Tiruchirappalli

News October 11, 2024

திருச்சியில் வட்டமிடும் விமானத்தால் பரபரப்பு

image

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் பல்வேறு நாடுகளில் இருந்து விமானங்கள் இயக்கப்படுகின்றன. இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் திருச்சியில் இருந்து இன்று மாலை சார்ஜா புறப்பட்ட விமானத்தில் சக்கரங்கள் உள்ளே செல்லாததால் விமானம் மீண்டும் விமான நிலையத்திலேயே தரையிறக்க முயற்சி செய்யப்பட்டது. தொழில்நுட்பக் கோளாறால் வானத்தில் வட்டமடிக்கும் விமானத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

News October 11, 2024

உறையூர் பள்ளி அருகே போதை மாத்திரை விற்றவர்கள் கைது

image

திருச்சி, உறையூரில் உள்ள தனியார் பள்ளி அருகே மாணவர்களுக்கு போதை மாத்திரைகள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி உறையூர் காவல் ஆய்வாளர் ராமராஜன் தலைமையிலான போலீசார் சந்தேகத்திற்குரிய இடங்களில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, அங்கு பள்ளி மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்பனை செய்தது உறுதியானது. இதையடுத்து அதனை விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News October 11, 2024

மண்ணச்சநல்லூர் பகுதியில் அழகிய சடலம் மீட்பு

image

மண்ணச்சநல்லூர் அத்தாணி பகுதியைச் சேர்ந்த முருகானந்தம். கூலி வேலை செய்யும் இவருக்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் 2 நாட்களுக்கு முன்பு மண்ணச்சநல்லூர் கடைவீதி பகுதிக்கு சென்று வருகிறேன் என கூறிவிட்டு சென்ற முருகானந்தம் மண்ணச்சநல்லூர் திருச்சி சாலையில் உள்ள வாய்க்கால் பகுதியில் இன்று சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து மண்ணச்சநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News October 11, 2024

கார் மோதி விபத்து – ஒருவர் பலி

image

திருச்சி ஈபி ரோடு பாரதியார் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவர் தனது இருசக்கர வாகனத்தில் சிறுகனூர் அருகே திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது புதுவையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற கார் மோதி ரமேஷ் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிறுவனூர் போலீசார் இறந்தவரின் உடலை மீட்டு வழக்குப்பதிவு செய்து கார் ஓட்டுநரை கைது செய்தனர்.

News October 10, 2024

உறையூரில் வீட்டுக்குள் பிணமாக கிடந்த மூதாட்டி

image

திருச்சி உறையூர் பகுதியைச் சேர்ந்தவர் லலிதா. கணவர்  இறந்துவிட்டதால் தனது மகன் பிரபுவுடன் வசித்து வருகிறார். பிரபுவும், அவரது மனைவியும் திருப்பதிக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு லலிதாவுக்கு பிரபு போன் செய்த போது அவர் எடுக்காததால் பக்கத்து வீட்டுக்காரர்கள் போய் பார்த்தபோது லலிதா பிணமாக கிடந்ததுள்ளார். பிரபு அளித்த புகாரின் பேரில் உறையூர் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News October 10, 2024

டிராக்டர் கவிழ்ந்து விபத்து: ஒருவர் உயிரிழப்பு

image

புதுக்கோட்டை மாவட்டம் அகரபட்டியைச் சேர்ந்த தனபால் என்பவர் நேற்று மாலை வயல் உழவுக்கு சென்றபோது எதிர்பாராத விதமாக டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் தனபால் டிராக்டருக்குள் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். அதனை தொடர்ந்து அவரது உடல் மணப்பாறை அரசு மருத்துவமனையில் உடற்கூராய்விற்காக வைக்கப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

News October 10, 2024

விமான நிலைய ஊழியர்கள் மறியல் போராட்டம்

image

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செய்கின்றனர். இவர்களுக்கு இணையாக ஊழியர்களும் வந்து செல்கின்றனர். அப்படி வந்து செல்லும் வாகனங்களுக்கு வாகனங்களுக்கு சுங்கவரி என்ற பெயரில் பணம் வசூலிக்கப்படுகிறது. ஊழியர்கள் வரும் இருசக்கர வாகனங்களுக்கு சுங்கவரி வசூலிப்பதை கண்டித்து விமான நிலைய ஊழியர்கள் இருசக்கர வாகனங்களுடன் சுங்க சாவடியை மறித்து மறியல் போராட்டம்.

News October 10, 2024

திருச்சி மாவட்டத்தில் அரசு பணி

image

திருச்சி மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவு சங்கங்களால் நடத்தப்படும் நியாய விலை கடைகளில் உள்ள விற்பனையாளர் (Salesman), கட்டுநர்கள் (Packer) ஆகிய 96 பணியிடங்கள் நேரடி நியமனம். இதற்கான விண்ணப்பங்கள் தகுந்த விண்ணப்பதாரர்களிடம் இருந்து http://www.drbtry.in என்ற இணையதளம் வழியாக ஆன்லைன் மூலம் நவ.7ஆம் தேதி மாலை 5.45 மணி வரை விண்ணப்பிக்கலாம். ஷேர் செய்யவும்.

News October 10, 2024

குற்றவாளிகளின் வீட்டை அடித்து நொறுக்கியதால் பரபரப்பு

image

திருவெறும்பூர் அருகே பனையக்குறிச்சியை  சேர்ந்தவர் பிரபல ரவுடி சுந்தர்ராஜ். இவர் கடந்த 12ஆம் தேதி தலை துண்டித்து படு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைதான குற்றவாளிகளின் வீட்டை அடித்து நொறுக்கிய சுந்தர்ராஜின் சகோதரர் மற்றும் உறவினர்கள் உட்பட 7 பேர் மீது திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதோடு சின்ராஜ் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News October 9, 2024

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு ஊக்கத்தொகை

image

திருச்சி வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 30.9.2024 அன்றைய தேதியில் 5 வருடம் முடிந்த, முறையாக பள்ளியில் 9ஆம் வகுப்பு பயின்று பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாத மற்றும் தேர்ச்சி பெற்ற நபர்கள் ஊக்கத்தொகை பெற மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார். ஷேர் செய்யவும்

error: Content is protected !!