India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருச்சி மெட்ரோ ரயில் திட்டங்கள் குறித்து CRML நேற்று விரிவான அறிக்கை வெளியிட்டுள்ளது. இதில் வழி – 1 சமயபுரம் முதல் வயலூர் மத்தியிலான 19 கி.மீ வழித்தடத்தில் சுமார் 19 நிறுத்தங்கள் உடனும், வழி – 2 துவாக்குடி முதல் பஞ்சப்பூர் வரையிலான 26 கி.மீ வழித்தடத்தில் 26 நிறுத்தங்கள் என மொத்தம் 45 நிறுத்தங்கள் உடன் சுமார் 11000 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது.
கருமலை அடுத்த அழகாஸ்திரிபட்டியில் நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் உணவு தேடி சுற்றி திரிந்த ஆண் காட்டெருமை கன்றுக்குட்டி தனி நபருக்கு சொந்தமான கிணற்றுக்குள் தடுமாறி விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இந்நிலையில் தகவலின் பேரில் இன்று சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு மற்றும் வனத்துறையினர் பல மணி நேரம் போராடி கயிற்றின் உதவியுடன் காட்டெருமை கன்றின் உடலை மீட்டனர்.
தமிழக மகளிர் மேம்பாட்டு அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் இந்த ஆண்டுக்கான மாநில அளவிலான நவராத்திரி கண்காட்சி செப்டம்பர் 21ஆம் தேதி முதல் அக்டோபர் 6ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கண்காட்சியில் கலந்து கொள்ள ஆர்வம் உள்ள மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள், தங்களது விபரங்களை http://exhibition.mathibazzar.com என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம் என ஆட்சியர் பிரதீப் குமார் இன்று அறிவித்துள்ளார்.
திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில், திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட 2547 வாக்கு சாவடிகளின் பட்டியலை இன்று அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் உதவியாட்சியர் (பயிற்சி) அமித் குப்தா, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
வாரிசு சான்றிதழ் தர ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டுள்ளார். திருச்சி கோ.அபிஷேகபுரம் அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர் செந்தில் குமார் வாரிசு சான்றிதழ் தர ஒருவரிடம் மூன்றாயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இந்நிலையில் அவர் இன்று பணத்தை கொடுத்த பொழுது, லஞ்ச ஒழிப்புத்துறையினால் கையும் களவுமாக கைது செய்யப்பட்டார்.
திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் நாளை (ஆக.30) காலை 10 மணிக்கு திருச்சி மாநகராட்சி காமராஜ் மன்றம் லூர்துசாமி மண்டபத்தில் நடைபெற உள்ளது. எனவே, இதில் மாமன்ற உறுப்பினர்கள், வார்டு கவுன்சிலர்கள் கலந்து கொண்டு தங்களது பகுதி குறைகளை தெரிவிக்கலாம் என அறிவித்துள்ளார்.
திருச்சி ராம்ஜி நகரில் ஒரு பள்ளிக்கும், கல்லக்குடியில் உள்ள பள்ளிக்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. வெடிகுண்டு மிரட்டலை அடுத்து கல்லக்குடியில் உள்ள பள்ளியில் போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர். வெடிகுண்டு மிரட்டலை அடுத்து தனியார் பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களை பெற்றோர்கள் வீட்டுக்கு அழைத்து சென்றனர்.
வாழவந்தான் கோட்டையை சேர்ந்த ரோஷன் (19). திருச்சியில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். இவர் நேற்று திருச்சி – தஞ்சை தேசிய நெடுஞ்சாலை காட்டூரில் பைக் சாகசம் செய்து, அதை சமூக வலைதளத்திலும் பதிவிட்டாா் . இதுதொடா்பாக திருவெறும்பூா் போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து, ரோஷனை நேற்று கைது செய்து அவரது பைக்கையும் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.
திருச்சி கே.கே.நகரை சேர்ந்தவர் முருகேசன் (51). அதே பகுதியை சேர்ந்த சமது நேற்றிரவு முருகேசனை சந்தித்து பேசினார். அப்போது, தான் வாங்கிய கடனுக்காக முருகேசனை ஜாமீன் கையெழுத்து போடும்படி சமது வற்புறுத்தினார். முருகேசன் கையெழுத்திட மறுக்கவே, சமது அவருடன் வந்த ஆறுமுகம், காமராஜ் ஆகிய 3 பேர் முருகேசனை கத்தியால் குத்தியுள்ளனர். இதில, காமராஜ், ஆறுமுகம் கைது செய்யப்பட்டனர். சமது தலைமறைவானார்.
திருச்சி ஆட்சியர் நேற்று மாலை வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக National Defence Academy And Naval Academy Examination 2024 ஆகிய தேர்வுகள் வரும் செப்டம்பர் 1ஆம் தேதி திருச்சி மாவட்டத்தில் நடைபெற உள்ளது. இத்தேர்வினை மொத்தம் 469 பேர் எழுத உள்ளனர். இதற்காக திருச்சியில் 2 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.