India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருச்சி மாவட்டம் முசிறி அருகே பாலப்பட்டியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (55). இதே ஊரை சேர்ந்தவர் அழகேசன் (50) இருவரும் ஒரே கேணியில் தண்ணீர் எடுத்து விவசாயம் செய்து வந்தனர். இது சம்பந்தமாக இருவருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது நிலையில் பழனிச்சாமியின் மரத்தை அழகேசன் வெட்டியதாகவும் அது குறித்து கேட்டதற்கு அழகேசன் மற்றும் அவரது தந்தை உத்தண்டன் இருவரும் அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளனர்.
திருச்சி காவிரி ஆற்றில் இன்று, குளிக்க சென்ற 70 வயது மூதாட்டி ஒருவர் நிலை தடுமாறி கீழே விழுந்து நீரில் மூழ்கி பலியானார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த, கோட்டை காவல் நிலைய போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பிறகு, ஆற்றில் நீண்ட நேரம் ஆக மிதந்து கொண்டிருந்த மூதாட்டியின் சடலத்தை தீயணைப்பு துறையினர் மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
திருச்சி தனியார் மகளிர் கல்லூரியில் இன்று நடைபெற்ற பத்தாவது தேசிய கைத்தறி தின விழாவில் அமைக்கப்பட்டிருந்த கைத்தறி கண்காட்சி அரங்கை அமைச்சர் அன்பில் மகேஷ் திறந்து வைத்து நெசவாளர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், வருவாய் கோட்டாட்சியர் அருள் உள்ளிட்ட பல அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
திருச்சியில் அமைந்துள்ள ஜம்புலிங்கேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் உதவி சமையல்காரர் பணியிடம் காலியாக உள்ளது. இந்த பணிக்கு உரிய தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் உதவி ஆணையர் /செயல் அலுவலர், அருள்மிகு ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயில், திருவானைக்காவல், திருவரங்க வட்டம் என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.
திருச்சி காட்டூர் ஆயில்மில் செக்போஸ்ட்டில் 10 அடி பீடமும், 8 அடி உயரமும், 13 பொன்மொழிகள் கொண்ட முழு உருவ கருணாநிதி வெண்கல சிலை திறப்பு விழாவானது இன்று காலை தமிழக முதல்வர் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில்அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எம்எல்ஏக்கள் இனிக்கோ இருதயராஜ், அப்துல் சமது, முன்னாள் எம்எல்ஏ கே. என். சேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி அவரது உருவப்படத்திற்கு அமைச்சர் கே.என்.நேரு இன்று மலர் மாலை செலுத்தி அஞ்சலி செலுத்தினார். இதில் நிர்வாகிகள் பலரும் திமுகவினரும் பங்கேற்று கருணாநிதி உருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.
கடந்த 3ஆம் தேதி நீலகிரியை சேர்ந்த லாரி ஒன்று கும்பகோணம் சந்தையில் காய்கறிகளை இறக்கி விட்டு, வசூல் செய்த ரூ.50 லட்சத்தை நீலகிரிக்கு திருச்சி வழியாக எடுத்து செல்லும் பொழுது திருச்சி பெட்டவாய்த்தலை அருகே 6 பேர் கொண்ட கும்பல் ரூ.50 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்றனர். இந்நிலையில் திருச்சி மாவட்ட எஸ்.பி வருண்குமார் உத்தரவின் பேரில் 4 தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
திருச்சி பாலக்கரை அடுத்த முதலியார் சத்திரத்தில் செயல்படும் தின்னர் தயாரிக்கும் கம்பெனியில் இன்று, திடீரென தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடிய கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதில் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதமாகி இருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது. மேலும் தீ விபத்து எதனால் ஏற்பட்டது என விசாரணையும் நடைபெற்று வருகிறது.
திருவாரூர்-காரைக்கால் இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், திருச்சியிலிருந்து காலை 6.50 மற்றும் 8.35 மணிக்கு புறப்பட்டு காரைக்கால் வரை செல்லும் டெமு ரயில்கள் இன்று முதல் 31ம் தேதி வரை, திருச்சியிலிருந்து திருவாரூர் வரை மட்டுமே இயக்கப்படும். இந்த ரயில் திருவாரூரில் இருந்து மாலை 4.15 மணிக்கு திருச்சிக்கு புறப்பட்டு செல்லும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
மணிகண்டம் ஊராட்சி ஒன்றியம், வடக்கு அரியாவூர் ஊராட்சியில் உள்ள அங்கன்வாடி மையத்தை இன்று மாவட்ட ஆட்சி தலைவர் பிரதீப் குமார் நேரில் சென்று பார்வையிட்டு திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, குழந்தைகளின் வளர்ச்சி எடை மற்றும் உயரம் ஆகியவற்றை கண்காணித்து குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு, இருப்பு பதிவேடுகளை பார்வையிட்டார்.
Sorry, no posts matched your criteria.