India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருச்சி தேவதானம் பகுதியில் ஊர் நாட்டாமையும், திமுக பிரமுகருமான பிரித்திவிராஜ் என்பவரை நேற்று அடையாளம் தெரியாத சில நபர்கள் வெட்டி படுகொலை செய்தனர். இந்த படுகொலைக்கு அண்ணன் ரமேஷ் தம்பி பிரித்திவிராஜுக்கும் ஏற்பட்ட சொத்து பிரச்சனை என காவல்துறை வட்டாரத்தில் இருந்து அறியப்படுகிறது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2 தேர்வை திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 33 ஆயிரத்து 108 பேர் விண்ணப்பித்திருந்தனர். இந்நிலையில், இன்று தேர்வு எழுத 24,220 பேர் வருகை தந்தனர்.மேலும் 8888 பேர் தேர்வு எழுத வரவில்லை. அதாவது,100 சதவீதத்தில் 73.15 பேர் வருகை தந்துள்ளனர்.மீதமுள்ள 26.85 பேர் தேர்வு எழுத வரவில்லை.
திருச்சியில் சென்டர் ஸ்கொயர் சேஸ் அகாடமி நடத்தும் மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டி திருச்சி விமான நிலையம் மொரைஸ் சிட்டி பகுதியில் நாளை நடைபெற உள்ளது. இதில் 7,9,12,15, மற்றும் 25 வயது உள்ள ஆண் பெண் இருவரும் பங்கேற்க அனுமதி உண்டு. போட்டியில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் இன்று இரவு 9 மணிக்குள் 9994462728 என்ற எண்ணை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-2 தேர்வானது தற்போது, திருச்சி மாவட்டத்தில் வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் நடைபெற்று வருகிறது. இதனை திருச்சி மாவட்ட ஆட்சி தலைவர் பிரதீப் குமார் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் மாணவர்களிடம் பதட்டமில்லாமலும், பொறுமையாகவும் தேர்வை கையாள அறிவுரை வழங்கினார்.
திருச்சி சர்வதேச விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூருக்கு ஏர்லைன்ஸ் விமானத்தில் புறப்பட இருந்த திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த ராமநாதன் என்பவரும், அதேபோல் மஸ்கட்டில் இருந்து திருச்சி வந்த தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த மோகன்தாஸ் என்பவரும் போலி பாஸ்போர்ட்டில் பயணம் செய்தது தெரிய வந்தது. இதையடுத்து இமிகிரேஷன் அதிகாரிகள் இருவரையும் கைது செய்து ஏர்போர்ட் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
திருச்சி தில்லை நகர் பத்தாவது குறுக்குத் தெருவில், மாநகராட்சி ஆணையர் சரவணன் வீட்டு அருகே இருக்கும் எஸ்பிஐ ஏடிஎம் மையத்தில் இயந்திரத்தை உடைத்து பணத்தை திருட முயற்சி செய்து பலன் அளிக்காததால் அப்படியே விட்டுச் சென்ற சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தில் 2 இளம் சிறார்கள் ஈடுபட்டது ஏடிஎம் மைய சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
திருவெறும்பூரை சேர்ந்த பிரபல ரவுடி காக்கா சுந்தர்ராஜ் கள்ளக்காதல் விவகாரத்தில் நேற்று தலை துண்டித்துக் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக எஸ்.பி வருண்குமாரின் தீவிர விசாரணையில், கள்ளக்காதலி பரிமளாவின் உறவினர்களான கணேசமூர்த்தி, மதி, வடிவேல் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய பரிமளாவின் மகன் மாரிமுத்து என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
திருச்சி மாவட்டத்தில் குரூப்-2 தேர்வினை இன்று பல்லாயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் எழுதி வருகின்றனர். இந்நிலையில் பொன்மலைப்பட்டி பகுதியில் உள்ள ஒரு மையத்தில் தந்தை இளங்கோவனம் மற்றும் மகள் மதுபாலா ஆகியோர் ஒன்றாக தேர்வு எழுதுகின்றனர். மேலும் இளங்கோவன் 118 முறை குரூப்-2 தேர்வில் பங்கேற்றுள்ளதும், இளங்கோவன் தனியார் பள்ளி ஆசிரியர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
திருச்சி விதை ஆய்வு இயக்குனர் ராஜேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், விவசாயிகள் நெல் பயிர்களுக்கான விதைகள் வாங்கும் போது விதைச்சான்று, வழங்கப்பட்ட, விதை விற்பனை உரிமம் பெற்ற நிலையங்களில் மட்டுமே வாங்க வேண்டும், மேலும் பலகையில் விதை நிலை, விற்பனை விலை ஆகியவை குறிப்பிட வேண்டும், வியாபாரிகள் காலாவதியான விதைகளை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
திருச்சி வீட்டு வசதி பிரிவிற்கு உட்பட்ட நவல்பட்டு, வாழவந்தான் கோட்டை, முசிறி, துறையூர், மணப்பாறை ஆகிய பகுதிகளில் வீடு, மனைகள் ஒதுக்கீடு பெற்ற ஒதுக்கீடுதாரர்கள் உரிய விதிகளின்படி தொகை திருப்பி செலுத்த முன் வரவில்லை. அதனால் வீட்டு வசதி பிரிவு அலுவலகத்திற்கு நேரில் சென்று நிலவைத் தொகையை செலுத்தி கிரைய பத்திரம் பெற்றுக் கொள்ள மாவட்ட ஆட்சியர் நேற்று தெரிவித்துள்ளார். ஷேர் செய்யவும்
Sorry, no posts matched your criteria.