India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவாரூரில் நேற்று சீமான் பேசிய பேச்சுக்கு, திருச்சி எஸ்பி வருண்குமார் இன்று பிச்சை எடுப்பது, பெண்களை ஆபாசமாக பேசுவது, நில அபகரிப்பு, ரவுடித்தனம் செய்வதை சிலர் நிறுத்தினால், நான் காக்கி சட்டையை விடுவது பற்றி யோசிக்கிறேன். நான் காக்கி சட்டையில் இருப்பது அவ்வளவு பயமுமோ? திரள் நிதியிலோ பிச்சை எடுத்ததிலோ வந்த பதவி அல்ல. சொந்த உழைப்பில் வாங்கிய வேலை என பதிலடி கொடுத்துள்ளார். SHAREIT
திருச்சி மாவட்டத்தில் அதவத்தூர், வாழாவந்தன் கோட்டை, அம்மாபேட்டை, ஸ்ரீரங்கம், கொப்பம்பட்டி, ரெங்கநாதபுரம், முருங்கப்பட்டி ஆகிய துணைமின் நிலையங்களில் நாளை (27.8.2024) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் அதை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 09:45 மணி முதல் மாலை 04:00 வரை மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரிய செயற்பொறியாளர் நேற்று தெரிவித்துள்ளார்.
வையம்பட்டி அடுத்த அமயபுரத்திலிருந்து பெரியகுளத்துபட்டியை நோக்கி நேற்று இரவு டூவீலரில் சென்று கொண்டிருந்த முத்துவேல் என்பவர் பழுதாகி நின்ற லாரியின் பின்னால் மோதியதில் பலத்த காயத்துடன் அவர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து வையம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள கொப்பம் பட்டியை சேர்ந்த செந்தில் என்பவரை அவரது நண்பர் கொலை செய்த சம்பவத்தில் ரெட்டி மாங்குடி சேர்ந்த கனகராஜ் என்பவரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். மேலும், தப்பி ஓடிய மற்றொரு குற்றவாளியான பூவரசன் என்பவனை நேற்று தனிப்படை காவல்துறையினர் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் இன்று பெரிய மிளகு பாறை பகுதியில் உள்ள திருச்சி மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மத்திய அரசு வயநாடு நிலச்சரிவு பகுதியில் சுற்றுப்பயணம் செய்து இதுவரை எந்த நிதி உதவியும் வழங்கவில்லை என தெரிவித்தார். மேலும் இதே போல் இருந்தால் ஒன்றிய அரசு 5 ஆண்டுகள் கூட நிலைத்திருக்காது எனவும் அவர் தெரிவித்தார்.
மருங்காபுரியை சேர்ந்த வீரம்மாள் என்பவருக்கு திருமணம் ஆகி 3 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் அவர் மீண்டும் கர்ப்பமாக இருந்துள்ளார். எனவே அவர் யாரிடமும் ஆலோசிக்காமல் நேற்று முன்தினம் கருக்கலைப்பு மருந்துகளை அதிகமாக எடுத்துள்ளார். இதனால் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து துவரங்குறிச்சி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சிறுகமணி வேளாண் அறிவியல் நிலையத்தில் ‘வீட்டிலேயே வளர்க்கலாம் நாட்டுக்கோழி’ என்ற தலைப்பில் கோழி வளர்ப்பு குறித்து ஒரு நாள் பயிற்சி ஆகஸ்ட் 29ஆம் தேதி அன்று நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் ஆகஸ்ட் 28ஆம் தேதி மாலைக்குள் வேளாண்மை அறிவியல் நிலையம், சிறுகமணி என்ற முகவரியில் நேரில் சென்று பதியலாம் அல்லது கீழ்கண்ட தொலைபேசி மற்றும் எண்களில் தொடர்பு கொள்ளலாம் 0431-296285.
திருவெறும்பூர் காமராஜ் நகர் பகுதியில் நேற்று பாதாள சாக்கடை தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த புலம் பெயர்ந்த தொழிலாளி ராஜ்குமார் சர்க்கார் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததை ஒட்டி திருச்சி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு பிறகு சொந்த மாநிலமான மேற்கு வங்காளத்தின் மால்டா மாவட்டத்திற்கு விமான மூலம் இன்று அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கம்யூனிஸ்ட் லெனின் மற்றும் குழுவினர் செய்திருந்தனர்.
திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண் குமார் இன்று ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில், அவதூறு பேச்சுக்கு சட்டப்படி நோட்டீஸ் அனுப்பியதற்காக, ஒரு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் தூண்டுதலில், என் குழந்தைகள், குடும்பத்தினரின் புகைப்படங்களை தரம் தாழ்ந்து சித்தரிக்கின்றனர். அதனால் X தள உரையாடல்களில் இருந்து நானும், என் மனைவியும் தற்காலிகமாக வெளியேறுகிறோம் என்று தெரிவித்துள்ளார்.
ஸ்ரீரங்கம் அய்யாளம்மன் படிதுரை பகுதியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய பறவைகள் பூங்கா அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த பணியினை இன்று மாவட்ட ஆட்சி தலைவர் பிரதீப் குமார் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் பணிகளை விரைவாக முடிக்கவும், உறுதியாகவும், தரமாகவும் கட்டி முடிக்க அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.
Sorry, no posts matched your criteria.