India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருச்சி மாவட்டத்தில் கடந்த 2023ஆம் ஆண்டு மட்டும் நடந்த 2,426 விபத்துகளில் 720 பேர் இறந்துள்ளதாகவும், 736 பேர் படுகாயம் அடைந்ததாகவும் பயனீட்டாளர்கள் நலக்குழு ஒருங்கிணைப்பாளர் அய்யாரப்பன் தெரிவித்துள்ளார். இதில் திருச்சி மாநகரில் இந்தாண்டு மட்டும் 83 பேர் உயிரிழந்துள்ளனர், 202 பேர் காயமடைந்தனர். மேலும் முசிறி, லால்குடி, மனப்பாறை பகுதிகளில் கடந்த 7 மாதத்தில் மட்டும் 72 பேர் இறந்துள்ளனர்.
ஜூலை மாதத்தில் துவரம் பருப்பு, பாமாயில் பெற முடியாத ரேஷன் அட்டை தாரர்கள், இம்மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம். ஜூன் மாதம் துவரம் பருப்பு, பாமாயில் பெற இயலாதவர்கள், ஜூலை மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. இதனால், ஜூலை மாதத்துக்கான துவரம் பருப்பு, பாமயிலை சிலரால் பெற முடியவில்லை. எனவே, திருச்சியில் உள்ள 8,28,526 அட்டைதாரர்கள் ஜூலை மாதத்துக்கான பொருட்களை இம்மாதம் பெற்றுக் கொள்ளலாம்
திருச்சி மாவட்டம் மாவட்ட எஸ்பி வருண் குமார் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில், 1.50 லட்சம் கன அடி நீர் வருவதால் விவசாயிகள், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டுகோள் விடுத்துள்ளார். தொட்டியம் புத்தூர், நத்தம் காடுவெட்டி, ஸ்ரீ ராம சமுத்திரம், சின்ன பள்ளிபாளையம் பெரிய பள்ளிபாளையம் உள்ளிட்ட காவிரி கரையோர பகுதி மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டுகோள் விடுத்தார்.
திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தொகுதி-2 மற்றும் 2ஏ போட்டி தேர்வுக்கான மாதிரித் தேர்வு ஆகஸ்ட் 5ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1.30 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மாணவர்களுக்கு வினாத்தொகுப்பு வழங்கப்பட்டு ஓ.எம்.ஆர். விடைத்தாளில் பதிலளிக்கும் முறையில் தேர்வு நடைபெறும் என திருச்சி மாவட்ட மைய நூலக முதல்நிலை நூலகர் தனலெட்சுமி தெரிவித்துள்ளார்.
ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவில் சார்பில் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு இன்று நம்பெருமாள் அம்மா மண்டபத்தில் எழுந்தருளி, காவேரி தாய்க்கு பட்டுப் புடவை, மலர் மாலை, சந்தனம், குங்குமம், தாலி பொட்டு, அலங்காரம் உள்ளிட்ட மங்களப் பொருட்கள் அடங்கிய சீர் வரிசை பொருட்களை யானை மீது அமர்ந்து ஆற்றில் வழங்கினார். இதில் திரளான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
தமிழ்நாட்டில் இன்று 7 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது. இதில் அதிகபட்சமாக மதுரை விமான நிலையம் பகுதியில் 104.36 டிகிரி பாரன்ஹீட், தஞ்சையில் 102.2, நாகப்பட்டினத்தில் 101.48, பாளையங்கோட்டையில் 101.3, திருச்சியில் 100.94, கரூர் பரமத்தியில் 100.4 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திருச்சி மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, இணை இயக்குநர்கள், ஆர்.டி.எம்.ஏ, துணை ஆணையர்கள் உள்ளிட்ட 25 பேரை இன்று பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த வகையில் திருச்சி மாநகராட்சி துணை ஆணையர் நாராயணன் புதிதாக உருவாக இருக்கும் புதுக்கோட்டை மாநகராட்சிக்கு ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும் துணை ஆணையர் செல்வபாலாஜி, முனிசிபல் இணை ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
திருச்சி ஸ்ரீரங்கத்தில் காவிரி ஆற்றை வேடிக்கை பார்த்த கல்லூரி மாணவர் உயிரிழந்த வழக்கில், ஸ்ரீரங்கம் போலீசார் இன்று 4 பேரை கைது செய்தனர். அதில் ஸ்ரீரங்கத்தை சேர்ந்த நவீன், விஜய், 17 வயதான 2 பள்ளி மாணவர்களை கைது செய்தனர். மேலும் சரித்திர பதிவேடு குற்றவாளி சுரேஷ் என்பவரை தேடி வருகின்றனர். விசாரணையில், 5 பேரும் சேர்ந்து தான் மதுபோதையில் ரஞ்சித் கண்ணனை கட்டையால் தாக்கினோம் என்பதை ஒப்புக்கொண்டனர்.
திருச்சி ஸ்ரீரங்கத்தில் காவிரி ஆற்றை வேடிக்கை பார்க்க சென்ற மாணவர் அடித்துக்கொடூரமாக கொல்லப்பட்டது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆடி பெருக்கையொட்டி, காவிரி ஆற்றில் மக்கள் புனித நீராடி வரும் நிலையில், வேடிக்கை பார்ப்பதில் ஏற்பட்ட மோதலில், இக்கொலை அரங்கேறியுள்ளது. திருச்சி மாநகரில் அண்மைக்காலமாக அடுத்தடுத்து கொலைகள் நடப்பதால், போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.
ஆடிப்பெருக்கு விழா இன்று ( ஆக.3) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. ஸ்ரீரங்கம், அம்மா மண்டபங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன. ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசையை முன்னிட்டு காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் படித்துறை இல்லாத பகுதிகளில் பொதுமக்கள் இறங்குவதற்கும், நீராடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. படித்துறை இல்லாத 52 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.