India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பஞ்சப்பூர் பகுதியில் ரூ.350 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையத்தினை அமைச்சர் நேரு இன்று ஆய்வு செய்தார். மேலும் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் சரவணன் உள்ளிட்டோர் இருந்தனர்.
திருச்சி ரயில் நிலையத்தில் வந்தே பாரத் ரயிலுக்கு நேற்று உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் பல கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திருச்சி சிவா, வளர்ந்து வரும் நகரமான திருச்சிக்கு மெட்ரோ ரயில் மிகவும் அவசியம் என்றும், இந்த தேவையை கருத்தில் கொண்டு மாநில அரசு நடவடிக்கை எடுத்திருக்கிறது என்றார்.
திருச்சி மாவட்டத்தில் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடைபெறும் National Defence Academy and Naval, Combined Services Examination தேர்வு இன்று செயின்ட் ஜேம்ஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மற்றும் தனியார் பள்ளியில் நடைபெற்றது. இந்த தேர்வினை திருச்சி மாவட்ட ஆட்சி தலைவர் பிரதீப் குமார் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
திருச்சி மாவட்ட எஸ்பி வருண் குமார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், திருச்சியில் பைக் சாகசங்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொண்டு, வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். மேலும் பொதுமக்கள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில், இருசக்கர வாகன சாகசங்கள் செய்பவர்களின் விவரங்களை, 9487464651 என்ற எண்ணிற்கு பொதுமக்கள் தகவல் அளிக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார். SHAREIT
மணப்பாறை அருகே உள்ள மருங்காபுரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் மா மரங்களை வெட்டி விற்பனை செய்த முனியப்பன் மற்றும் முருகேசனை வனத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். மேலும் முனியப்பனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் மா மரத்தை மட்டுமல்லாமல் ஆம்பர்கிரிஸ் எனப்படும் திமிங்கலத்தின் வாந்தியையும் தேக்கமலை என்பவரிடம் விற்பனை செய்தது தெரியவந்ததால் அவரும் கைது செய்யப்பட்டார்.
திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சமயபுரம் சுங்கச்சாவடியில் மாதாந்திர பாஸ் கட்டணம் உயர்த்தப்பட்டு இன்று முதல் அமலுக்கு வந்தது. வாகனத்தின் வகையைப் பொறுத்து ஒரு மாதந்திர பயணத்திற்கான கட்டணம் ரூ.5 முதல் ரூ.25 வரை உயர்த்தப்பட்டுள்ளது. சலுகை ஒப்பந்தத்தின்படி கட்டண உயர்வு ஆண்டுதோறும் அமலுக்கு வருவது குறிப்பிடத்தக்கது.
திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினி தலைமையில் இன்று (செப்.1) காணாமல் போனவர்களை கண்டறிய சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் மனுதாரர்கள் தொலைந்தவர்களின் அடையாள அட்டை, புகைப்படம் மற்றும் இதர விவரங்களுடன் கலந்து கொள்ளலாம். திருச்சியில் உள்ள ஹோட்டல் அஜந்தா, கே.கே நகர் ஆயுதப்படை சமுதாய கூடம், ஸ்ரீரங்கம் சிதம்பரம் மஹால், தில்லை நகர் அருணா தியேட்டர் உள்ளிட்ட 6 இடங்களில் முகாம் நடைபெற உள்ளது.
திருச்சியில் சிறப்பாக சொந்த நூலகம் அமைத்து செயல்படுத்தி வரும் வாசகர்கள் அக்டோபர் 10ஆம் தேதிக்குள் trichyliboffice@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது மாவட்ட நூலக அலுவலர் முகவரிக்கோ விண்ணப்பங்களை கடிதம் மூலம் சமர்ப்பிக்கலாம். மேலும் விண்ணப்பிப்பவர்களின் பெயர், முகவரி, நூல்களின் எண்ணிக்கை போன்ற தகவல்களை சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் இன்று தெரிவித்தார்.
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள புனித ஜான் வெஸ்ட்ரி ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ள புத்தக திருவிழாவிற்கான இடத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் அதியமான் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
அதிமுகவின் திருச்சி புறநகர் வடக்கு, திருச்சி புறநகர் தெற்கு மாவட்டங்களின் சார்பில் வரும் செப்.7ஆம் தேதி அன்று கொள்ளிடம் பாலம் அருகே, கொள்ளிடம் தடுப்பணை தொடர்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தலைமையிலும், முன்னாள் எம்பி ப.குமார் முன்னிலையில் நடக்கும் என எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.