Tiruchirappalli

News September 12, 2024

திருச்சியில் 4 காவலர்கள் ஆயுதப்படைக்கு மாற்றம்

image

திருச்சி ஏர்போர்ட் பகுதியில் அடுக்கும் மாடி குடியிருப்பு ஒன்றில், இளம் பெண்களை வைத்து விபச்சாரம் செய்து வந்த கும்பலுடன் தொடர்பில் இருந்ததோடு மட்டுமல்லாமல் மாத சம்பளம் போல் மாமூல் வாங்கிய விபச்சாரத் தடுப்பு பிரிவு எஸ்ஐ கீதா, சிறப்பு எஸ்ஐ சகாதேவன், தனிப்படை காவலர்கள் பிரதீப், இளுஸ்டின் உள்ளிட்ட நான்கு காவலர்களை ஆயுதப் படைக்கு மாற்றி காவல் ஆணையர் ந.காமினி இன்று உத்தரவு பிறப்பித்தார்.

News September 12, 2024

தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்த திருச்சி எம்பி

image

தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை அதிகரிக்கும் வகையில் அமெரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 10க்கும் மேற்பட்ட நிறுவனங்களுடன் முதல்வர் கையெழுத்திட்டுள்ளார். இந்நிலையில் ஜாபில் என்ற நிறுவனம் ரூ.2000 கோடி முதலீட்டில் திருச்சியில் தொழில் தொடங்க உள்ளதாக முதல்வர் அறிவித்துள்ளார். இதற்கு திருச்சி எம்பி என்ற முறையில் முதல்வருக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்வதாக அவர் கூறியுள்ளார்.

News September 12, 2024

மணப்பாறை அருகே விபத்தில் ஒருவர் பலி

image

மணப்பாறை அடுத்த மேலபூதக்குடியை சேர்ந்த இந்திரன், நேற்று இரவு தனது டூவீலரில் மணப்பாறை நோக்கி சென்று கொண்டிருந்த போது நிலைதடுமாறி கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் இந்திரனுக்கு பலத்த காயம் ஏற்பட்டு அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் அவர் உடலை மீட்ட போலீசார் உடற்கூறாய்விற்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News September 12, 2024

திருச்சி விமான நிலையத்தில் முறைகேடு செய்தவர் கைது

image

இலங்கைத் தலைநகா் கொழும்புவிலிருந்து திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு ஸ்ரீலங்கன் ஏா்லைன்ஸ் மூலம் நேற்று வந்த பெரம்பலூரை சேர்ந்த ஜெயக்குமாா் என்பவா் தனது கடவுச்சீட்டில் உள்ள விவரங்களை முறைகேடாக மாற்றியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை அதிகாரிகள் போலீசாரிடம் ஒப்படைத்தனா். இதுதொடா்பாக விமான நிலைய போலீசார் வழக்குப் பதிந்து அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News September 12, 2024

திருச்சிக்கு 2 புதிய திட்டங்கள் தொடக்கம்

image

திருச்சி இலந்தைப்பட்டியில் ஒலிம்பிக் அகாடமி, 24 விளையாட்டுகளுக்கு பயிற்சி பெறும் வகையில் அமைய உள்ளது. இதேபோல் கிரிக்கெட் விளையாடுவதற்கு மைதானமும் அமைக்கப்பட உள்ளது. மேலும் பஞ்சபூர் பகுதியில் டைட்டில் பார்க் தொடர்பாக டெண்டர் பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில், அந்த பணிகள் அனைத்தும் தொடங்கப்பட உள்ளது. இதற்காக தமிழக அரசுசார்பில் ரூ.600 கோடி நிதி ஒதுக்கிடப்பட்டுள்ளது. ஷேர் செய்யவும்

News September 12, 2024

திருச்சியில் 1 கிலோ கஞ்சா பறிமுதல்

image

திருச்சி மாநகர போலீசாருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலின் அடிப்படையில், எடமலைப்பட்டிபுதூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ராம்ஜி நகர், மில்காலனி பகுதியில் கண்டோன்மென்ட் உதவி ஆணையர் நடத்திய அதிரடி சோதனையில், பூபதி என்ற நபரிடமிருந்து ரூ.12,000 மதிப்புள்ள 1.250 கிலோ எடை கொண்ட அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதில் பூபதியை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News September 11, 2024

நான் முதல்வர் நிகழ்ச்சியில் உரையாற்றிய ஆட்சியர்

image

திருச்சி தனியார் கல்லூரியில் இன்று நடைபெற்ற நான் முதல்வன் ‘உயர்வுக்கு படி’ நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் கலந்து கொண்டு மாணவர்களுக்கு சேர்க்கை ஆணைகளை வழங்கி உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ண பிரியா, வருவாய் கோட்டாட்சியர் அருள் உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

News September 11, 2024

திருச்சி அருகே வாலிபர் மீது பாய்ந்த போக்சோ வழக்கு

image

லால்குடியைச் சேர்ந்த இளம்பெண் விடுதியில் தங்கி படித்து வருகிறார். அதேபோல் சிறுமருதூரை சேர்ந்த சிலம்பரசன். தனக்கு திருமணமானதை மறைத்து மாணவியுடன் பழகி வந்துள்ளார். இந்நிலையில் வார விடுமுறைக்காக வீட்டிற்கு வந்த போது மாணவியை தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று நண்பரின் வீட்டில் வைத்து பாலியல் வன்புணர்வுசெய்துள்ளார். இதையடுத்து லால்குடி போலீசார் சிலம்பரசனை போக்சோவில் கைது செய்தனர்.

News September 11, 2024

திருச்சியில் 756 விநாயகர் சிலைகள் கரைப்பு

image

திருச்சி மாவட்டம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு 917 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. அந்த விநாயகர் சிலைகளில் இதுவரை 756 சிலைகள் இதுவரை கரைக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று 110 சிலைகள் கரைக்கப்பட உள்ளன. மேலும் 51 சிலைகள் இன்னும் கரைக்கப்பட வேண்டி உள்ளது என காவல்துறை இன்று அறிவித்துள்ளது.

News September 11, 2024

இம்மானுவேல் சேகரன் நினைவு தினம்: அமைச்சர் மரியாதை

image

விடுதலைப் போராட்ட வீரர் இமானுவேல் சேகரனார் நினைவு தினத்தை ஒட்டி திருச்சியில் இன்று அமைச்சர் அன்பில் மகேஷ் அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். திமுக திருச்சி தெற்கு மாவட்டக் கழகத்தின் சார்பாக நடந்த இந்த நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!