India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. திருச்சி மாவட்டத்தில் வாக்குப்பதிவை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் ஏப்ரல் 17 முதல் ஏப்ரல் 19ஆம் தேதி வரை மூடப்படுகிறது. அதேபோல் வாக்கு எண்ணிக்கை நாளான ஜூன் 4ஆம் தேதியும் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு கருதி இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
திருச்சி விமானநிலையத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ அங்காள ஈஸ்வரி, அருள்மிகு ஸ்ரீ பீளிக்கான் முனீஸ்வரர் ஆலயத்தின் 41ம் ஆண்டு திருவிழாவையொட்டி 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம், அக்னிசட்டி எடுத்து நகர்ப்புறங்களில் ஊர்வலமாக வந்து ஸ்ரீ அங்காள ஈஸ்வரி அம்மனுக்கு அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தினர்.
முகூர்த்த நாளான இன்று முதல் 3 நாட்களுக்கு சென்னையில் இருந்து இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களில் இருந்தும் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி, சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருச்சி உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு இன்று 265 பேருந்துகளும், நாளை 350 பேருந்துகளும் இயக்கப்படும் என போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் உப கோயிலான நந்திகேஸ்வரர் திருக்கோவிலில் மராமத்து பணிகள் நடைபெற்று குடமுழுக்கு விழா நேற்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு 1ம் தேதி கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது. பின்னர் நேற்று காலை ராஜகோபுரம், செவ்வந்தி, விநாயகர், ஆஞ்சநேயர், நந்திகேஸ்வரர் சந்ததிகளுக்கு குடமுழுக்கு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
திருச்சி மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித் தலைவருமான பிரதீப் குமார், இன்று 80 வயதிற்கு மேற்பட்டவர்களை அவர்களது இல்லத்திலேயே வாக்குப்பதிவு செய்யும் நிகழ்வை, திருச்சி பொன் நகர் பகுதியில் உள்ள முதிய வாக்காளர் இல்லத்திற்கு நேரில் சென்று ஏற்பாடு செய்யப் பட்டிருக்கும், வாக்குப்பதிவு செய்யும் பணியை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
திருச்சியில் வரை இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலில் பொதுமக்கள் 100% வாக்களிக்க வேண்டும் என்பது குறித்து மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். அந்த வகையில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்ட செல்பி ஸ்டாண்டில் செல்பி எடுத்து, வாக்களிப்பது நமது தலையாய கடமை என விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
தனியார் பள்ளி பேருந்தில் மாணவர்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லையை தடுக்க வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது.அதில்,பள்ளியில் மாணவர் மனசு பெட்டி வைக்கப்பட்டு அதில் பெறப்படும் குறைகளை 24 மணி நேரத்தில் தீர்க்க வேண்டும். ஓட்டுநருக்கு போக்ஸோ சட்டம் குறித்து பயிற்சி வழங்க வேண்டும். ஓட்டுநர், உதவியாளர்கள் குறித்த விவரங்களை EMIS Portalஇல் பதிவேற்ற வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
திருச்சி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் கருப்பையாவை வெற்றி பெற வைப்பது தொடர்பான, தேர்தல் பணிகள் மேற்கொள்வது மற்றும் ஆலோசனைகள் மேற்கொள்வதற்காக தேர்தல் பணிமனை நேற்று திறக்கப்பட்டது. இதனை முன்னாள் அமைச்சர் மனோகரன், முன்னாள் எம்பி குமார், முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி, முன்னாள் எம்பி ரத்தினவேல் ஆகியோர் கூட்டாக இணைந்து குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தனர்.
தென்னூர் பாரதி நகரை சேர்ந்த சுரேந்தர் தனது நண்பருடன் குப்பநத்ததில் உள்ள பாரில் நேற்று மது அருந்தி கொண்டிருந்தார்.அங்கு வந்த குப்பனத்தை சேர்ந்த ரவுடி தினேஷ்குமார் சுரேந்தரிடம் மது கேட்டுள்ளார்.அவர் கொடுக்க மறுக்கவே தகாத வார்த்தையால் திட்டியதுடன் கத்தியால் குத்தியதில் படுகாயம் அடைந்த சுரேந்தரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து புகாரின் பேரில் தில்லை நகர் போலீசார் தினேஷை கைது செய்தனர்.
திருச்சி உறையூர் ராமலிங்க நகர் 5வது குறுக்கு தெருவை சேர்ந்த தனியார் நிறுவன மேலாளர் ராஜேஷ் (31). இவர் நேற்று காலை வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்று விட்டு நேற்று மாலை வந்த போது வீட்டின் பூட்டு திறந்து பீரோவிலிருந்த 4பவுன் தங்க நகைகள், ரூ.28ஆயிரத்தைத் திருடியது தெரியவந்தது. இதையறிந்த உறையூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினார்கள்.
Sorry, no posts matched your criteria.