Tiruchirappalli

News August 30, 2024

திருச்சி என்ஐடி விவகாரம்: நிர்வாகம் வருத்தம்

image

திருச்சி என்ஐடியில் படிக்கும் மாணவி ஒருவரிடம் அங்கு பணிபுரியும் ஒப்பந்த ஊழியர் அநாகரிகமான முறையில் நடந்து கொண்டுள்ளார். இதுதொடர்பாக என்ஐடி நிர்வாகம் தற்போது வருத்தம் தெரிவித்து விளக்கமளித்துள்ளது. இதில் என்ஐடி நிர்வாகம், இனி இப்படி ஒரு சம்பவங்கள் ஏதும் நிகழாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மேலும் கூடுதல் கவனத்துடன் பாதுகாப்பு அதிகாரிகள் பணிசெய்ய அறிவுறுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது.

News August 30, 2024

திருச்சி சம்பத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் கண்டனம்

image

அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் திருச்சி என்ஐடி கல்லூரியில் படிக்கும் மாணவிக்கு அங்கு பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இந்த சம்பவத்தை கேட்டு நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன் என்றும், மேலும் இதற்கு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர் கூறியுள்ளார். கமெண்ட் பண்ணுங்க

News August 30, 2024

மாணவியிடம் அத்துமீறிய நபர் கைது

image

திருச்சி என்ஐடி கல்லூரியில் மாணவியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறிய ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளதாக எஸ்.பி. வருண்குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “போராட்டம் நடத்திய மாணவர்களின் கோரிக்கைள் நிறைவேற்ற வலியுறுத்தியுள்ளனர். மாணவர்களும் தங்கள் பக்க நியாயங்களை எடுத்துரைத்தனர். உரிய முறையில் விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என எஸ்.பி. தெரிவித்தார்.

News August 30, 2024

மன்னிப்பு கேட்ட வார்டன் – போராட்டம் வாபஸ்

image

திருவெறும்பூர் என்ஐடி மையத்தில் மாணவர்கள் நடத்திய போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. விடுதி காப்பாளர் பேபி மாணவிகளிடம் மன்னிப்பு கோரியதை தொடர்ந்து மாணவர்கள் வாபஸ் பெற்றனர். திருச்சி எஸ்.பி. வருண்குமார் மாணவர்கள் விடுதி நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, பெண் ஆய்வாளர்கள், காவலர்கள் மூலம் மாணவிகளிடம் தனித்தனியாக மாணவிகளிடம் வாக்குமூலம் பெறுவதாக எஸ்.பி. உறுதியளித்தார். 

News August 30, 2024

திருச்சியில் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்

image

திருச்சி கலையரங்கம் திருமண மண்டபத்தில் செப்.6ஆம் தேதி மண்டல அளவிளான மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமானது மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்துகிறது. இதில் மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் தெரிவித்துள்ளார். 

News August 30, 2024

வார்டன் மீது புகார் அளித்தால் நடவடிக்கை – ஆட்சியர்

image

என்ஐடி கல்லூரி விடுதியில் மாணவிக்கு ஒப்பந்த ஊழியர் கதிரேசன் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், விடுதி வார்டன் மாணவி மீதே குற்றம்சாட்டி திட்டியதால் அவரை கண்டித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், விடுதியின் பெண் வார்டன் மீது மாணவிகள் புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் அறிவித்துள்ளார்.

News August 30, 2024

மாநில மகளிர் ஆணையம் விசாரணை நடத்தும் – குமாரி

image

என்ஐடி கல்லூரி மாணவிக்கு நேர்ந்த கொடூரம் குறித்து மாநில மகளிர் ஆணையம் விசாரணை நடத்தும் என மகளிர் ஆணைய தலைவர் குமாரி தனியார் தொலைக்காட்சி வாயிலாக அறிவித்துள்ளார். தனது மகளுக்கு நேர்ந்தது போன்று உணர்கிறேன். பாதிக்கப்பட்ட மாணவி வார்டன் குற்றம் சுமத்தியது அதிர்ச்சியளிக்கிறது. பெண்ணுக்கு எதிராக பெண்ணே கேள்வி கேட்பது மாற வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

News August 30, 2024

காப்பாளர்கள் மன்னிப்பு கேட்க வலியுறுத்தல்

image

என்ஐடி கல்லூரி மாணவி பாலியல் தொல்லை தொடர்பாக போராட்டம் நடந்து வரும் நிலையில் மாணவிகள் பல கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். அதில், 1, விடுதி காப்பாளர்களை மாற்ற வேண்டும். 2, அவதூறாக பேசிய 3 காப்பாளர்களும் மன்னிப்பு கேட்க வலியுறுத்தல். 3, வெளி ஊழியர்கள் பணிக்கு வரும்பாது, விடுதி காப்பாளர் உடன் இருக்க வேண்டும். மாணவி தனியாக இருக்கும் போது பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என கூறியுள்ளனர்.

News August 30, 2024

மாணவியை தரக்குறைவாக பேசிய வார்டன்

image

திருச்சி என்ஐடி மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட ஒப்பந்த ஊழியரை கண்டித்து மாணவ, மாணவிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விடுதி அறைக்கு WIFI பிரச்னையை சரிசெய்ய வந்த ஒப்பந்த ஊழியர் மாணவியிடம் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். மேலும், இப்படி ஆடை அணிந்தால், அப்படித்தான் நடக்கும் என்ற ரீதியில் வார்டன் பேசியதால் மாணவிகள் அதிருப்தியடைந்துள்ளனர்.

News August 30, 2024

மாணவியின் ஆடை குறித்து பேசிய வார்டன்

image

திருச்சி என்ஐடி கல்லூரி விடுதியில் கல்லூரி மாணவிக்கு ஒப்பந்த ஊழியர் பாலியல் தொல்லை அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், விடுதி காப்பாளர் அத்துமீறலில் ஈடுபட்ட நபரை மரியாதையாகவும், பாதிக்கப்பட்ட மாணவியை தரக்குறைவாகவும் நடத்தியதாக மாணவிகள் ஆதங்கம் தெரிவித்தனர். மேலும், காவல் நிலையத்தில் மாணவியின் ஆடை குறித்தும் வார்டன் விமர்சித்துள்ளதாக மாணவிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.

error: Content is protected !!