India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருச்சி மாநகரில் பணிபுரியும் காவல் அதிகாரிகள் 5 பேர் ஸ்ரீரங்கம் காவல் நிலையத்திற்கு நேற்று இரவு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். திருச்சி கண்டோன்மென்ட், ஏர்போர்ட் உள்ளிட்ட காவல் நிலையங்களில் பணியாற்றிய காவல் அதிகாரிகள் ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு பிரிவுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை மாநகர காவல் ஆணையர் ந.காமினி நேற்று இரவு பிறப்பித்துள்ளார்.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், இலவச வீட்டு மனை பட்டா, பட்டா மாற்றுதல், ஜாதி சான்றிதழ், முதியோர் உதவித்தொகை குடும்ப அட்டை, இதர சான்று உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடமிருந்து 805 மனுக்கள் பெறப்பட்டன.
தோல் கழலை நோயிலிருந்து கால்நடைகளை பாதுகாக்க, அனைத்து விவசாயிகளும் கால்நடைகளுக்கு, தோல் கழலை நோய் தடுப்பூசிப் போட்டு கொள்ளுமாறு திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும், இத்தடுப்பூசி செலுத்தும் பணி இன்று முதல் 31-ம் வரை நடைபெறும். மேலும், கிராமங்களை தேடிவரும் கால்நடை மருத்துவர்கள் குழுவிற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என ஆட்சியர் அறிவித்தார்.
திருச்சிராப்பள்ளி மாவட்ட இளையோருக்கான தடகள போட்டிகள் வரும் 09.08.2024 மற்றும் 10.08.2024 ஆகிய நாட்கள் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது. 8 முதல் 20 வயதுக்கான தடகள போட்டி நடைபெற உள்ளது. போட்டியில் வெற்றி பெற்று தகுதியானவர்கள் மாநில, மற்றும் தேசிய அளவிலான போட்டி தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மேலும் தடகள போட்டியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் 9865249357 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
திருச்சி-கரூர் நெடுஞ்சாலையில் 1.63 ஹெக்டேர் நிலப்பரப்பில் ரூ.13.70 கோடி செலவில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் பொழுது போக்கு பூங்காவுடன் பறவைக்கூடம் அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 50 பேர் தங்கும் வகையில் மினி தியேட்டர், பூங்கா, உணவகம், ஓய்வறைகள், வாகனம் நிறுத்தும் வசதி உள்ளிட்ட பணிகள் நிறைவடைந்துள்ளன. இம்மாதத்தில் அனைத்து பணிகளும் முடிந்து திறக்கப்படும் என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக பாஜக தலைவர் மாற்றப்படலாம் என்ற தகவல் வேகமாக பரவி வரும் நிலையில், திருச்சி மாவட்ட பாஜக துணைத் தலைவர் ஜெயகர்ணா, தனது பதவியை ராஜினாமா செய்வதாகவும், அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகிக் கொள்வதாகவும், இன்று காலை அதிரடியாக அறிவித்துள்ளார். பாஜகவில் உழைப்பிற்கும் விசுவாசத்திற்கும் உரிய அங்கீகாரம் இதுவரை கிடைக்கவில்லை இந்த குற்றச்சாட்டை முன்னிறுத்தி விலகுவதாக தெரிவித்துள்ளார்.
புத்தாநத்தம், மணப்பாறை, 33 கே.வி. E.B.ரோடு, தொட்டியம் உள்ளிட்ட துணை மின் நிலையங்களில் நாளை (ஆக.6) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறவுள்ளது. அதன்படி, புத்தாநத்தம், இடையபட்டி, காவல்காரன்பட்டி, கருமலை, காந்தி மார்க்கெட், மணிமண்டபசாலை, சின்னக்கடைவீதி, பெரியகடைவீதி, மலைக்கோட்டை உள்ளிட்ட பிற பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் காவல் துறையினரை கெட்ட வார்த்தையால் சீமான் திட்டியதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சி எஸ்பி வருண்குமார் தனது வழக்கறிஞர் மூலம், நாதக ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு இன்று வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மேலும் அவரது X-தள பதிவில் பொதுமேடையில் சீமான் இப்படி தகாத வார்த்தையில் பேசினால், கடும் தண்டனை வாங்கி தருவேன் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து உங்களின் கருத்துக்களை பதிவிடவும்.
திருச்சி பெட்டவாய்த்தலை அருகே இன்று கும்பகோணத்தில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி சென்ற காய்கறி வியாபாரிகள் தங்கள் வண்டியை நிறுத்தி டீ குடித்துக் கொண்டிருந்தபோது காரில் வந்த அடையாளம் தெரியாத 5 பேர் கொண்ட கும்பல் பட்டா கத்தியை காட்டி மிரட்டி, லாரியில் வைத்திருந்த ரூ.40 லட்சத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். தகவலறிந்த போலீசார் கொள்ளை கும்பலை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொட்டியம் அருகேயுள்ள முதலிப்பட்டியில் நேற்று பட்டாசு வெடித்ததில் ஒருவர் காயம் அடைந்து நாமக்கல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் பட்டாசு விற்பனை செய்த ஏலூர்பட்டி கண்ணன், பட்டாசு வாங்கிய கோபால் ஆகிய இருவரை தொட்டியம் போலீசார் கைது செய்து சிறையில் நடத்தினர். மேலும் போலீசார் பட்டாசு விற்பனை குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.