Tiruchirappalli

News August 3, 2024

திருச்சியில் சர்வதேச விளையாட்டு வீரர் பங்கேற்பு

image

திருச்சி சுந்தர்நகரிலுள்ள தனியார் பள்ளியில் 45ஆம் ஆண்டு விளையாட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவிற்கு பள்ளியின் 12ஆம் வகுப்பு மாணவி சுவேதா வரவேற்புரையாற்றினார். இதில் பள்ளி தாளாளர் வீ.அன்புராஜ், பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் உயிரித் தொழில்நுட்பத் துறை பேராசிரியர் கிருஷ்ணகுமார், பள்ளி முதல்வர் க.வனிதா, சர்வதேச தடை தாண்டும் ஓட்டப் போட்டி வீரர் முத்துசாமி பங்கேற்றனர்.

News August 3, 2024

திருச்சி மாநகராட்சி திட்ட பணிகள் நிலவரம்

image

திருச்சி மாநகராட்சியில் இன்று மண்டலம் 01 – 11450 கிலோ, மண்டலம் 02 – 8542 கிலோ, மண்டலம் 03 – 8060 கிலோ, மண்டலம் 04 – 9150 கிலோ மற்றும் மண்டலம் 05 – 9450 கிலோ, மொத்தம் 46652 கிலோ தூசி மற்றும் வடிகால் வண்டல் நீக்கப்பட்டது. மேலும் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றி திரிந்த மொத்தம் 29 நாய்கள் பிடிக்கப்பட்டு நாய்கள் கருத்தடை மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன.

News August 2, 2024

திருவெறும்பூர்- விமான நிலையத்திற்கு புதிய வழித்தட பேருந்து

image

திருவெறும்பூரில் இருந்து நாவல்பட்டு ஐடி பார்க் 100 அடி ரோடு வழியாக ஐடி பார்க் ஊழியர்கள் பயன்பெறும் வகையிலும் குண்டூர் தனியார் கல்லூரி மாணவி மாணவர்கள் பயன்படும் வகையிலும் அ 100 அடி ரோடு வழியாக விமான நிலையம் வரை பேருந்துகளை இயக்க வேண்டும். திருச்சி டிராபிக் திருவேங்கடம் என்பவர் முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு மனு அளித்துள்ளார்.

News August 2, 2024

திருச்சியில் மதுபான கடையை அகற்றக்கோரி ஆர்ப்பாட்டம்

image

திருச்சி திருவெறும்பூரில் அரசு ஐடிஐ செயல்பட்டு வருகிறது. இதில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர். கல்வி நிலையத்திற்கு அருகில் செயல்படும் அரசு டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி இந்திய மாணவர் சங்கம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் திருச்சி மாநகர் மாவட்டத் தலைவர் சூர்யா தலைமை வகித்து கண்டன முழக்கம் எழுப்பினார். ஆர்ப்பாட்டத்தில் மாணவர்கள் பங்கேற்றனர்.

News August 2, 2024

ஸ்ரீரங்கத்தில் ஓபிஎஸ் சுவாமி தரிசனம்

image

அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதலமைச்சருமான ஓ பன்னீர்செல்வம் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் இன்று சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோயில் அர்ச்சகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் சார்பில் மரியாதை செய்யப்பட்டது. பின்னர் சுவாமியை வழிபட்ட அவருக்கு மங்களப் பொருட்கள் வழங்கப்பட்டன.

News August 2, 2024

திருச்சியில் இங்கு செல்ல தடை

image

மணப்பாறை அடுத்த வீரமலை பாளையத்தில் உள்ள துப்பாக்கி சுடும் இடத்தில் இந்த மாதம் 5ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை காலை 7.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையும், மாலை 7 மணி முதல் இரவு 10 மணி வரையும் 20ஆவது பீகார் குரூப் யூனிட் பயிற்சியாளர்களால் துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெற உள்ளது. அச்சமயம் மேய்ச்சலுக்காக கால்நடைகள் மற்றும் மனித நடமாட்டம் இருக்கக் கூடாது என ஆட்சியர் இன்று அறிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க

News August 2, 2024

திருச்சியில் உதவி எண்கள் அறிவிப்பு

image

திருச்சி காவிரி, கொள்ளிடம் ஆற்று கரையோர கிராமங்களில் உள்ள பொதுமக்கள், சலவை தொழிலாளர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும், தேவைப்பட்டால் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், ஆறுகளில் குளிக்கவோ, நீந்தவோ பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. மேலும், ஏதேனும் உதவி தேவைப்பட்டால் 0431-2331929 என்ற எண்ணை தொடர்பு கொள்ள திருச்சி கமிஷனர் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

News August 2, 2024

திருச்சியில் திட்டப் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம்

image

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மணிவாசன் தலைமையில், மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் முன்னிலையில் பல்வேறு துறைகளின் திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் சரவணன், உதவி ஆணையர் அமித்குப்தா, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

News August 2, 2024

கரியமாணிக்கம் பகுதியில் திடீர் ஆய்வு

image

சிறுகாம்பூர், கரியமாணிக்கம் பகுதியில் கொள்ளிடம் ஆற்றங்கரையோரம் ஏற்பட்டுள்ள மணல் அரிப்பைத் தடுக்க மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் முன்னிலையில், நீர்வளத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் கண்காணிப்பு அலுவலர் மணிவாசன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் தேவையான முன்னேற்பாடு பணிகளை விரைந்து முடிக்க தக்க அறிவுரை வழங்கினார்.

News August 2, 2024

50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பில் கலெக்டர் கைது

image

திருச்சி கேகே நகரை சேர்ந்தவர் கதிர்வேல். இவர் துவாக்குடி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வீடு கட்டுவதற்காக, மனைக்கு வரி நிர்ணயம் செய்ய வேண்டி துவாக்குடி நகராட்சி அலுவலகத்திற்கு சென்று அங்கிருந்த பில் கலெக்டர் சௌந்தரபாண்டியனிடம் முறையிட்டார். சௌந்தர பாண்டியன் 50,000 லஞ்சம் கேட்டு இன்று பெற்ற போது லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

error: Content is protected !!