இடையூறாக இருக்கும் கடைகள் அகற்றம் 

image

திருச்சி மாநகராட்சியில், பொது மக்களுக்கு இடையூறாக இருக்கும் கடைகள் அப்புறப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.அந்த வகையில் உறையூர் டாக்கர் ரோட்டில் அனுமதி இன்றி போக்குவரத்து மற்றும் நடைபாதைக்கு இடையூறாக இருந்த கடைகளை அகற்றும் பணிகள் நேற்று மேற்கொள்ளப்பட்டன.திருச்சி மாநகராட்சி உதவி ஆணையர் முன்னிலையில் சுகாதார மேற்பார்வையாளர்கள்,மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் இந்த பணிகளில் ஈடுபட்டனர்.

News June 18, 2024

திருச்சியில் 2 பேர் மீது பாய்ந்த குண்டாஸ்.!

image

திருச்சியில் தள்ளுவண்டி வியாபாரியிடம் கத்தியை காட்டி பணம் பறித்த வழக்கில் ரவுடி ராஜா என்பவரையும், வீட்டினுள் அத்துமீறி நுழைந்து பணம்,விலை உயர்ந்த கைக்கடிகாரத்தை திருடியதாக வெற்றிவேல் என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.மேலும் விசாரணையில் 2 பேர் மீதும் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்ததால், இவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க திருச்சி கமிஷனர் இன்று உத்தரவிட்டார்.

News June 18, 2024

திருச்சியில் நாளை மின் தடை

image

திருச்சியில் நாளை (19.06.2024) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் தென்னூர் துணைமின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் தில்லைநகர் கிழக்கு மற்றும் மேற்கு விஸ்தரிப்பு பகுதிகளுக்கு செல்லக்கூடிய அனைத்து பகுதிகளிலும் மின்விநியோகம் காலை 09:45 மணி முதல் மாலை 4 மணி வரை இருக்காது என செயற்பொறியாளர் தெரிவித்தார்.

News June 18, 2024

திருவெறும்பூர்: அலுவலர்கள் மீது நடவடிக்கை!

image

திருச்சி அருகே திருவெறும்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்றது.இதில், திருவெறும்பூர் வளர்ச்சி அலுவலர் ராஜா, மண்டல வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துகருப்பன் ஆகிய இருவரும் ஜமாபந்தியில் கலந்து கொள்ளவில்லை. அப்போது பங்கேற்காது ஏன்? என மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் கேட்டார். மேலும், இவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க ஆட்சியர் தாசில்தாருக்கு உத்தரவிட்டார்.

News June 18, 2024

திருச்சியில் பெண் உள்பட 4 பேர் கைது

image

திருச்சி காந்தி மார்க்கெட் போலீசார் ஜெயில் பேட்டை பகுதியில் ரோந்து சென்ற போது சந்தேகத்திற்கு இடமாக பெண் உள்பட 4 பேரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அவர்கள் கான்ஸ், விமல், புகையிலை உள்ளிட்ட தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் வைத்திருந்தது தெரிய வந்தது. சுமார் 15 கிலோ எடையுள்ள போதைபொருள் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ளது. மேலும், அவற்றை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News June 18, 2024

திருச்சி வருகிறார் எடப்பாடி பழனிசாமி!

image

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழகச் செயலாளர் பரஞ்சோதி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்: நாளை எதிர்க்கட்சி சட்டமன்ற தலைவர் எடப்பாடி பழனிசாமி திருச்சி விமான நிலையம் வருகை தருகிறார். அதனால் தலைமை கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள், செயல்வீரர்கள், தொண்டர்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க அழைப்பு விடுத்துள்ளார்.

News June 17, 2024

திருச்சி மசாஜ் சென்டரில் விபச்சாரம் – வாலிபர் கைது

image

திருச்சி மாநகரில் உள்ள மசாஜ் சென்டரில் விபச்சாரம் நடப்பதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் போலீசார் பாலக்கரை பகுதிகளில் இன்று தீவிர ரோந்து சென்றனர். அப்போது மேலப்புதூர் பகுதியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் உள்ள மசாஜ் சென்டரில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இந்த அதிரடி சோதனையின் போது அங்கு விபச்சாரம் நடந்தது தெரியவந்தது, வாலிபரை கைது செய்தனர்.

error: Content is protected !!