Tiruchirappalli

News October 17, 2024

திருச்சி சிறுமி உலக சாதனை

image

அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு திருநெல்வேலியில் நடைபெற்ற ஸ்கேட்டிங் போட்டியில் கலந்து கொண்ட தொட்டியத்தைச் சேர்ந்த மூன்றரை வயது சிறுமி கேடன்ஸ் மார்சியா 5 கிலோ மீட்டர் தூரம் பயணித்து யுனிகோ புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் என்ற உலக சாதனை படைத்தார். அந்த சிறுமிக்கு தொட்டியம் பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

News October 17, 2024

திருச்சியில் மீண்டும் விமானம் பழுது

image

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று இரவு பழுதாகி, 8 மணி நேரமாக ஓடுதளத்தில் நின்ற, சார்ஜா செல்லக்கூடிய விமானத்திற்கு மாற்றாக, திருவனந்தபுரத்திலிருந்து இன்று அதிகாலை, 2.50 மணிக்கு விமானம் வந்தது. இதன் மூலமாக, 155 பயணிகள் இன்று அதிகாலை, 3 மணிக்கு சார்ஜாவிற்கு புறப்பட்டு சென்றனர். இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

News October 17, 2024

திருச்சியில் உதவி எண்கள் அறிவிப்பு

image

திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், பருவ மழையின் காரணமாக, பாதிக்கப்படும் பொதுமக்கள் தங்களுக்கு ஏதாவது உதவிகள் தேவைப்பட்டாலோ அல்லது தகவல் ஏதும் தெரிவிக்க நினைத்தாலோ காவல் கட்டுப்பாட்டு அறை அலுவலக எண் 0431-2418070 அல்லது காவல் கட்டுப்பாட்டு அறை வாட்ஸ் அப் 9384039205 என்ற எண்களில் தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களுக்கு தெரிவித்துள்ளார். ஷேர் செய்யவும்

News October 16, 2024

திருச்சி எஸ்.பி அலுவலகம் முற்றுகை

image

தேவேந்திரகுல மக்கள் இயக்கம் அமைப்பின் மாநிலத் தலைவர் குமுளி ராஜ்குமார் என்பவரை பரமக்குடியில் இருந்து திருச்சி போலீசார் இன்று மதியம் குழைத்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் தற்போது வரை அவரைப் பற்றி எந்த தகவலும் குடும்பத்தினருக்கு போலீசார் தெரிவிக்கவில்லை என்று கூறி சுமார் 200க்கும் மேற்பட்டோர் திருச்சி எஸ்.பி. அலுவலகத்தில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

News October 16, 2024

திருச்சி மாவட்ட எஸ்பி அதிரடி அறிவிப்பு

image

திருச்சி மாவட்ட எஸ்பி வருண்குமார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், திருச்சி மாநகரை சுற்றி பொது மக்களிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பில் ஈடுபடுபவர்கள் பற்றிய தகவல்களை பொதுமக்கள் எந்தவித தயக்கமும் இன்றி, பயமும் இன்றி 94 87 46 46 51 என்ற எண்ணிற்கு புகார் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் புகார் அளிப்பவர்களின் விவரங்கள் ரகசியமாக வைத்துக் கொள்ளப்படும் என்றார்.

News October 16, 2024

திருச்சியில் உதவி எண்கள் அறிவிப்பு

image

திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், பருவ மழையின் காரணமாக, பாதிக்கப்படும் பொதுமக்கள் தங்களுக்கு ஏதாவது உதவிகள் தேவைப்பட்டாலோ அல்லது தகவல் ஏதும் தெரிவிக்க நினைத்தாலோ காவல் கட்டுப்பாட்டு அறை அலுவலக எண் 0431-2418070 அல்லது காவல் கட்டுப்பாட்டு அறை வாட்ஸ் அப் என் 9384039205 என்ற உதவி எண்களில் தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களுக்கு தெரிவித்துள்ளார்.

News October 16, 2024

திருச்சி அருகே கல்லூரி மாணவர் தற்கொலை

image

திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலை சிறுகனூர் அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.இ. 3ஆம் ஆண்டு படித்து வந்த அழகுமணிகண்டனுக்கும், அதே கல்லூரியில் 3ஆம் ஆண்டு படித்து வரும் மாணவி ஒருவருக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது. இந்த நட்பு காலப்போக்கில் காதலாக மாறியது. இந்நிலையில் அழகு மணிகண்டனின் சந்திப்பை மாணவி தவிர்த்ததால் இன்று மாணவர் கல்லூரி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

News October 16, 2024

பொதுவிநியோகத் திட்ட குறைதீா்க்கும் முகாம்

image

திருச்சி மாவட்டத்தில் உள்ள 11 வட்டங்களிலும் வரும் சனிக்கிழமை அன்று பொதுவிநியோகத் திட்ட சிறப்பு குறைதீா்க்கும் முகாம் நடைபெறுகிறது. இந்த முகாம் காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1 மணி வரை அந்தந்த வட்ட கண்காணிப்பு அலுவலா்கள் தலைமையில் நடைபெறும். இக்கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது புகாா்களை தெரிவிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளார். ஷேர் செய்யவும்

News October 16, 2024

திருச்சி வாலிபருக்கு 30 ஆண்டு சிறை தண்டனை

image

ஸ்ரீரங்கத்தை சேர்ந்தவர் பிரதீப். இவர் 2021ஆம் ஆண்டு பெரம்பலூர் அருகே புதுக்குறிச்சியில் தனது பாட்டி வீட்டில் தங்கி இருந்த போது அதே பகுதியை சேர்ந்த 4வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில்
பெரம்பலூர் நீதிமன்றம் நேற்று பிரதீப்புக்கு 30ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், 1லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பளித்ததை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

News October 15, 2024

மாற்றுத்திறனாளிகளுக்கு ஓர் அரிய வாய்ப்பு

image

முதலமைச்சரின் ஆராய்ச்சி உதவித்தொகைதிட்டம் ஆராய்ச்சி படிப்பு மேற்கொள்ளும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்களுக்கு ரூ.1லட்சம் வழங்கப்பட உள்ளது.இதில் திருச்சியில் ஆராய்ச்சி படிப்பு மேற்கொள்ளும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் தங்களின் அடையாள அட்டை,ஆதார் அட்டை நகல்,வங்கி கணக்கு புத்தகம்,ஆராய்ச்சி படிப்புக்கான ஆய்வறிக்கை ஆகியவற்றை மாற்றுத்திறனாளி அலுவலகத்தில் சமர்ப்பிக்க மாவட்ட ஆட்சியர் இன்று தெரிவித்தார்.

error: Content is protected !!