India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருச்சியில் உள்ள 4 நட்சத்திர ஹோட்டல்களுக்கு இன்று மர்ம நபர்கள் ஈமெயில் மூலம் ஒரு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளனர். அதில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டல் விடுத்துள்ளனர். தொடர்ந்து இந்த மாதத்தில் மட்டும் 4ஆவது முறையாக ஹோட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து கண்டோன்மென்ட் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
திருச்சி தில்லைநகர் அண்டகுண்டானை சேர்ந்த இசார் அலியின் மொபைல் போனை சதாம் உசேன் என்பவர் திருடி தலைமறைவாகி உள்ளார். அதனை தொடர்ந்து இசார் அலி, சதாம் உசேனை தேடி வந்த நிலையில், நேற்று சதாம் உசேனை சந்தித்த இசார் அலி மொபைல் போனை கேட்ட போது ஏற்பட்ட தகராறில் இசார் அலி சதாம் உசேனை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மருதாண்டா குறிச்சி பகுதியில் இன்று காலை 5மணியில் இருந்து இடியுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அப்பகுதியில் பிரேக் டவுன் ஏற்ப்பட்டுள்ளது. பல முறை முயன்றும் பவர் நிக்கவில்லை. இதனால் காலையில் இருந்து அப்பகுதியினர் மின்சாரம் இல்லாமல் அவதி அடைந்து வருகின்றனர். மின் பழுதை மின்சார ஊழியர்கள் சரிசெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
திருச்சியில் வானில் வட்டமடித்த விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. 141 உயிர்களை காப்பாற்றிய விமானி டேனியல் பெலிசோவுக்கு அதிகாரிகள் மற்றும் பயணிகள் பெரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இரண்டு மணி நேரமாக நடைபெற்ற போராட்டம் முடிவுக்கு வந்த நிலையில் பயணிகளும் அதிகாரிகளும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் பல்வேறு நாடுகளில் இருந்து விமானங்கள் இயக்கப்படுகின்றன. இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் திருச்சியில் இருந்து இன்று மாலை சார்ஜா புறப்பட்ட விமானத்தில் சக்கரங்கள் உள்ளே செல்லாததால் விமானம் மீண்டும் விமான நிலையத்திலேயே தரையிறக்க முயற்சி செய்யப்பட்டது. தொழில்நுட்பக் கோளாறால் வானத்தில் வட்டமடிக்கும் விமானத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி, உறையூரில் உள்ள தனியார் பள்ளி அருகே மாணவர்களுக்கு போதை மாத்திரைகள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி உறையூர் காவல் ஆய்வாளர் ராமராஜன் தலைமையிலான போலீசார் சந்தேகத்திற்குரிய இடங்களில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, அங்கு பள்ளி மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்பனை செய்தது உறுதியானது. இதையடுத்து அதனை விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மண்ணச்சநல்லூர் அத்தாணி பகுதியைச் சேர்ந்த முருகானந்தம். கூலி வேலை செய்யும் இவருக்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் 2 நாட்களுக்கு முன்பு மண்ணச்சநல்லூர் கடைவீதி பகுதிக்கு சென்று வருகிறேன் என கூறிவிட்டு சென்ற முருகானந்தம் மண்ணச்சநல்லூர் திருச்சி சாலையில் உள்ள வாய்க்கால் பகுதியில் இன்று சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து மண்ணச்சநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி ஈபி ரோடு பாரதியார் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவர் தனது இருசக்கர வாகனத்தில் சிறுகனூர் அருகே திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது புதுவையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற கார் மோதி ரமேஷ் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிறுவனூர் போலீசார் இறந்தவரின் உடலை மீட்டு வழக்குப்பதிவு செய்து கார் ஓட்டுநரை கைது செய்தனர்.
திருச்சி உறையூர் பகுதியைச் சேர்ந்தவர் லலிதா. கணவர் இறந்துவிட்டதால் தனது மகன் பிரபுவுடன் வசித்து வருகிறார். பிரபுவும், அவரது மனைவியும் திருப்பதிக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு லலிதாவுக்கு பிரபு போன் செய்த போது அவர் எடுக்காததால் பக்கத்து வீட்டுக்காரர்கள் போய் பார்த்தபோது லலிதா பிணமாக கிடந்ததுள்ளார். பிரபு அளித்த புகாரின் பேரில் உறையூர் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் அகரபட்டியைச் சேர்ந்த தனபால் என்பவர் நேற்று மாலை வயல் உழவுக்கு சென்றபோது எதிர்பாராத விதமாக டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் தனபால் டிராக்டருக்குள் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். அதனை தொடர்ந்து அவரது உடல் மணப்பாறை அரசு மருத்துவமனையில் உடற்கூராய்விற்காக வைக்கப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Sorry, no posts matched your criteria.