India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் நோக்கி அதிவேகமாக சென்ற 2 தனியார் பேருந்துகள் விபத்தில் சிக்கியதில் 20 பேர் காயம் அடைந்தனர். முடிகொண்டான் பகுதியில் சென்று கொணடு இருக்கும் போது, அதிகளவு பயணிகளை ஏற்ற வேண்டும் என்பதற்காக 2 பேருந்துகள் போட்டி போட்டுக் கொண்டு சென்றது. இதில் ஒரு பேருந்து, அப்பகுதியில் உள்ள வயலில் கவிழ்ந்தது. இதில் 20 பேர் காயம் அடைந்துள்ளனர்.
தமிழக பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக திருவாரூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இன்று(மே 18) காலை 10 மணி வரை மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் சில இடங்களில் மழைநீர் தேங்கலாம், போக்குவரத்து பாதிக்கப்படலாம் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திருத்துறைப்பூண்டி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் செந்தில், கச்சனம் பகுதியில் எள் சாகுபடி பயிரை பார்வையிட்டு ஆய்வு செய்தபோது கூறுகையில், தற்சமயம் பெய்ந்து வரும் மழையால் நீர் தேங்கியுள்ள இடங்களில் உடனடியாக வடிய வைத்து பருத்தி, எள் பயிர் வரக்கூடிய வேர் அழுகல், வாடல் போன்ற நோய்களை கட்டுப்படுத்த சூடோமோனாஸ் மற்றும் டிரைக்கோடெர்மாவிரிடி போன்ற பூஞ்சான எதிரி உயிரி பயன்படுத்தலாம் என்றார்
உதவி ஆய்வாளர் முதல் கூடுதல் உதவி கண்காணிப்பாளர் வரை அனைத்து அதிகாரிகளுக்கான புதிய சட்டங்கள் குறித்த 5 நாட்கள் பயிற்சி வகுப்பு நிறைவு விழா இன்று திருவாரூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது. நாகப்பட்டினம் கோவிந்தராஜ் நன்னிலம் வீரமணி, ஆகியோர் புதிய சட்டங்கள் குறித்து விளக்கமளித்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், வகுப்பினை பார்வையிட்டு சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார்.
தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மன்னார்குடியில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன், கர்நாடக அரசின் மேகதாது தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மே.21 அன்று திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், மயிலாடுதுறை, கடலூர் நகரங்களில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் தீர்மான நகலை தீயிட்டு எரித்து போராட உள்ளோம் என்று கூறினார்.
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி சேர்ந்த மாணவி துர்கா தேவி 10 ஆம் வகுப்பு தேர்வில் 492 மதிப்பெண் எடுத்து மாவட்டத்திலே இரண்டாம் இடம் பெற்றுள்ளார். அவரது இல்லத்திற்கு மின்சார இணைப்பு இல்லை என்ற அறிந்தவுடன் முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி மின் இணைப்பு வழங்கப்பட்டது. இந்த நிலையில், தமிழக முதல்வருக்கும், அரசுக்கும் மாணவி துர்காதேவி நன்றி தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது கோதண்டராம கோயில். 108 வைணவத் தலங்களுள் ஒன்றான இக்கோயில் ராம சேத்திரங்களில் ஒன்றாகும். திராவிடக் கட்டடக்கலைகளை பிரதிபலிக்கும் இத்தலம், புராணக்கதைகளைக் கொண்டு விளங்குகிறது. இக்கோயில், ராமர் கோயில்களுள் சிறப்பாக கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. அனுமன் சன்னதிக்கு பின்புறம் தீர்த்தக் குளம் அமைந்துள்ளது. ராமர் கோதண்ட ரூபத்தில் காட்சியளிக்கிறார்.
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி சேர்ந்த மாணவி துர்கா தேவி பத்தாம் வகுப்பு தேர்வில் 492 மதிப்பெண் எடுத்து மாவட்டத்திலே இரண்டாம் இடம் பெற்றுள்ளார். அவரது இல்லத்திற்கு மின்சார இணைப்பு இல்லை என்ற அறிந்தவுடன் முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே. கலைவாணன் உதவியோடு உடனடியாக மின் இணைப்பு மின் இணைப்பு வழங்கப்பட்டது.
திருவாரூர் மாவட்டத்தில் இன்று (மே.17) மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் திருவாரூரில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழைப்பொழிவு பதிவாககூடும் எனத் தெரிவித்துள்ளது. இன்று காலை முதலே தமிழகத்தின் பல இடங்களில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
திருவாரூர் :இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில் நிறுவப்பட்டுள்ள ஸ்நேகா அறக்கட்டளை சார்பில் திருவாரூரில் இயங்கும் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய பயிற்சியாளர் மற்றும் அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் வரும் 31.05.24 ஆகும்.மேலும் விபரங்களுக்கு இந்த <
Sorry, no posts matched your criteria.