India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ், தேசிய ஊட்டச்சத்து மாதம் 2024 முன்னிட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் ஊட்டச்சத்து கையொப்ப இயக்கத்தினை தொடங்கி வைத்து, கண்காட்சி அரங்கினை பார்வையிட்டு அனைத்து அலுவலர்களுடன் சேர்ந்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டார். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் உட்பட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பிரபல தனியார் நிறுவனத்தில் பணிபுரிய +2 அல்லது டிகிரி படித்த பெண்கள் தேவைப்படுகிறார்கள். இதற்கு ரூ.19,629 ஊதியத்துடன் உணவு, உடை, தங்குமிடம் சலுகையாக வழங்கப்படும். மேலும் செப்டம்பர் 6 மற்றும் 7ஆம் தேதி திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறும் நேர்முக தேர்வில் அனைத்து அசல் சான்றுகளுடன் கலந்துகொள்ள அறிவுறுத்தபடுகிறது.
நடிகர் விஜய் நடித்துள்ள ‘GOAT’ திரைப்படமானது இந்தியா முழுவதும் செப்டம்பர் 5-ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் GOAT திரைப்படமானது திருச்சியில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் வெளியிடப்படும் முதல் படம் எனும் சாதனை மட்டுமில்லாமல் டிக்கெட் முன்பதிவு தொடங்கப்பட்ட இரண்டே நிமிடத்தில் 5,950 டிக்கெட்டுகளை விற்று தீர்த்து புதிய சாதனையை படைத்துள்ளது.
திருச்சி – திண்டுக்கல் மார்க்கத்தில், இனாம் குளத்தூர் பகுதியில் நேற்று மாலை, இளைஞர் ஒருவர் இறந்து கிடந்தார். இதையறிந்த ரயில்வே போலீசார் சடலத்தை மீட்டு உடற்கூறாய்விற்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தியதில் அவர் சற்றுமுன் அவ் வழியே சென்ற ஏதோ ஒரு ரயிலிலிருந்து தவறி விழுந்து இறந்திருக்கலாம் என கூறினர்.
திருச்சி ரயில்வே நிர்வாகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது: திருச்சி – வேளாங்கண்ணி சிறப்பு ரயிலானது (06866) வரும் செப்.5 (வியாழன்) முதல் செப். 7-ஆம் தேதி மற்றும் (06864, 06865) செப். 8, 9-ஆகிய தேதிகளில் இயக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் பயணிகள் இந்த ரயிலை பயன்படுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருச்சி ரயில் நிலையத்தில் வந்தே பாரத் ரயிலுக்கு நேற்று உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் பல கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திருச்சி சிவா, வளர்ந்து வரும் நகரமான திருச்சிக்கு மெட்ரோ ரயில் மிகவும் அவசியம் என்றும், இந்த தேவையை கருத்தில் கொண்டு மாநில அரசு நடவடிக்கை எடுத்திருக்கிறது என்றார்.
பஞ்சப்பூர் பகுதியில் ரூ.350 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையத்தினை அமைச்சர் நேரு இன்று ஆய்வு செய்தார். மேலும் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் சரவணன் உள்ளிட்டோர் இருந்தனர்.
திருச்சி ரயில் நிலையத்தில் வந்தே பாரத் ரயிலுக்கு நேற்று உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் பல கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திருச்சி சிவா, வளர்ந்து வரும் நகரமான திருச்சிக்கு மெட்ரோ ரயில் மிகவும் அவசியம் என்றும், இந்த தேவையை கருத்தில் கொண்டு மாநில அரசு நடவடிக்கை எடுத்திருக்கிறது என்றார்.
திருச்சி மாவட்டத்தில் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடைபெறும் National Defence Academy and Naval, Combined Services Examination தேர்வு இன்று செயின்ட் ஜேம்ஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மற்றும் தனியார் பள்ளியில் நடைபெற்றது. இந்த தேர்வினை திருச்சி மாவட்ட ஆட்சி தலைவர் பிரதீப் குமார் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
திருச்சி மாவட்ட எஸ்பி வருண் குமார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், திருச்சியில் பைக் சாகசங்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொண்டு, வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். மேலும் பொதுமக்கள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில், இருசக்கர வாகன சாகசங்கள் செய்பவர்களின் விவரங்களை, 9487464651 என்ற எண்ணிற்கு பொதுமக்கள் தகவல் அளிக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார். SHAREIT
Sorry, no posts matched your criteria.