Tiruchirappalli

News July 28, 2024

புறநகர் காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்

image

திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் காமினி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, திருச்சி மாநகரில் பணியாற்றும் பல்வேறு காவல் நிலைய ஆய்வாளர்களையும், தேர்தல் நேரத்தில் வெளி மாவட்டமான திருவாரூர் மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்ட சிந்துநதி, அரியலூருக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்ட ராமராஜன் உள்ளிட்ட பலரை மீண்டும் திருச்சிக்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

News July 28, 2024

திருச்சி அணி அதிர்ச்சி தோல்வி

image

திருச்சி – திருப்பூர் இடையேயான TNPL போட்டி நேற்று திண்டுக்கல்லில் நடைபெற்றது. இதில் முதலில் ஆடிய திருப்பூர் அணி, 20 ஓவர்கள் முடிவில் 169 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 170 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருச்சி அணி களம் புகுந்தது. இந்நிலையில் 16.5 ஓவர்கள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து அதிர்ச்சி தோல்வியடைந்தது.

News July 27, 2024

திருச்சி – தாம்பரம் வரை ஒரு நாள் சிறப்பு ரயில்

image

திருச்சியில் இருந்து தாம்பரத்திற்கு பண்ருட்டி வழியாக 12 முன்பதிவில்லாத புகார் பெட்டிகள் கொண்ட ஒரு நாள் சிறப்பு ரயில் இயக்கம் நாளை (ஜூலை 28) இரவு 11 மணிக்கு திருச்சியிலிருந்து திருவெறும்பூர், பூதலூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், கடலூர் துறைமுகம், பண்ருட்டி, விழுப்புரம் செங்கல்பட்டு வழியாக 29ஆம் தேதி காலை 6.05க்கு தாம்பரம் செல்லும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

News July 27, 2024

காவிரி கரையோர மக்களுக்கு ஆட்சியர் எச்சரிக்கை

image

கர்நாடகா கேரளாவில் பெய்து வரும் மழையினால் மேட்டூர் அணை நாளை முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உபரி நீர் காவிரி டெல்டா பாசனத்திற்காக திறந்து விடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே காவிரி கரையோர கிராமங்களில் உள்ள மக்கள், சலவை தொழிலாளர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும், பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் இன்று (ஜூலை 27) எச்சரிக்கை விடுத்துள்ளார்.

News July 27, 2024

திருச்சியில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் உள்ள 13 மாவட்டங்களுக்கு இரவு 7 மணி வரை மிதமானது முதல் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திண்டுக்கல், தென்காசி, திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு இடியுடன் கூடிய மிதமான மழையும், நெல்லை மற்றும் குமரி மாவட்டத்திற்கு லேசான மழையும் பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 27, 2024

திருச்சியில் ஆன்மீக சுற்றுலா – ஆட்சியர் அழைப்பு

image

ஆடி மாதத்தை முன்னிட்டு திருச்சி சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சுற்றுலா துறையும், இந்து சமய அறநிலைத்துறையும் இணைந்து ஆன்மீக சுற்றுலாவிற்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த சுற்றுலாவில் திருச்சியைச் சுற்றியுள்ள அனைத்து கோவில்களுக்கும் அழைத்து செல்லப்பட உள்ளது. இதற்கான பயணத்தொகை ரூ.1100 ஆகும். விருப்பமுள்ளவர்கள் 0431-2414346 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் இன்று தெரிவித்துள்ளார்.

News July 27, 2024

தெற்கு ரெயில்வே துறைகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி

image

திருச்சி தெற்கு ரெயில்வே விளையாட்டு சங்கம் சார்பில் துறைகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி திருச்சியில் இன்று தொடங்கியது. சீரமைக்கப்பட்ட திருச்சி பெல்ஸ் மைதானத்தில் இதன் தொடக்க விழா நடந்தது. இதைத் தொடர்ந்து நடந்த போட்டியில் மருத்துவ பிரிவு அணியும், எலக்ட்ரிக்கல் பொது பிரிவு அணியும் மோதுகின்றன. மற்ற போட்டிகளில் டி.ஆர்.எம். பொது பிரிவு, மெக்கானிக்கல் பிரிவு அணிகள் கலந்து கொள்கின்றன.

News July 27, 2024

டெல்லி புறப்பட்ட திருச்சி விவசாயிகள்

image

விவசாய விளைபொருட்களுக்கு 2 மடங்கு இலாபகரமான விலை தருவதாக கூறிவிட்டு தற்போது தராமல் ஏமாற்றியதை நிறைவேற்ற கோரியும், விவசாயிகள் வாங்கிய அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் தலைநகர் டெல்லியில் சென்று போராட்டம் நடத்துவதற்காக பயணம் மேற்கொண்டனர்.

News July 27, 2024

திருச்சி விமான நிலையத்தில் ஆட்டோக்களுக்கு தடை

image

திருச்சி சர்வதேச விமான நிலையத்தின் புதிய முனையத்துக்கு ஆட்டோ போக்குவரத்துக்கு அனுமதியில்லை என்றும், ஆட்டோக்கள் நுழைய தடை என்று அறிவித்து விளம்பர பலகை திருச்சி விமான நிலையம் சார்பில் இன்று வைக்கப்பட்டுள்ளது. இந்த திடீர் உத்தரவால், ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பயணிகள் மற்றும் பொதுமக்கள் ஆட்டோக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

News July 27, 2024

அதிக வட்டி வசூலித்தால் புகார் அளியுங்கள்

image

பொன்மலை ரயில்வே பணிமனையில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் தங்களின் தேவைக்காக வட்டிக்கு பணம் வாங்கி அதை திருப்பி செலுத்த முடியாமல் பல சிக்கலுக்கு ஆளாகியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் மாத சம்பளத்தை நம்பி வட்டிக்கு பணம் கொடுக்கும் கும்பல் ஊழியர்களை குறிவைத்து மீட்டர் வட்டி, ராக்கெட் வட்டி என பணத்தை கேட்டு தொல்லை கொடுப்பார்கள். எனவே மக்களுக்கு அறிவிப்பு பலகை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!