India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மாணவர்களிடம் விண்வெளி அறிவியல் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் ‘யுவிகா’ இளம் விஞ்ஞானிகள் திட்டத்தை 2019ல் இஸ்ரோ அறிமுகம் செய்தது. இதன்கீழ் மாணவர்கள் விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல், செய்முறை விளக்கப் பயிற்சி அளிக்கப்படும்; இந்தாண்டுக்கான பயிற்சிக் காலம்: மே 13 – 24; விண்ணப்பிக்க இன்றே(மார்ச் 20) கடைசி நாள்; தகுதி: 9ம் வகுப்பு மாணவர்கள் மட்டுமே; விண்ணப்பிக்க: jigyasa.iirs.gov.in/yuvika.
திருச்சி, ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட திருவானைக்காவல் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதல்தளத்தில் மருந்தகம் வைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்து அதற்காக கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. மேற்கொள்ளப்படும் கட்டுமான பணிகளின் நிலை குறித்து இன்று திருச்சி மாநகராட்சி ஆணையர் வே.சரவணன் நேரில் ஆய்வு செய்தார். மேலும் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
காட்டுப்புத்தூர், திருச்சி-நாமக்கல் நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களை வழிமறித்து லஞ்சம் வாங்கியதாக ரோந்து பணியில் ஈடுபட்ட வடிவேல்,செல்வம் ஆகிய 2 எஸ்.எஸ்.ஐ,-களையும், தலைமை காவலர் பாலச்சந்திரன்,முதன்மை காவலர் சாந்தமூர்த்தி,காவலர்கள் நந்தகுமார், அண்ணாமலை ஆகிய 4 காவலர்கள் என மொத்தம் 6 போலீசார்களை ஆயுதப்படைக்கு மாற்றி இன்று திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் உத்தரவு பிறப்பித்தார்.
திருச்சி தெற்கு மாவட்ட கூத்தைப்பார் முன்னாள் பேரூர் அதிமுக செயலாளர் S.குமார் நேற்று இயற்கை எய்தினார். இச்செய்தி அறிந்து திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் எம்பியுமான ப.குமார் இன்று நேரில் சென்று உடலுக்கு மாலை அணிவித்து, அவரது குடும்பத்தினர்களுக்கு ஆறுதல் கூறினார். உடன் கூத்தைப்பார் பேரூர் செயலாளர் முத்துக்குமார் இருந்தார்.
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால் திருச்சி மாவட்டம் ஊரக பகுதி மற்றும் மாநகர பகுதியில் துப்பாக்கி உரிமம் பெற்று துப்பாக்கி வைத்திருப்போர் தங்கள் துப்பாக்கிகளை தங்கள் பகுதிக்குட்பட்ட காவல் நிலையத்தில் உடனடியாக ஒப்படைத்து ஒப்புகை சீட்டு பெற்று கொள்ள வேண்டும். தேர்தல் நடத்தை விதிகள் முடிந்த பிறகு துப்பாக்கிகளை திரும்ப பெற்றுக்கொள்ளலாமென செய்தி குறிப்பில் கலெக்டர் நேற்று தெரிவித்துள்ளார்.
திருவெறும்பூரை அடுத்த வாழவந்தான் கோட்டையை சேர்ந்த சந்திரன் . இவரும், இவரது நண்பர் தங்கராஜ் 2பேரும் ஸ்கூட்டரில் ராவுத்தான் மேடு பிரிவு சாலையில் நேற்று சென்று கொண்டிருந்தபோது, தஞ்சையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற கார் ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த சந்திரன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். தங்கராஜ் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது உயிரிழந்தார்.
திருச்சி சாரநாதன் பொறியியல் கல்லூரி மேலாண்மை துறை சார்பில் லக்க்ஷயா எனும் தேசிய அளவிலான பல்சுவை போட்டிகள் கல்லூரிவளாகத்தில் நேற்று நடைபெற்றது. மேலாண்மை துறை தலைவர் கார்த்திகேயன் தலைமை வகித்தார், தமிழகம் முழுவதிலிருந்தும் 25 கல்லூரிகளை சேர்ந்த 325 மாணவ மாணவியர் கலந்து கொண்டனர் .பிஷப் ஹீபர் கல்லூரி சாம்பியன் வென்றது .வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மென் பொறியாளர் பாலாஜி சங்கர் பரிசுகளை வழங்கினார்,
திருச்சியில் கடந்த 7.9.2020ம் தேதி சிறுமியை ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்புணர்வு செய்ததாக ஜான் மேக்சிங் என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், இன்று இந்த வழக்கின் விசாரணையில், எதிரிக்கு 20 வருட சிறை தண்டனையும்,ரூ.10ஆயிரம் அபராதம் விதித்து திருச்சி மகிலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவ்வழக்கில் குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத் தந்த காவலர்களை திருச்சி கமிஷனர் பாராட்டி உள்ளார்.
திருச்சி ஆட்சியர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, திருச்சியில் 9 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள மாற்றுத்திறனாளி வாக்காளர்கள்(ம)85 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிப்பதில் ஏற்படும் சிரமத்தை தவிர்க்கும் பொருட்டு அஞ்சல் வழியில் வாக்களித்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. எனவே,
இந்தவாய்ப்பை பயன்படுத்தி கொள்ள தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 19.04.2024 அன்று நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும், அதன் தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் சார்பிலும் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், (மார்ச்.24) திருச்சி மாவட்டத்தில் முதல் கட்டமாக, தேர்தல் பிரச்சார சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார்.
Sorry, no posts matched your criteria.