India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருச்சி பேட்டை வாய்த்தலையை சேர்ந்த
ப. பெரியசாமி (38).இவர் தனது டூவீலரில் பெருகமணி பகுதியில் வந்து கொண்டிருந்தார்.அப்போது, சாலை தடுப்பில் மோதி கீழே விழுந்த போது அவ்வழியே வந்த டூவீலர் மோதியதில், படுகாயமடைந்த பெரியசாமி நிகழ்விடத்திலேயே இறந்தார்.இதையறிந்த பேட்டைவாய்த்தலை போலீஸார் சடலத்தை மீட்டு உடற்கூறாய்விற்கு ஶ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து பதிந்து விசாரணை நடத்தினார்கள்.
திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்: நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு, திருச்சி மாவட்டத்தில் தேர்தல் பணிக்காக 3 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், 8 காவல்துறை காவல் கண்காணிப்பாளர்கள்,36 காவல் ஆய்வாளர்கள், 263 காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் 1424 காவல் ஆளிநர்கள்,383 ஊர்காவல் படையினர் என மொத்தம் 2118 பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர், என்றார்.
திருச்சி கலை காவிரி நுண்கலை கல்லூரியில் நேற்று 19வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் சிறுபான்மையினர் ஆணைய தலைவர் எஸ். பீட்டர் அல்போன்ஸ் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை
வழங்கினார். இந்த விழாவானது கல்லூரி செயலர் எஸ்.லூயிஸ் பிரிட்டோ தலைமையில் நடைபெற்றதில் கல்லூரி முதல்வர் ப. நடராஜன் வரவேற்புரை ஆற்றினாா் . திருச்சி மறைமாவட்ட ஆயா் எஸ்.ஆரோக்யராஜ், உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பாராளுமன்ற தேர்தல் 2024-ஐ முன்னிட்டு, இன்று மாவட்ட ஆட்சியரகத்தில், மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தலைமையில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் பிரதிநிதிகள் உடனான கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில், மாநகர காவல் ஆணையர் காமினி மற்றும் மாநகர காவல் துணை ஆணையர் செல்வகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
திருச்சியில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகள் மற்றும் கல்லூரி விழாக்களில் பங்கேற்பதற்காக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று சென்றிருந்தார். அப்போது கல்லூரி நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட மரம் நடு விழாவில் மரம் நட்டார்.அப்போது வெயில் அதிகமாகி விட்ட நிலையில் நிழலுக்காக மரங்களை தேடும் நாம், நம் எதிர்காலத்திற்கு மரங்கள் வளர்க்க வேண்டும் என மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்.
திருவெறும்பூர் பள்ளி அருகே நேற்று அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா உள்ளிட்ட பொருட்களை விற்றதாக பென்னி சேவியர், முருகேசன், ஜான் தனபால் ஆகிய 3 பேரை திருச்சி எஸ்.பியின் தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேலும், விற்பனைக்கு பயன்படுத்திய 1 கார்,12 கிலோ குட்காவையும் பறிமுதல் செய்தனர். இன்று இவர்களை திருச்சி 6வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
திருச்சி விமான நிலையம் இன்று வருகை தந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிமுக புறநகர் மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி தலைமையில் உற்சாக வரவேற்பு நிகழ்வில் கலந்து கொண்டனர் முன்னாள் அமைச்சர் என் ஆர் சிவபதி மாநில எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் முன்னாள் எம்எல்ஏ செல்வராஜ் மற்றும் மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
திருச்சி தலைமை அஞ்சலக வளாகத்தில் உள்ள மத்திய மண்டல அஞ்சல்துறை தலைவர் அலுவலகத்தில் மே 5 ஆம் தேதி மண்டல அளவிலான அஞ்சல் சேவை குறைதீா் முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் பங்கேற்க, கோட்ட அளவில் ஏற்கனவே கிடைத்த பதிலில் திருப்தியடையாதவர்கள் மட்டும் தங்களது குறைகளை அனுப்பி வைக்கலாம் என மத்திய மண்டல அஞ்சல் துறை தலைவர்
நிர்மலாதேவி நேற்று அறிவித்துள்ளார்…
உறையூர் ஐஸ்வர்யா மருத்துவமனையில் பெண்களுக்கான நேரடி கலந்துரையாடல் நிகழ்ச்சி வருகின்ற 17ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி முதல் 7 மணி வரை நடைபெற உள்ளது. இதில் கர்ப்பப்பை, மார்பகம் மற்றும் சிறுநீர் சம்பந்தமான ஆலோசனைகள் இலவசமாக வழங்கப்படுகிறது. இதில் திருச்சியைச் சேர்ந்த பெண்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெற மருத்துவமனை சார்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.