India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருச்சி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இன்று நடைபெற்ற சுதந்திர தின விழாவில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் 27 பயனாளிகளுக்கு 23.82 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார், உதவி ஆட்சியர் வருண் குப்தா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திருச்சியில் பணியாற்றும் உதவி போலீஸ் கமிஷனர்கள், துணை சூப்பிரண்டுகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை இன்று டிஜிபி சங்கல் ஜிவால் பிறப்பித்துள்ளார். அதன்படி, திருச்சி கன்டோன்மெண்ட் உதவி கமிஷனர் ரவிச்சந்திரன், பட்டுக்கோட்டை டிஎஸ்பியாக நியமிக்கப்படுகிறார். திருச்சி தில்லைநகர் உதவி கமிஷனர் ராஜூ, நாமக்கல் நில அபகரிப்பு தடுப்பு பிரிவு டிஎஸ்பியாக மாற்றப்படுகிறார்.
திருச்சி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் இன்று மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தார். மேலும் பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளை அவர் பார்வையிட்டார். இந்த நிகழ்வில் மாநகர காவல் ஆணையர் காமினி, திருச்சி எம் பி துரை வைகோ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திருச்சி மாவட்டத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் தற்போது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இதில் லால்குடி, மணச்சநல்லூர், மணப்பாறை, மருங்காபுரி, ஸ்ரீரங்கம், முசிறி, துறையூர் பகுதியில் மொத்தத்தில் நேற்றைய மழையின் அளவு 251.2 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. சராசரியாக 10.46 மில்லி மீட்டர் மழையின் பதிவாகியுள்ளது என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை எஸ்.பி.யாக ஷ்யாமளா தேவி பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் அவர் கூறியதாவது, திருச்சியில் பொது வினியோக திட்ட பொருட்கள் மற்றும் ரேஷன் அரிசி கடத்துபவர்கள் மற்றும் கள்ளத்தனமாக பதுக்கி வைப்பவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் தெரிவித்தார்.
திருச்சி காஜாநகரில் உள்ள பள்ளியில் 8ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ரிபாயா 10 மணி நேரம், 10 வினாடிகள் தொடர்ந்து சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்து திருச்சி மட்டுமின்றி தமிழ்நாட்டிற்கு மாவட்டத்துக்கும் பெருமை சேர்த்துள்ளார். சிலம்பம் போட்டியில் பங்கேற்று பல வெற்றிகளை பெற்ற அந்த மாணவிக்கு திருச்சி சார்பாக 2023-2024ஆம் ஆண்டுக்கான கலை இளமணி விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
திருச்சி கே.கே நகர் ஆயுதப்படை சமுதாய கூடத்தில் இன்று பொதுமக்கள் சிறப்பு குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி கலந்து கொண்டு, பொதுமக்கள் நேரில் வந்து கொடுத்த 34 மனுக்களைப் பெற்று, உரிய தீர்வு காண சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்து அறிவுரை வழங்கினார். இம்முகாமில் காவல் துறை ஆணையர்கள் கலந்து கொண்டனர்.
திருச்சி எம்.பி. துரை வைகோ செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், திருச்சி விமான நிலையத்தில் சமஸ்கிருதத்தில் கல்வெட்டு வைத்திருப்பது ஒரு சர்ச்சையை கிளப்பி மதவாத அரசியல் செய்வதற்காக தான். இது கண்டிக்கத்தக்க விஷயம். ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்கி இருப்பதாக பாஜகவினர் பொய் பிரச்சாரம் செய்து வருகிறார்கள் என்று தெரிவித்தார்.
திருச்சியில் உள்ள 404 கிராம பஞ்சாயத்துகளிலும் நாளை(ஆக.15) கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. கிராம பஞ்சாயத்திற்குட்பட்ட பஞ்சாயத்து அலுவலகத்திலோ, சமுதாய கூடத்திலோ, பொது இடத்திலோ கூட்டம் நடைபெறும். இக்கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொள்ளலாம். கிராம பஞ்சாயத்து தலைவரே கிராம சபையின் தலைவராக இருப்பார். இதில் நீங்களூம் தலைவராக முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? (அடுத்த பக்கம் திருப்பவும்)
7 நாட்களுக்கு முன் தண்டோரா மூலம் கிராம மக்களுக்கு கிராம சபை கூட்டம் குறித்து தெரிவிக்க வேண்டும். ஊராட்சி தலைவர் தகவல்களை முன்கூட்டியே தெரிவிக்கவில்லை எனில் நடவடிக்கை எடுக்கப்படும். இதில் நிறைவேற்றப்படும் தீர்மானத்தின் நகலை கிராம மக்கள் கட்டணம் இல்லாமல் பெறமுடியும். உங்கள் பகுதியை தவிர்த்து மற்ற கிராம சபை கூட்டத்தில் நீங்கள் கலந்து கொள்ளலாம். அதில் நீங்கள் பார்வையாளராக மட்டுமே இருக்க முடியும்.
Sorry, no posts matched your criteria.